Monday, July 10, 2017

ஸ்ரீமணியின் கவிதைகள் - மாண்டூக்ய உபநிடத சாரம்

ஓம் என்ற ஓரெழுத்து அதுவே தான் பிரம்மமே !
அகார உகார மகாரம்  ஓம்காரம் ஆகுமே !

அம்மூன்று  எழுத்துக்களையும் தாண்டி நிற்கும் அமைதி நிலைமை!
அதுவே தான் ஆகுமே தனிப் பிரமம்!

விழித்திருக்கும் நிலைமை அது அகரம் ஆகுமே!
அதுவே முதல் பாகம் அந்த  ஓம்காரத்தில்!

சொப்பன நிலை அது இரண்டாம் பாகம்
உகரம் அது ஆகுமே அந்த ஓம்காரத்தில்!

ஆழ்ந்த உறக்கம் தான் மூன்றாம் நிலைமை
மகாரம் அது ஆகுமே அந்த ஓம்காரத்தில்!

விழிப்பு  சொப்பனம் ஆழ்ந்த உறக்கம் ஆகிய இந்த
மூன்று நிலைகளுக்கும் சாட்சியாய் நிற்கும் அந்த நாலாம் பாகம்!

அந்த நாலாம் பக்கமே பிரம்மமும் ஆகிடும்!
அகார உகார மகாராதிகட்கு அப்பலாய் நிற்கும்
சப்தமும் அதுவே ஓம்காரத்தில்!

1 comment:

  1. Hello Sir,
    I live in Malaysia. I am studying upanishad via grantham - both to practice and understand the philosophy behind it. Sir, where can I get the grantha version of the following:-
    1. Nirusimhottra Upanishad
    2. Tharsanath
    3. Yogakundala Upanishad
    4. Askhmaliga
    Kindly let me know how can I reach you.
    Thanks
    Siva

    ReplyDelete