Tuesday, June 28, 2016

திருக்குறளின் மணி முத்துக்கள் (23)

கடவுள் வாழ்த்து 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

உலகில் உள்ள மொழிகள் எல்லாமே அகாரம் அல்லது அ என்னும் எழுத்திலே தான் துடங்கும். (A,ALPHA,...). அதே போல், இந்த உலகம் ஆதி பகவான் ஆகிய ஆதித்யன் அல்லது ஸூர்யனையே ஒட்டி வாழும். இங்கு  ஆதி  பகவன் என்னும் சொல்  பல பொருள்கள் உடையது -


  1. ஆதி நாதன் என்ற ஜைன மதத்து தீர்த்தங்கரர்
  2. ஆதித்யன் என்ற சூர்யன்
  3. ஆதிப்பிரான் என்ற மஹா விஷ்ணு
  4. திரு வள்ளுவரின் தந்தை மற்றும் தாயின் பெயர்கள்

இவற்றில் எல்லாம் சூர்யன் மிகவும் பெருமை வாய்ந்தவன். ஏன் என்றால், இந்த உலகத்தைக் காப்பவன் என்பதால், சூர்யா நாராயணன் என்று பெயர். செடி கொடிகள் எல்லாம் தங்கள் உணவினை (கார்போஹைட்ரெட் என்ற மாவுப்பொருள்)  தயாரிப்பதற்கு ஹேதுவாக இருப்பவன் சூர்யன். இந்த உலகத்தில் உள்ள நரர்களை எல்லாம் உய்விப்பதினாலே தான் அவனுக்கு நாராயணன் என்ற சிறப்புப் பெயர். மஹா விஷ்ணுவுக்கு , காத்தல் தொழில், அதற்கு  இணையாக சூரியனுக்கும் இந்த உலகத்தைக்  காக்கும் தொழில் உள்ளது. (இரவு பகல், 4 காலங்கள் , உத்தராயணம், தட்சிணாயனம் எல்லாம் சூரியனுடைய  செயல்பாட்டினால் தான் என்பதால் தான் இங்கு நம் வள்ளுவர், சூரியனை ஒட்டியே இந்த உலகம் வாழ்கின்றது என்று சொல்கின்றார்.

வேதாந்தத்திலே , ஓம்காரத்திலே இருக்கும் அகரத்திற்கு (அ + உ + ம்  = ஓம்) ப்ரும்மத்தை கூறுவார்கள்.

வான் சிறப்பு (மழையின் பெருமை)

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

பெரிய சமுத்திரம் கூட வற்றிக் காய்ந்து போய் விடும் - மழை பெய்யாமல் போய் விட்டால்.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

மழையை ஆதாரமாகக் கொண்டு இந்த உலகம் இயங்கி வருவதால் தான், அந்த  மழையை சாகா வரம் தரம் அம்ருதம் என்று புகழப் படுகின்றது. பகவான் கீதையில் சொல்லும் பொழுதும்  , உணவு மழையில் இருந்தே உண்டாகின்றது என்று கூறுகின்றார். (அந்நாத்  பவந்தி பூதாநி
பர்ஜன்யராத் அன்ன சம்பவஹ)

நீத்தார் பெருமை (சந்யாசிகள் பெருமை)

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

சந்யாசிகள் பெருமையைக் கூற வேண்டும் என்றால், இந்த உலகில் செத்துப் போனவர்களைக்   கணக்கு எடுத்த மாதிரி என்று சொல்கிறார் வள்ளுவர்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

பெரியார் என்றால் சந்யாசிகள். ஏன் என்றால், அவர்கள் பஞ்ச இந்திரியங்களையும்   அடக்கி, இந்த உலக வாழ்வைத் துறந்தவர்கள். ஆனால் சிறியவர்கள் அதிசயங்களை செய்ய இயலாதவர் . இங்கு பெரியார் என்றால் முற்றிலும் துறந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஸ்வாமி  இல்லை என்று சொல்லிக் கொண்டு திரிந்து கொண்டு இருக்கும் கிழவர்கள் எல்லாம் ஒரு போதும் பெரியர்வர்கள் ஆக முடியவே முடியாது. உதாரணத்திற்கு , கஞ்சிப்  பெரியவரைப் பெரியார் என்று சொன்னால் தகும். ஸ்வய மரியாதை இயக்கம் என்று சொல்லிக் கொண்டு இரட்டை வேடம் போடுபவர்கள் ஒருக்காலும்  பெரியார் என்ற சொல்லுக்கு அருகதை அற்றவர் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அறன்வலியுறுத்தல் 

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்.

கோபம், பேராசை, பொறாமை, கொடுஞ்சொல் ஆகியவற்றைத்  தவிர்த்து இருப்பதே தர்மம் அல்லது அறம் எனப்படும்.

இல்வாழ்க்கை ( கிருஹஸ்த தர்மம்)

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

வாழ்க்கை துணை நலம்
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

புதல்வரைப் பெறுதல் 

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

அன்புடைமை 

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

உண்மையான அன்பிற்கு தாழ்ப்பாள் கிடையாது. தாம் நேசிப்பவர்க்கு ஒரு கஷ்டம் வரும் காலத்திலே, தம்மையே அறியாமல் கண்ணீர் வந்து விடும்   - அதுவே அன்பின் தன்மை.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பு உடையவர்கள் தங்களுடைய எலும்பும் கூட பிறர்க்குத் தானம் செய்வார்களாம். ஆனால் அன்பில்லாதவர்கள் எல்லாவற்றையும் தமக்காக வைத்துக் கொள்வார்களாம். இங்கு வள்ளுவர் ததீசி முனிவரின் கதையை நமக்குச் சொல்கின்றார். இந்திரனுக்கு வ்ருத்ரன் என்ற அசுரனைக் கொல்ல, வஜ்ராயுதம் என்னும் ஆயுதம் வைரம் பாய்ந்த எலும்பைக் கொண்ட ஒரு மனிதனின் முதுகு எலும்பால் செய்ய வேண்டும் என்பது அந்த அசுரன் பெற்ற வரம். அதற்காக, ததீசி மஹரிஷி, இறைவனைக் கோரி, தான் உயிரை நீத்தார் (நைமிசாரண்யம் என்னும் இடத்திலே). அதன் பிறகு, அவருடைய முதுகுத்த  தாண்டினால் வஜ்ராயுதம் செய்து விருத்திரன் என்ற அசுரனைக் கொன்றான் இந்திரன். இப்பொழுது புரிந்ததா? வள்ளுவர் சாஸ்திர மற்றும் புராண விஷயங்களை மிகவும் அழகாகக்  கொடுத்திருக்கிறார்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

தர்மத்திற்க்கே அன்பு , மூலம் என்று நினைப்பார்கள். ஆனால் வீரத்திற்கும் அன்பே மூலம் என்று புரிந்து கொல்ல வேண்டும்.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

எலும்பு இல்லாத புழுவினை வெய்யில் எப்படிச் சுட்டு இருக்குமோ, அப்படித் தான் தர்மம் அன்பு இல்லாதவர்களை சுட்டு எரித்து விடும்.

விருந்தோம்பல்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.

இனியவை கூறல்

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

பழுத்த பழம் போல இனிய சொற்கள் இருக்கும் பொழுது , கனியாத காயைப் போன்ற சுடுசொற்களைச் சொல்லுதல் கூடாது.  நம்முடைய  அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயன்படக் கூடிய ஒரு திருக்குறள்.

No comments:

Post a Comment