Sunday, July 3, 2016

தமிழில் உறவு முறைகளின் பெயர்கள்..

இன்றய காலகட்டங்களில், நாம் நம்முடைய உறவிண்கற்களை எப்படி அழைப்பது என்று தெரியாமல் இருக்கிறோம். நம்முடைய தமிழ்ப் பண்பாட்டில் , ஒவ்வொரு உறவுக்கும் தனிப்பட்ட பெயர்கள் உண்டு. அதனை இங்கு காண்போம்:

நம்முடைய மூதாதையர்களின் பெயர்கள்:

  1. தாத்தா /பாட்டி - தந்தை அல்லது தாயின் பெற்றோர்கள் ,(பாட்டன் /பாட்டி ).
  2. கொள்ளு தாத்தா / கொள்ளு பாட்டி - தாத்தா /பாட்டியின் பெற்றோர்கள் 
  3. எள்ளு தாத்தா / எள்ளு பாட்டி  - கொள்ளு தாத்தா / கொள்ளு பாட்டியின் பெற்றோர்கள்.
  4. அத்தைப் பாட்டி - அப்பாவின் அத்தை 
  5. மாமாத்  தாத்தா - அப்பாவின் தாய் மாமா 
வடமொழியில் இதனை இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுவார்கள்.
  1. பிதாமஹ, பிதாமஹீ - அப்பாவின் தந்தை /தாய் 
  2. ப்ரபிதாமஹ / ப்ரபிதாமஹீ -  அப்பாவின் தாத்தா மற்றும் பாட்டி 
  3. பித்ரு ப்ரபிதாமஹ  / ப்ரபிதாமஹீ - அப்பாவின் கொள்ளு தாத்தா / கொள்ளு பாட்டி
  1. மாதாமஹ / மாதாமஹி - தாயின் தந்தை மற்றும் தாய் 
  2. மாத்ருபிதாமஹ, மாத்ருபிதாமஹீ - தாயின் தாத்தா மற்றும் பாட்டி 
  3. மாத்ருப்ரபிதாமஹ / மாத்ருப்ரபிதாமஹீ - தாயின் கொள்ளு தாத்தா / கொள்ளு பாட்டி
நம் குடும்பத்தாரின் பெயர்கள்:

  1. அப்பா, அம்மா ( இந்த வார்த்தைகள் உருது மொழியில் இருந்து வந்திருக்க வேண்டும். என் என்றால் அவை தமிழ் வார்த்தைகள் அல்ல.)
  2. தந்தை, தாய்  - இவை தூய தமிழ் வார்த்தைகள் ஆகும்.  (திருநெல்வேலிப் பக்கம் ஆச்சி, அத்தன் என்று சொல்லும் வசக்கமும் உண்டு). (ஆத்தா என்ற சொல்லும் தயைக் குறிக்கும்).
  3. அண்ணா - மூத்த சகோதரன் (சஹோதரன் என்ற சொல்லுக்கு ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் என்று பொருள் வட மொழியிலே சக + உதர)
  4. தம்பி - இளைய சகோதரன் 
  5. அக்கா  - மூத்த சகோதரி 
  6. தங்கை - இளைய சோதரி 
  7. அம்பி - அவள்/ அவனுடைய தம்பி
  8. உம்பி - உன்னுடைய தம்பி
  9. இம்பி - இவனுடைய தம்பி 
அக்கா / தங்கையைபப் பொதுவாக தமக்கை என்று சொல்லுவார்கள்.

தாய் வழி உறவுகள்:

  1. தாய் மாமன்  / அம்மான்  - அம்மாவின் சஹோதரன் (வட மொழியிலே உள்ள மாதுல என்ற சொல்லே இப்படி மருவி இருக்க்க வேண்டும் என்பது என் கருத்து).
  2. தாய் மாமனின் மனைவி - மாமி (சிலர் அத்தை என்றும் அழைப்பார்கள்).
  3. மாமன் மகன்- அம்மான்  சேய்/  அம்மாஞ்சி 
  4. மாமன் மகள் - அம்மங்கார் அல்லது அம்மங்காள்
  5. சித்தி,சித்தப்பா - அம்மாவுடன் பிறந்த தங்கை, மற்றும் தங்கையின் கணவர்
  6. பெரியம்மா, பெரியப்பா - அம்மாவின் அக்கா மற்றும் அவர் கணவர்  
அவர்களுடைய பிள்ளைகளை வயதிற்கு ஏற்ப அக்கா,தங்கை, அண்ணன்,தம்பி என்று அழைக்க வேண்டும்).

தந்தை வழி உறவுகள்:

  1. தந்தையின் சஹோதரி (அக்கா / தங்கை) - அத்தை 
  2. அத்தம்பியார் / அத்திம்பார் / மாமா - அத்தையின் கணவர்   /  அக்கா / தங்கையின் கணவர்.
  3. அத்தான்  - அத்தையின் மகன்
  4. அத்தங்கார்  / அத்தங்காள்  - அத்தையின் மகள் 
  5. ஞாதி / தாயாதி / பங்காளி - அப்பாவின் ஒன்று விட்ட சஹோதரர்கள் (ஒரே கோத்ரம் அல்லது குலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும். அவர்கள் சித்தப்பா, பெரியப்பா முறை ஆவார்கள்).
  6. சித்தி,சித்தப்பா - அப்பாவுடன் பிறந்த தம்பி , மற்றும் தம்பியின் மனைவி 
  7. பெரியம்மா, பெரியப்பா - அப்பாவுடன் பிறந்த அண்ணன் , மற்றும் அண்ணனின் மனைவி  
அவர்களுடைய பிள்ளைகளை வயதிற்கு ஏற்ப அக்கா,தங்கை, அண்ணன்,தம்பி என்று  அழைக்க வேண்டும்).
(வடமொழியில் ஞாதி என்றால் தெரிந்தவர்கள் என்று பொருள். அதாவது நமக்குத் தெரிந்து நம் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொருள்)

திருமண உறவுகளின் பெயர்கள் :
  1. மனைவி - பொண்டாட்டி (பெண்டு + ஆட்டி = பெண் தோழி என்று பொருள்), வாழ்க்கைத் துணை , ஆம்படையாள்( அகம் + உடையாள்  அதாவது தான் வீட்டிற்கு உடையவள் என்று பொருள்),தாரம்,அகத்துக்காரி, வீட்டுக்காரி.
  2. கணவன் - ஒரு பெண்ணின் துணைவன், ஆம்படையான் (அகம் + உடையோன் = தான் வீட்டிற்கு உடையவன் என்று பொருள்), புருஷன் (வடமொழியில் புருஷன் என்றால் ஆண் என்று பொருள்),அகத்துக்காரர், வீட்டுக்காரர்.
  3. மகன் /தனயன் - தான் பெற்ற ஆண் பிள்ளை
  4. மகள் - தான் பெற்ற பெண் பிள்ளை
  5. மாற்றுப்பெண் - தன் மகனின் மனைவி (மருமகள்)
  6. மருமகன் - தன் மகளின் கணவன் 
  7. மைத்துனன் - மனைவியின் சஹோதரர்கள். அல்லது கணவனின் மூத்த சஹோதரர்கள்.
  8. கொழுந்தன் - கணவனின் இளைய சஹோதரர்கள்.
  9. கொழுந்தியாள் - மனைவியின் இளைய சகோதரிகள்.
  10. மனைவியின் பெற்றோர்கள் - மாமா, மாமி
  11. கணவனின் பெற்றோர்கள் -  அத்தை / மாமா (ஆனால் ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்க்குப்பி பிறகு கணவனின் சொந்தங்கள் எல்லாம் தன்னுடையவர்கள் அவர்கள். எனவே ஓவர் பெண் தன்னுய மாமனார்/ மாமியாரை அப்ப/அம்மா என்று அழைப்பாப்டு நம் வசக்கம்).
  12. மாமனார் - மனைவி / கணவனின் தந்தை
  13. மாமியார் - கணவனின் / மனைவியின் அன்னை 
  14. சம்பந்தி - மகன் / மக்களின் துணையின் தந்தை. இதனை தமிழிலே கொண்டான்/கொடுத்தான் என்றும் சொல்லுவார்கள். ஆனால் இந்த வடமொழிச் சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப் படுகின்றது.
  15. சம்பந்தி அம்மா - மகன் / மக்களின் துணையின் தாய். 
  16. மதினி / அண்ணி - அண்ணன் மனைவி 
  17. மச்சினி - தம்பியின் மனைவி  / மனைவியின் மூத்த சகோதரிகள்
  18. நாத்தனார் /  நங்கையாள் - நாத்தி என்றால் கணவன் உடைய அக்கா / தங்கை. நங்கை என்றால் (கணவன் வீட்டில்) ப்ரிறந்த மங்கை / நங்கை என்று பொருள் படும்.
  19. ஓரகத்தி   / ஓருப்புடி - கணவன் அண்ணன் / தம்பியின் மனைவி 
  20. சடடகன் / சகலை / சஹாபடி - இது வடமொழில்ச் சொல்ல ஆகும். மனைவியின் அக்கா / தனைகளின் கணவன்.
  21. சக்களத்தி - (சக களத்திரா - தன்னுடைய கணவனை மணந்தவள் என்று பொருள்  வடமொழியிலே) தன் கணவனின் மற்றொரு மனைவி என்று பொருள்.




No comments:

Post a Comment