நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை.
திருநீறு இல்லாத நெற்றி பாழ் நெற்றி
நெய் இல்லாத உணவு பாழ் உணவு
உடன் புரிந்தவர்கள் இல்லாத உடம்பு (பிறவி) பாழ் உடல்
அழகான கோடி இடை உள்ள ஒரு பெண் இல்லாத இல்லமும் பாழ் இல்லமே.
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.
பசி வருங்கால பத்தும் பறந்து விடும் என்று கூறுவார்கள். அந்தப் பத்தும் என்ன என்பதை இங்கு கூறுகின்றார் நம் தமிழ்ப் பாட்டி:
மானம், சாதி வேறுபாடு, பிதற்ற கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், வீரம், பெண்களைக் கண்டால் வரும் ஒரு ஈர்ப்பு .
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.
நாம் ஒரு பொருளை வேண்டும் என்று ஆசைப் படும் பொழுது , அது கிடைக்காமல் போகும். அதே போல், நாம் என்னடா ஒரு பொருள் நம்மை வந்து அடையும். எனவே இது எல்லாம் நம்மை ஆளக் கூடிய இறைவனாகிய இஷானின் செயல் என்று அறிதல் வேண்டும்.
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.
உண்பது என்னவோ ஒரு நாழி (சுட்டி) அரிசி, உடுத்திக் கொள்வது என்னவோ 4 முழம் துணி -ஆனால் அளவுக்கு அதிகமாக ஆசை பட்டுக் கொண்டு கனவுகளைக் கண்டு இருக்கும் மனிதர் வாழ்க்கை எப்பொழுது உடைந்து போகும் என்று தெரியாத ஓவர் மண் பத்திரத்தைப் போன்று மணக்க கவலைகளும் குறைக்கலாம் நிரந்ததைப் போல் இருக்கும்.
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.
படிக்காதவன் ஆனாலும் அவன் கையில் பணம் இருந்தால் எல்லோரும் அவனைச் சென்று அங்கு எதிர் கொள்வார்கள். பணம் இல்லாதவனைத் தன்னுடைய மனைவி, பெற்ற தாய், ஆகிய யாரும் விரும்ப மாட்டார்கள் -அ வானுடைய சொல்லானது எங்கும் எடு படாது.
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.
திருக்குறளும், நன்கு வேதங்களின் முடிவான உபநிஷத்துக்களும், சமயக் குறவர்களான சுந்தரர், அப்பர், சம்பந்தர் ஆகிய மூவரின் பாடல்களும், மாணிக்க வாசகரின் திரு வாசகமும், திரு மூலர் உடைய திரு மந்திரம் ஆகிய எல்லாமே ஒரே வாக்ககம் என்று உணர வேண்டும்.
No comments:
Post a Comment