Thursday, June 29, 2017

ஸ்ரீமணியின் சின்ன சின்ன கவிதைகள்


வாரக்கடைசி நகைச்சுவை கவிதை

வியாழன் வெள்ளி சனிக் கிழமை வந்து விட்டால் போதுமே!
தண்ணி தண்ணி தண்ணி என்று ஓடுகின்ற மாந்தரே!
மப்பும் வாயில் நாற்றம் ரெண்டும் தீர்ந்து விடும் முன்னாலே!
ஐயோ பாவம் ஐயோ பாவம் வாரம் முடிந்து போகுமே!
திங்கக்கிழமை வந்து விட்டால் வேலைக்குத் தான் போகணும் !


இரைச்சியின் இழிவு 

ஆடு மாடு கோழி பன்றி நண்டும்  மீனும் காடையும்
போடு போடு போடு என்று ருசித்திருக்கும் யாவரும்
காடு காடு காடு என்று காலன் கொண்டு போன பின்
தேடு தேடு தேடு என்று தேடித் பார்த்த பின்னரும்
பாடு பட்டு வளர்த்த உடலில்  ஓர் எலும்பும் இல்லையே!


கள்ளும் காமமும் கோபமும் 

கள்ளதனைக் குடித்து விட்டு கவிழ்ந்துறங்கும் ஒரு சிலர்
கள்  குடித்து மப்புடனே கூச்சல் போடும்  ஒரு சிலர்
கள் அருந்தி மாக்களை போல் ஊரைக்கூட்டும் ஒரு சிலர்
கள் மருத்துக் காமமுற்று தவறு செய்யும் ஒரு சிலர்

கள்ளும் காமம் இரண்டும் அற்றுக் கோபம் கொள்வர் ஒரு சிலர்
கள்ளும் காமம் கோபம் நம்மை மதியிழக்கச் செய்யுமே
கண்ணும் காதும் ஐம்புலனும் அடக்கி இருத்தல் உத்தமம்!
கண்ணை(அஹ)  திறந்து தம்மை நோக்கி மெய்யுணர்தல் உத்தமம்!


அன்றைக்கும் இன்றைக்கும் பார்ப்பன திருமணங்கள்...

கன்னி பருவம் உள்ள பெண்ணை மணமும் முடிக்க வேண்டுமே
கன்னி அவளை தானமாக தந்தை தானும் தருவனே

தந்தை மடியில் இருந்து கணவன் கையை தானும் பிடிப்பதும்
தாயும் நீரை வார்க்க  வேதம் தன்னை  ஓதி மகிழ்வரே

தந்தை வழியில் தலைமுறைகள் மூன்று பெயரை சொல்லியே
தானமாக தந்திடுவான் தந்தை  வதுவை வரனுக்கே!

கண்ணீர் மல்க தந்தை தாயும் பெற்ற மகளை  தானுமே
தண்ணீர் வார்த்து தானம் செய்யும் தவமே திருக்கல்யாணம்

ஏழடியும் எடுத்து அம்மி மிதித்து நிற்கும் வேலையில்
காலடியில் மெட்டி மாட்ட நாத்தனாரும் வந்தனள்

இடுப்பில் தர்ப்பை  புல்லை   கட்டி கொண்டு சபதம் செய்தனள்
பதிவிருதையாய்   இந்த உலகம் மீதினிலே வாழ்ந்தனள்!

வலமும் வந்து தீயை சுற்றி கணவன் கையில்   கை வைத்து
வளமும் வாழ்வும் வேண்டி வேள்வி தீயில் பொறியை போட்டனள்

வேள்வி தீயில் அவியும் இட்டு வேள்விகளும் செய்துமே
இல்லறத்தை துவக்கினார்கள் இன்பமாக பார்ப்பனர்!

தீயும் இல்லை வேள்வி இல்லை பார்ப்பனீயம் ஒழிந்ததே!
கள்ளும் கூற்றும் ஆட்டமாகி விட்டதே நம் திருமணம்!

அப்பன் பாட்டன் கொள்ளு   பாட்டன் எல்லாருமே நரகத்தில்
அம்மா பாட்டி  கொள்ளு பாட்டி   அவர்களையும்  நரகத்தில்

ஆழ்த்தி விட்டு தூய வேள்வி சடங்கருத்து கொண்டுமே
போகி விட்டார்  மதியிழந்த பார்ப்பனர் தம் பெண்களும்

No comments:

Post a Comment