Wednesday, June 22, 2016

ஜோதிடப் பழமொழிகள் - (20)


  1. பரணியில் பிறந்தோர் தரணியை ஆள்வர்.
  2. சித்திரை அப்பன் தெருவிலே.
  3. பூராடத்திற்கு நூல் ஆடாது.
  4. பொன்  கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
  5. சனிப் பிணம் தனிப் போகாது.
  6. மூலத்து  மாமியார் மூலையிலே.
  7. ஆயில்யத்து மாமியார் ஆசந்தியிலே.
  8. ஆனி மூலம் அரசாளும்  பின் மூலம் நிர்மூலம்.
  9. ஹஸ்தத்து அப்பன் இடுப்பு  வரைக்கும்..
  10. அவிட்டம்  தவிட்டுப் பானையில் பணம். 
  11. கேட்டை  நக்ஷத்ரம்  ஜ்யேஷ்டனுக்கு  ஆகாது.
  12. சனியைப் போலே குடுக்கிறவனும் இல்லை கெடுக்கிறவனும் இல்லை.
  13. குரு பார்க்க கோடி நன்மை.
  14. கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகக் கூடாது.
Proverbs on Thamizh Months

  1. மாதங்களில் சிறந்தது மார்கழி.
  2. ஐப்பசியில் அடை மழை.
  3. கார்திகைக்கப்புறம் மழையும்   இல்லை கர்ணனுக்கப்புறம் கொடையும் இல்லை.
  4. தை பிறந்தால் வழி பிறக்கும்.
  5. ஆடிப்பட்டம் தேடி விதை.
  6. ஆடிக் காத்தில் அம்மியே பறக்கும்.

No comments:

Post a Comment