Saturday, July 23, 2016
திருக்குறள் கூறும் மஹாப்பெரியவரின் மகிமைகள்
நீத்தார் பெருமை என்ற தலைப்பிலே, நம்முடைய வள்ளுவர் எழுதினார். ஆனால் அது எல்லாம் , நம்முடைய மஹாப் பெரியவருக்குத் தான் பொருந்தும். பல நூறு ஆண்டுகள் கழித்து அவதாரம் பண்ணப் போகும் ஒரு மஹானைப் பற்றி நம்முடைய வள்ளுவர் எழுதி இருப்பார் போலும்.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
நீத்தார் என்னும் சொல்லுக்கு எல்லாவற்றையும் துறந்தவர் என்று பொருள் படும். இந்தக் குறளில் , வள்ளுவர் - துறவிகளின் திடமான மன உறுதி , வேதங்களில் புகழப் படும் என்று சொல்கிறார். அந்த வேதத்தையும், மதத்தையும் வளர்த்த மஹான், 100 வருடங்கள் வாழ்ந்து இந்தப் புவியைக் காத்தவர் நம்முடைய பெரியவர்.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
நான்காவது, ஆஸ்ரமம் - பிரம்மச்சர்யம், கார்ஹஸ்ப்த்யம், வானப்ரஸ்தம் என்ற மூன்றாயும் தாண்டி நிற்கும் அந்த சந்யாச ஆஸ்ரமம் மேற்கொண்டு, அந்த தர்மத்தைத் தழுவி நிற்கும் மஹான்களின் பெருமையை சொல்ல வேண்டும் என்றால் - இந்த உலகத்தில் இறந்தவர்களை எண்ணுவதை போலத் தான் என்கிறார் வள்ளுவர்.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
இம்மை - இந்த உலகம் வாழ்க்கை, மறுமை - மோக்ஷம் / பிரம்மானந்தம் ஆகிய இரண்டையும் அறுந்து, இந்த உலகம் எல்லாம் வெறும் மாயை என்று உணர்ந்து நிற்கும் ஞானிகளின் பெருமை இந்த உலகில் மிக உயர்ந்தது. இந்தத்தப் பெருமை நம்முடைய மஹாப் பெரியவரைத் தவிர வேறு யாருக்கும் சேராது என்பதில் எந்த ஐயமுமே இல்லை.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.
திடமான மன உறுதி என்ற அங்குசத்தைக் கொண்டு தன்னுடைய பஞ்ச இந்திரியங்களையும் அடக்கும் தன்மை உடையவன் - மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு வித்தாவான் . அதாவது - மனதையும், இந்திரியங்களையும் அடக்குவதே மோக்ஷம் என்று சொல்லப்படும் ஆத்ம ஞானம் பெற வித்து என்பது இதன் உட்பொருள்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
ஐந்து புலன்களையும் அடக்கித் தபசு பண்ணுகின்றவர்களின் பெருமைக்கு - இந்திரனே சரியான உதாரணம்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
இங்கு பெரியார் என்று மஹாப்பெரியவரைத் தான் சொல்கிறார் வள்ளுவர். செயற்கரிய காரியங்களை செய்கிறவர் பெரியவர் என்றும் மற்றவர்கள் எல்லாம் சிறியவர்கள் என்றும் சொல்லுகின்றார். இந்தக் கலியில் வேதங்களை எல்லாம் காப்பாற்றி உயிர்ப்பித்து, ஸ்தாபனம் பண்ணிய பெருமை நம்முடைய பெரியவருக்கே உரியதாகும்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
பஞ்ச இந்திரியங்களை எல்லாம் அடக்கி இருப்பவர்களைத் தான் இந்த உலகம் போற்றும். நம்முடைய மஹாப் பெரியவர், தனக்கு உணவின் மீது ஆசை வந்து விடக் கூடாது என்று வாரக் கணக்கில் வெறும் நெல் பொறியைத் தின்று கொண்டும், வெறும் தரையில் படுத்துக்க கொண்டும், தன்னுடைய இச்சைகளைக் கட்டுப்படுத்தினர். அவருக்கன்றோ எல்லாப்புகழும் சேரும்?
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
முற்றும் துறந்த மனிதர்களது , மொழி / சொற்பொழிவை , இந்த உலகத்திலே வேதங்கள் காட்டி விடும். அதாவது ஆத்மஞானம் உள்ளவர்களுடைய சொற்கள் எல்லாமே வேதத்திற்கும் , தர்மத்திற்கும் அனுகூலமாகவே இருக்கும். மகாபெரியவர் அந்த வேத வாக்யங்களையே தன்னுடைய உயிர்மூச்சாகக் கொண்டவர்.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
பலவிதமான சத்தகுணங்களைக் கொண்ட, சந்யாசிகள் கோபம், ஒரு க்ஷணம் கூட நிலைக்காது . அதாவது லோக்க க்ஷேமத்திற்காக, நன்மைக்ககாக, மற்றவர்களைக் கடிந்து கொள்ளும் மேன்மக்கள், கோபம் நன்மைக்காகவே உள்ள படியால் - ஒரு கேடும் விளைவிக்காது. மஹாப் பெரியவர் , தன்னுடைய சிஷ்யகோடிகளை எல்லாம் பெற்ற தயைப் போன்று கடாக்ஷிக்கும் படியினால், அவரது கோபம் லோக கல்யாணத்திற்க்காகவே இருக்கும்.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
பூரணமான ஞானம் பெற்ற பிராம்மணன் , பிரம்மத்தை உணர்ந்தவன் , எல்லா உயிர்களையும் அந்த பிரும்ம ஸ்வரூபமாகவே பார்க்கும்படியினால், எந்த உயிர்களையும் துன்புறுத்த மாட்டான். அதாவது, ப்ரஹ்ம ஞானத்தினால், அன்பு ஏற்பட்டு, எல்லா உயிர்களையும் தன்னுடைய அன்பு கண்ணோட்டத்தினால் பார்ப்பவன் உண்மையான ப்ராஹ்மணன் . மஹாப்பெரியவர் அல்லாது யாரை இது குறிக்கும்? ஹிந்துக்கள் மட்டும் அல்லாது மற்ற மதத்தவர்கள் எல்லாம் வந்து அவருடைய பாத தர்ஷனம் பண்ணி கொண்டு அவருடைய அனுகிருஹம் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு கருணை கடாக்ஷம் பண்ணும் மஹான் அவர்.
பவ சங்கர தேசிக மே சரணம் என்று சொல்லிக் கொண்டு மஹாப் பெரியவருக்கு அநேக கோடி நமஸ்காரன்களை பண்ணிக் கொண்டு இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.
Labels:
AdiShankara,
thirukkural
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment