Wednesday, June 28, 2017

சித்தர் பாடல்கள்

சிவவாக்கிய சித்தர் பாடல் 

மூலநாடி தன்னிலே முளைதேழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்ம ஆகலாம்
ஆலமுண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே

மெய்ஞானம் உணர்ந்து, மெய் பொருளை தம்முள்ளே கண்ட பிறகு, தம்முடைய ஆன்ம ஸ்வரூபமாகவே ஆகி விடுகின்றார்கள். மனம் என்னும் ஒன்று இல்லாமல், சிறிய குழந்தை போல் அவர்கள் ஆகி விடுவார்கள். அந்த பரப்ரும்ம வஸ்து, மூலாதாரத்தில் இருந்து கிளம்பி மூல நாடி (சுஷும்னா நாடி) வழியாக ஸஹ்ராரத்தை அடையும் ஒளிமயமான வஸ்து ! அதனை உணர்ந்தால் பிரும்மானந்தத்தில் குழந்தையாக இருக்கலாம் - இது பார்வதி பரமேஸ்வரர் மீது ஆணை என்று அறுதியிட்டுக் கூறுகின்றார் நம் சிவவாக்கியர்.

No comments:

Post a Comment