Thursday, June 30, 2016

ஆச்சாரக் கோவையில் முத்துக்கள்

ஆச்சாரக் கோவை என்னும் இந்த நூல்,  பெருவாயின்முள்ளியார்  என்பவரால் இயற்றப் பட்டது. நம்முடைய வாழ்க்கையில்   கடை பிடிக்க வேண்டிய ஆசாரங்களை மிகவும் அழகாக  எழுதி  இருக்கிறார்.ஆச்சாரக்கோவை என்றால் - ஆச்சாரங்களின் மாலை என்று பொருள் படும்.

ஆசார வித்து 

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து

இங்கு அச்சாரம் அல்லது நல்லொழுக்கத்துக்கு   வித்து என்ன என்பதை மிகவும் அழகாகக்   குறிப்பிடுகின்றார். அதாவது -

  1. நன்றி மறவாமை, 
  2. வீரம் உடைமை,
  3. இனிமையான பேச்சு,
  4. எந்த உயிர்களுக்கும்  ஹிம்சை செய்யாமல் இருத்தல், 
  5. கல்வி,
  6. அறிவு உடன்  இருத்தல், 
  7. நல்ல மக்களோடு சேர்தல், 
  8. ஊரோடு சேர்ந்து வாழ்தல் 

வட மொழியிலே ஆச்சாரம் என்றால் ஒழுக்கம் என்று பொருள் படும்.

ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்

பொதுவாக ஒரு செயலை செய்தல் வரும் நற்பயன்களை பின்னால் கூறுவது வழக்கம். ஆனால் இந்த நூலிலே முதலிலேயே சொல்லி விட்டார் என்றால், ஒழுக்கத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் என்று பாருங்களேன்.

பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழக்கம் பிழையா தவர்.

அப்படி ஆக ஆச்சாரம் என்னும் ஒழுக்கம் தவறாமல் வாழ்வோர் அடையும் நற்பயன்கள் என்ன என்பதை இங்கு நூலாசிரியர் காட்டுகின்றார்:

பிறப்பு - (நல்ல குடும்பத்தில் பிறத்தல்)
நெடுவாழ்க்கை - நல்ல நெடிய அல்லது நீண்ட ஆயுள்
செல்வ செழிப்பு - நல்ல செல்வ செழிப்பு மிக்க வாழ்க்கை
வனப்பு - உடல்  அழகு
நிலக்கிழமை - நிலத்தை ஆளுதல் அல்லது நிலத்தை உடைமை
மீக்கூற்றம் - மங்காத புகழ்
கல்வி  - நல்ல கல்வி
நோயின்மை - நோய் இல்லாத நீண்ட வாழ்க்கை

அப்படியாக இந்த 8 பயன்களையும் தரும் நல்லொழுக்கங்களை எவை என்று இனி தெரிந்து கொள்வோம்.மேற்கூறிய எட்டு விதமான நற்பயன்களை எல்லாவற்றயும் அதன் இலக்கணத்துக்குத் தக்க வாறு - நன்கு  பேர்கள் மத்தியிலே பெருமிதத்தோடு இருக்கும்படியாகப் பெறுவார் என்பது நூலாசிரியர்  மற்றும் சித்திரங்களின் கருத்து.

தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்

தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.

நான்கு விஷயங்களை நாம் எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும்: - தக்ஷிணை, யஞ யாகாதிகள், தவம்  என்று சொல்லப்படும் இறை தொண்டு , கல்வி  (தமிழ் இலக்கியங்கள், மற்றும் வேத ஆகமங்கள்) . இந்த நான்கையும்   - அறம், பொருள் , இன்பம் என்று சொல்லப் பெரும் தர்மம் , அர்த்த, காமம் என்று சொல்லப் படும்  எல்லாவற்றையும் செய்யும் பொழுதும் காத்துக் கொள்ள வேண்டும். அப்படி, சாஸ்திரங்களுக்கு அனுகூலமான விஷயங்களை , பார்ப்பனர் மற்றும் எல்லோரும்  பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால் - தர்மம், அர்த்தம், காமம் என்று சொல்லப்படும் 3 விஷயங்களும் கெட்டுப் போய் விடும் என்கிறார் நம்முடைய நூலாசிரியர்.

முந்தையோர் கண்ட நெறி

வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.

நம்முடைய மூதாதையர்கள் கண்ட நெறி என்ற சாத்திரம் என்ன என்பதை இங்கு தெளிவாகக் கூறுகின்றார்.தரும சாஸ்திரங்களில் சொல்லப் பெட்ரா விஷயங்களை தெள்ளத்தெளிவாக இங்கு சொல்கின்றார்.


  1. வைகறையில் (ப்ரம்ம முஹூர்த்தம் என்று சொல்லப்பெறும் 4-6 AM)  துயில் எழுதல்
  2. தன்னுடைய (தொழில்) தர்மத்தையும் ,  
  3. தரும வழியில் எப்படி பொருள் சேர்ப்பது என்பது பற்றி எல்லாம் மனதினால் சிந்தித்து, 
  4. உண்மை உள்ளவனாகி பெற்ற தந்தை தாயாரை வணங்கி எழுத்து, 

ஒரு நாளை துவங்க வேண்டும் என்பது - நம்முடைய தமிழர் மரபு என்கிறார் நூல் ஆசிரியர்.

 எச்சிலுடன் தீண்டத் தகாதவை

எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள். 

நம்முடைய மரபிலே (ஸம்ப்ரதாயத்திலே) எச்சில் என்பது ஒரு  கீழ்மையான விஷயம். சாஸ்திரங்களில் சொல்லப்பெற்ற விஷயத்தை இங்கு அழகாகக் கூறுகின்றார். எச்சிலுடன் தொடக் கூடாதவை என்ன என்று இங்கு பார்ப்போம்:

  1. பசு - பசு மாடு 
  2. பார்ப்பார் - ப்ராஹ்மணர்கள் 
  3. தீ - அக்னி 
  4. தேவர் - தெய்வ விக்கிரகங்கள் / பூஜா வஸ்துக்கள் 
  5. உச்சந்தலை 

மேற்கூறிய ஐந்து  பொருட்களையும், எச்சிலுடன் எவருமே கண்டிப்பாகத் தீண்ட கூடாது என்கிறார்.

எச்சிலுடன் காணக் கூடாதவை

எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்
தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றென
நன்கறிவார் நாளும் விரைந்து.

எச்சிலுடன் காணக்கூடாத விஷயங்கள் என்ன என்று மிகவும் தெளிவாகக் கூறுகின்றார் இங்கு:

  1. புலை - புலை என்றால் பிணம்  அன்று பொருள் படும். (சுடுகாட்டில் பிணம் எரிப்பவர்களை புலையர்கள் என்று கூறுவார்கள்)
  2. திங்கள் - சந்திரன்
  3. ஞாயிறு - சூரியன் 
  4. நாய் 
  5. மீன் 

மேற்கூறிய இந்த ஐந்து பொருட்களையும் எச்சிலுடன் காணக்கூடாது என்பது நம்முடைய மரபு. சோற்றைக் கையில் வைத்துக் கொண்டு , எச்சிலுடன் வீடு முழுக்க சுற்றித் திரிவது ஆகியவை மிகவும் தவறு என்று பொருள் கொள்ள வேண்டும்.

 எச்சில்கள்

எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயின்
விழைச்சுஇவை எச்சில் இந்நான்கு.

எச்சில் என்றால் என்ன என்பதை இங்கு ஆசிரியர் தெளிவாகக் காட்டுகின்றார்:

  1. மலம் 
  2. ஜலம் - மூத்திரம் 
  3. இணைவிழைச்சு  - உடல் உறவின் பொழுது வெளியாகும் திரவங்கள் 
  4. வாயின் விழைச்சு - வாயில் உற்பத்தி ஆகும் எச்சில் மற்றும் சொள்ளு  ஆகியவைகள்.

மேற்கூறிய நான்கு விஷயங்கள் எச்சில் எனப்படும்.அதனைத் தவிர உடலில் இருந்து வெளியேறும் சீழ்,இரதம் போன்ற திரவங்கள் எல்லாமே எச்சில் ஆகும்.(அதாவது நோய் கிருமிகளை பரப்பும் தன்மை உடையவை என்று பொருள் கொள்ள வேண்டும்).றிவியல் எல்லாம் வருவதற்கு பல காலங்களுக்கு முன்பே நம்முடைய முன்னோர்கள் இந்த விஷயங்களை எல்லாம் நமக்காகப் பகுத்து வைத்துள்ளனர்.

எச்சிலுடன் செய்யக் கூடாதவை

நால்வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
மேதைகள் ஆகுறு வார்.

அப்படியாக , எச்சிலுடன் இந்தக் காரியங்களை எல்லாம் செய்யக் கூடாது என்று சொல்கிறர் நூலாசிரியர் இங்கு:

  1. ஓதார்  - வேதங்களையும் மற்ற சமய நூல்களையும்  ஓதக் கூடாது,
  2. உரையார் - எதயும் பேசிக் கூடாது 
  3. உறங்குதல் கூடாது 

அதாவது மேற்கூறிய நான்கு வகை எச்சிலுடனும் இந்த 3 செயல்களையும் செய்யக் கூடாது என்கிறார். எப்பொழுதுமே மேதைகள், அறிவாளிகள் அந்தக் காரியங்களைச்  செய்ய மாட்டார்கள் என்று சொல்கின்றார்.

காலையில் கடவுளை வணங்குக

நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி
நின்று தொழுதல் பழி.

காலையில் எழுந்தவுடன் வேம்பு அல்லது வேலம்  குச்சிகளால் பல் துலக்கி, கண்களை நன்று கழுவி, அதன் பிறகு தன வணங்கும் தெய்வத்தை வணங்கி(நமஸ்கரித்து) வேறு எந்த வேலையும்   செய்ய வேண்டும். மாலைப் பொழுதில், சந்தியா காலத்தில் உட்கார்ந்து கொண்டு தான் தெய்வத்தை வணங்க வேண்டும் என்பது சாத்திரம்.

 நீராட வேண்டிய சமயங்கள்

தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர்.

அதாவது நீராட வேண்டிய தருணங்கள் எவை என்று இங்கு மிக துல்லியமாகக் காட்டுகின்றார் நூல் ஆசிரியர்:


  1. தேவர் வழிபாடு - திருவாராதனம் என்று சொல்லப் படும் பூசை செய்யும் காலம்  (பூஜைக்கு முன்பு)
  2. தீக்கனா - தீய கனவு காணும் காலம் (கண்டா பிறகு)
  3. வாலாமை - பிறப்பு (மற்றும் இறப்பு) தீண்டல்கள் உள்ள  / தீண்டிய காலத்திலும்  (தீட்டு கழிந்த பின்பு)
  4. உண்டது கான்றல் - வாந்தி எடுத்த காலம்  (பின்பு)
  5. மயிர்களைதல் - முடியை வெட்டிக் கொள்ளுதல் / மொந்தை அடித்துக் கொள்ளும் காலம் (க்ஷவரத்திற்கு பின்பு)
  6. ஊண்பொழுது - சாப்பிடும் காலம் (உணவிற்கு முன்பு)
  7. வைகு துயிலொடு  - நீண்ட தூக்கத்திற்குப் பிறகு 
  8. இணைவிழைச்சு - உடல் உறவு ஆன பிறகு 
  9. கீழ்மக்கள் மெய்யுறல் - நீசர்களைத் தொடுங்கால் (தங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்கள்  என்று பொருள் கொள்ள வேண்டும். தீண்டாமை என்று பொருள் படாது)
  10. மயலுறல் - மாலா, சலம் கழித்த பிறகு 


மேற்கூறிய பாத்து காலங்களிலும் (அதன் பிறகு) கண்டிப்பாக நீராட வேண்டும் என்பது சாத்திரம். சில சமயங்களில் குளிக்க முடியாதவர்கள் ஜலத்தை தலையில் தெளித்துக் கொள்வார்கள் (உடல் நலம் இல்லாதவர்கள்).

Wednesday, June 29, 2016

திருமந்திரத்தின் மணித் துளிகள்..

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே



தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

திருமூலர் ஞானம் ஒழுகப் பாடிய இந்தப் பாடலில், சிவ பெருமானைப் பலவாறாகப் போற்றி பாடுகின்றார். அதாவது இறைவன் ஆகிய சிவ பெருமான், தீயைக் காட்டிலும் வெப்பம் மிகுந்தவன், தண்ணீரைக் காட்டிலும் குளிர்ச்சி மிகுந்தவன் - ஆனாலும் அவனுடைய திருவளருளின் பெருமையை அறிவார் யாரும் இல்லை.  ஒரு சின்னக் குழந்தையை விட நல்ல மனம் கொண்டவன் - தன்னுடைய பக்தர்களுக்கு பெற்ற தாயை விட மேன்மை செய்யக் கூடியவன் சிவ பெருமான் என்று சிவ பெருமானின் பெருமைகளை தெள்ளு தமிழில் கோருகின்றார் நம் திருமூலர்.


மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.

வேதச்   சிறப்பு 

வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே

ஆகமச் சிறப்பு 

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே

Tuesday, June 28, 2016

திருக்குறளின் மணி முத்துக்கள் (23)

கடவுள் வாழ்த்து 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

உலகில் உள்ள மொழிகள் எல்லாமே அகாரம் அல்லது அ என்னும் எழுத்திலே தான் துடங்கும். (A,ALPHA,...). அதே போல், இந்த உலகம் ஆதி பகவான் ஆகிய ஆதித்யன் அல்லது ஸூர்யனையே ஒட்டி வாழும். இங்கு  ஆதி  பகவன் என்னும் சொல்  பல பொருள்கள் உடையது -


  1. ஆதி நாதன் என்ற ஜைன மதத்து தீர்த்தங்கரர்
  2. ஆதித்யன் என்ற சூர்யன்
  3. ஆதிப்பிரான் என்ற மஹா விஷ்ணு
  4. திரு வள்ளுவரின் தந்தை மற்றும் தாயின் பெயர்கள்

இவற்றில் எல்லாம் சூர்யன் மிகவும் பெருமை வாய்ந்தவன். ஏன் என்றால், இந்த உலகத்தைக் காப்பவன் என்பதால், சூர்யா நாராயணன் என்று பெயர். செடி கொடிகள் எல்லாம் தங்கள் உணவினை (கார்போஹைட்ரெட் என்ற மாவுப்பொருள்)  தயாரிப்பதற்கு ஹேதுவாக இருப்பவன் சூர்யன். இந்த உலகத்தில் உள்ள நரர்களை எல்லாம் உய்விப்பதினாலே தான் அவனுக்கு நாராயணன் என்ற சிறப்புப் பெயர். மஹா விஷ்ணுவுக்கு , காத்தல் தொழில், அதற்கு  இணையாக சூரியனுக்கும் இந்த உலகத்தைக்  காக்கும் தொழில் உள்ளது. (இரவு பகல், 4 காலங்கள் , உத்தராயணம், தட்சிணாயனம் எல்லாம் சூரியனுடைய  செயல்பாட்டினால் தான் என்பதால் தான் இங்கு நம் வள்ளுவர், சூரியனை ஒட்டியே இந்த உலகம் வாழ்கின்றது என்று சொல்கின்றார்.

வேதாந்தத்திலே , ஓம்காரத்திலே இருக்கும் அகரத்திற்கு (அ + உ + ம்  = ஓம்) ப்ரும்மத்தை கூறுவார்கள்.

வான் சிறப்பு (மழையின் பெருமை)

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

பெரிய சமுத்திரம் கூட வற்றிக் காய்ந்து போய் விடும் - மழை பெய்யாமல் போய் விட்டால்.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

மழையை ஆதாரமாகக் கொண்டு இந்த உலகம் இயங்கி வருவதால் தான், அந்த  மழையை சாகா வரம் தரம் அம்ருதம் என்று புகழப் படுகின்றது. பகவான் கீதையில் சொல்லும் பொழுதும்  , உணவு மழையில் இருந்தே உண்டாகின்றது என்று கூறுகின்றார். (அந்நாத்  பவந்தி பூதாநி
பர்ஜன்யராத் அன்ன சம்பவஹ)

நீத்தார் பெருமை (சந்யாசிகள் பெருமை)

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

சந்யாசிகள் பெருமையைக் கூற வேண்டும் என்றால், இந்த உலகில் செத்துப் போனவர்களைக்   கணக்கு எடுத்த மாதிரி என்று சொல்கிறார் வள்ளுவர்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

பெரியார் என்றால் சந்யாசிகள். ஏன் என்றால், அவர்கள் பஞ்ச இந்திரியங்களையும்   அடக்கி, இந்த உலக வாழ்வைத் துறந்தவர்கள். ஆனால் சிறியவர்கள் அதிசயங்களை செய்ய இயலாதவர் . இங்கு பெரியார் என்றால் முற்றிலும் துறந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஸ்வாமி  இல்லை என்று சொல்லிக் கொண்டு திரிந்து கொண்டு இருக்கும் கிழவர்கள் எல்லாம் ஒரு போதும் பெரியர்வர்கள் ஆக முடியவே முடியாது. உதாரணத்திற்கு , கஞ்சிப்  பெரியவரைப் பெரியார் என்று சொன்னால் தகும். ஸ்வய மரியாதை இயக்கம் என்று சொல்லிக் கொண்டு இரட்டை வேடம் போடுபவர்கள் ஒருக்காலும்  பெரியார் என்ற சொல்லுக்கு அருகதை அற்றவர் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அறன்வலியுறுத்தல் 

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்.

கோபம், பேராசை, பொறாமை, கொடுஞ்சொல் ஆகியவற்றைத்  தவிர்த்து இருப்பதே தர்மம் அல்லது அறம் எனப்படும்.

இல்வாழ்க்கை ( கிருஹஸ்த தர்மம்)

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

வாழ்க்கை துணை நலம்
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

புதல்வரைப் பெறுதல் 

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

அன்புடைமை 

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

உண்மையான அன்பிற்கு தாழ்ப்பாள் கிடையாது. தாம் நேசிப்பவர்க்கு ஒரு கஷ்டம் வரும் காலத்திலே, தம்மையே அறியாமல் கண்ணீர் வந்து விடும்   - அதுவே அன்பின் தன்மை.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பு உடையவர்கள் தங்களுடைய எலும்பும் கூட பிறர்க்குத் தானம் செய்வார்களாம். ஆனால் அன்பில்லாதவர்கள் எல்லாவற்றையும் தமக்காக வைத்துக் கொள்வார்களாம். இங்கு வள்ளுவர் ததீசி முனிவரின் கதையை நமக்குச் சொல்கின்றார். இந்திரனுக்கு வ்ருத்ரன் என்ற அசுரனைக் கொல்ல, வஜ்ராயுதம் என்னும் ஆயுதம் வைரம் பாய்ந்த எலும்பைக் கொண்ட ஒரு மனிதனின் முதுகு எலும்பால் செய்ய வேண்டும் என்பது அந்த அசுரன் பெற்ற வரம். அதற்காக, ததீசி மஹரிஷி, இறைவனைக் கோரி, தான் உயிரை நீத்தார் (நைமிசாரண்யம் என்னும் இடத்திலே). அதன் பிறகு, அவருடைய முதுகுத்த  தாண்டினால் வஜ்ராயுதம் செய்து விருத்திரன் என்ற அசுரனைக் கொன்றான் இந்திரன். இப்பொழுது புரிந்ததா? வள்ளுவர் சாஸ்திர மற்றும் புராண விஷயங்களை மிகவும் அழகாகக்  கொடுத்திருக்கிறார்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

தர்மத்திற்க்கே அன்பு , மூலம் என்று நினைப்பார்கள். ஆனால் வீரத்திற்கும் அன்பே மூலம் என்று புரிந்து கொல்ல வேண்டும்.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

எலும்பு இல்லாத புழுவினை வெய்யில் எப்படிச் சுட்டு இருக்குமோ, அப்படித் தான் தர்மம் அன்பு இல்லாதவர்களை சுட்டு எரித்து விடும்.

விருந்தோம்பல்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.

இனியவை கூறல்

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

பழுத்த பழம் போல இனிய சொற்கள் இருக்கும் பொழுது , கனியாத காயைப் போன்ற சுடுசொற்களைச் சொல்லுதல் கூடாது.  நம்முடைய  அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயன்படக் கூடிய ஒரு திருக்குறள்.

Wednesday, June 22, 2016

ஜோதிடப் பழமொழிகள் - (20)


  1. பரணியில் பிறந்தோர் தரணியை ஆள்வர்.
  2. சித்திரை அப்பன் தெருவிலே.
  3. பூராடத்திற்கு நூல் ஆடாது.
  4. பொன்  கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
  5. சனிப் பிணம் தனிப் போகாது.
  6. மூலத்து  மாமியார் மூலையிலே.
  7. ஆயில்யத்து மாமியார் ஆசந்தியிலே.
  8. ஆனி மூலம் அரசாளும்  பின் மூலம் நிர்மூலம்.
  9. ஹஸ்தத்து அப்பன் இடுப்பு  வரைக்கும்..
  10. அவிட்டம்  தவிட்டுப் பானையில் பணம். 
  11. கேட்டை  நக்ஷத்ரம்  ஜ்யேஷ்டனுக்கு  ஆகாது.
  12. சனியைப் போலே குடுக்கிறவனும் இல்லை கெடுக்கிறவனும் இல்லை.
  13. குரு பார்க்க கோடி நன்மை.
  14. கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகக் கூடாது.
Proverbs on Thamizh Months

  1. மாதங்களில் சிறந்தது மார்கழி.
  2. ஐப்பசியில் அடை மழை.
  3. கார்திகைக்கப்புறம் மழையும்   இல்லை கர்ணனுக்கப்புறம் கொடையும் இல்லை.
  4. தை பிறந்தால் வழி பிறக்கும்.
  5. ஆடிப்பட்டம் தேடி விதை.
  6. ஆடிக் காத்தில் அம்மியே பறக்கும்.

Monday, June 20, 2016

பழமொழித் திரட்டு - V (50)

  1. இல்லாதவர் பொல்லாதவர்.
  2. ஆளு விலை கல்லு விலை.
  3. கடலில் பெருங்கயதைக் கரைதார்ப் போலே.
  4. நாலு மலை ஒரே இடத்தில இருக்கலாம். ஆனால் நாலு முலை ஒரே இடத்தில இருக்கவே முடியாது. 
  5. தூங்கற புலியைத் தட்டி எழுப்பின மாரி.
  6. மலையில விளைஞ்சால்  மாகாணி நிலத்திலே விளைஞ்சால் நன்னாரி.
  7. பழிக்குப் பழி.
  8. இல்லறம் அல்லது நல்லறம் அல்ல.
  9. தும்பை விட்டு விட்டு தலையைப் பிடிக்கறது.
  10. கைக்கு எட்டினது வாயிக்கு எட்ட வில்லை.
  11. எதிரியை மன்னி அனால் மறக்காதே.
  12. களவும் கற்று மற.
  13. நாலு காசு இல்லாட்டி நாயும் கூட மதிக்காது.
  14. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் இல்லை.
  15. கள்ளனுக்கே காஞ்சி கொடுத்தவன்.
  16. காளை மட்டிலேயே பால் கரப்பான்.
  17. பானம்,பரதாரம்,ஹத்தி (கொலை), ஹிம்சை, திருட்டு இவை ஆயிண்டும் பஞ்ச மஹாபாதகங்கள்.
  18. மூக்காலே அழுதான்.
  19. புகையற விறகு  புறத்திலே(வெளியிலே).
  20. சூடு கொண்ட பூனை அடுப்பிலே ஏறாது.
  21. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. 
  22. ஊரான் வீட்டு நெய்யே ! என் ப்ன்டாட்டி கையே!
  23. வயிறு முட்டச் சோறு போட்டுட்டு வயித்திலே குத்தின மாரி!
  24. தூங்கறவனை எழுப்பலாம். தூங்கற மாரி நடிக்கரவனை எழுப்பவே முடியாது.
  25. பீயைக் கண்ட நாயை மாரி.
  26. எந்தப் புதுக்குள்ளே எந்தப் பாம்புன்னு யாருக்குத் தெரியும்?
  27. பாம்புப் புதுக்குள்ளே கையை விட்டால் கடிக்காமல் விடாது.
  28. தோளுக்கு மிஞ்சினாத் தோழன்.
  29. குட்டி ஞானம் குடியைக் கெடுக்கும்.
  30. குளத்தில் குசு விட்ட மாறி.
  31. சிற்றிடை மலர்ந்த செங்கமலம் போலே
  32. உடம்பு முழுக்க முள்ளாக இருந்தாலும் ரோஜா பூ அழகு 
  33. பாலை வனத்திலே நீரோடை போலே 
  34. குனியாக் குனியாக் குட்டுவார்கள்.
  35. ஓடற பாம்பு மேலே கல்லை விட்டு எரிஞ்சு மாரி.
  36. தாமரை இலை மேல் தண்ணீர் போலே.
  37. பாசத்துல ஊசி கூடின மாரி
  38. உடுத்திக் கேட்டான் பார்ப்பான் உண்டு கேட்டான் வெள்ளாளன்.
  39. சித்தம் போக்கு சிவன் போக்கு.
  40. அலை ஓஞ்சு ஸ்நானம் பண்ணினா மாரி.
  41. முரட்டுத் துலுக்கனும் முட்டாள் நாய்க்கணும் பட்டணத்துக்கு தான் லாயக்கு.
  42. வாத்தியார் பையன் மக்கு.
  43. பால ஜோசியனும் விருத்த வைத்தியனும் தான் நல்லது.
  44. கடலிலே கரைத்த பெருங்காயம்  மாரி.
  45. அங்காடியில் தோத்தால் அம்மா கிட்டயா கட்டறது?
  46. கீரியும் பாம்பும் போலே 
  47. நாரதர் கலகம் நல்லதிலே தான் முடியும்.
  48. குண்டாகி சட்டியில் குதிரை ஓட்டுகிறான்.
  49. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே நடந்து போல.
  50. பழம் நழுவி பாலில் விழுந்த மாரி.