அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
திருமூலர் ஞானம் ஒழுகப் பாடிய இந்தப் பாடலில், சிவ பெருமானைப் பலவாறாகப் போற்றி பாடுகின்றார். அதாவது இறைவன் ஆகிய சிவ பெருமான், தீயைக் காட்டிலும் வெப்பம் மிகுந்தவன், தண்ணீரைக் காட்டிலும் குளிர்ச்சி மிகுந்தவன் - ஆனாலும் அவனுடைய திருவளருளின் பெருமையை அறிவார் யாரும் இல்லை. ஒரு சின்னக் குழந்தையை விட நல்ல மனம் கொண்டவன் - தன்னுடைய பக்தர்களுக்கு பெற்ற தாயை விட மேன்மை செய்யக் கூடியவன் சிவ பெருமான் என்று சிவ பெருமானின் பெருமைகளை தெள்ளு தமிழில் கோருகின்றார் நம் திருமூலர்.
மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.
அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.
வேதச் சிறப்பு
வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே
ஆகமச் சிறப்பு
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே
No comments:
Post a Comment