- இல்லாதவர் பொல்லாதவர்.
- ஆளு விலை கல்லு விலை.
- கடலில் பெருங்கயதைக் கரைதார்ப் போலே.
- நாலு மலை ஒரே இடத்தில இருக்கலாம். ஆனால் நாலு முலை ஒரே இடத்தில இருக்கவே முடியாது.
- தூங்கற புலியைத் தட்டி எழுப்பின மாரி.
- மலையில விளைஞ்சால் மாகாணி நிலத்திலே விளைஞ்சால் நன்னாரி.
- பழிக்குப் பழி.
- இல்லறம் அல்லது நல்லறம் அல்ல.
- தும்பை விட்டு விட்டு தலையைப் பிடிக்கறது.
- கைக்கு எட்டினது வாயிக்கு எட்ட வில்லை.
- எதிரியை மன்னி அனால் மறக்காதே.
- களவும் கற்று மற.
- நாலு காசு இல்லாட்டி நாயும் கூட மதிக்காது.
- பொய் சொன்ன வாய்க்கு போஜனம் இல்லை.
- கள்ளனுக்கே காஞ்சி கொடுத்தவன்.
- காளை மட்டிலேயே பால் கரப்பான்.
- பானம்,பரதாரம்,ஹத்தி (கொலை), ஹிம்சை, திருட்டு இவை ஆயிண்டும் பஞ்ச மஹாபாதகங்கள்.
- மூக்காலே அழுதான்.
- புகையற விறகு புறத்திலே(வெளியிலே).
- சூடு கொண்ட பூனை அடுப்பிலே ஏறாது.
- நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
- ஊரான் வீட்டு நெய்யே ! என் ப்ன்டாட்டி கையே!
- வயிறு முட்டச் சோறு போட்டுட்டு வயித்திலே குத்தின மாரி!
- தூங்கறவனை எழுப்பலாம். தூங்கற மாரி நடிக்கரவனை எழுப்பவே முடியாது.
- பீயைக் கண்ட நாயை மாரி.
- எந்தப் புதுக்குள்ளே எந்தப் பாம்புன்னு யாருக்குத் தெரியும்?
- பாம்புப் புதுக்குள்ளே கையை விட்டால் கடிக்காமல் விடாது.
- தோளுக்கு மிஞ்சினாத் தோழன்.
- குட்டி ஞானம் குடியைக் கெடுக்கும்.
- குளத்தில் குசு விட்ட மாறி.
- சிற்றிடை மலர்ந்த செங்கமலம் போலே
- உடம்பு முழுக்க முள்ளாக இருந்தாலும் ரோஜா பூ அழகு
- பாலை வனத்திலே நீரோடை போலே
- குனியாக் குனியாக் குட்டுவார்கள்.
- ஓடற பாம்பு மேலே கல்லை விட்டு எரிஞ்சு மாரி.
- தாமரை இலை மேல் தண்ணீர் போலே.
- பாசத்துல ஊசி கூடின மாரி
- உடுத்திக் கேட்டான் பார்ப்பான் உண்டு கேட்டான் வெள்ளாளன்.
- சித்தம் போக்கு சிவன் போக்கு.
- அலை ஓஞ்சு ஸ்நானம் பண்ணினா மாரி.
- முரட்டுத் துலுக்கனும் முட்டாள் நாய்க்கணும் பட்டணத்துக்கு தான் லாயக்கு.
- வாத்தியார் பையன் மக்கு.
- பால ஜோசியனும் விருத்த வைத்தியனும் தான் நல்லது.
- கடலிலே கரைத்த பெருங்காயம் மாரி.
- அங்காடியில் தோத்தால் அம்மா கிட்டயா கட்டறது?
- கீரியும் பாம்பும் போலே
- நாரதர் கலகம் நல்லதிலே தான் முடியும்.
- குண்டாகி சட்டியில் குதிரை ஓட்டுகிறான்.
- கும்பிடப்போன தெய்வம் குறுக்கே நடந்து போல.
- பழம் நழுவி பாலில் விழுந்த மாரி.
Monday, June 20, 2016
பழமொழித் திரட்டு - V (50)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment