விரைந்து வந்தெந்தன் வினை தீர்த்த வள்ளல்
விஜயன் திருத்தாள் எந்தன் சென்னியதே!
ஜய ஜய ஜய என்று திக்கெட்டும் முழங்க ஜென்மம்
சாபல்லியம் செய்த மஹான் ஜெயேந்திரன் திருத்தாள் போற்றி!
ஆன்மாவாய் அறிவாய் அறமாய் என்னுளே இருந்து என்னை ஆட்கொண்ட
சோதி சந்திரசேகரன் திருப்பாதங்கள் தலையால் தாங்குவனே!
சுருதியும் மிருதியும் புராணமும் எடுத்துச்சொல்லி உபநிடதம்
தருவமுதை கலியில் எடுத்து சொன்ன என்னாசான் சங்கரன் திருத்தாள் வாழி!
வேதத்தை நான்காய் வகுத்து பிரத்தானங்கள் மூன்றென்றுரைத்து
மகாபாரதம் தானும் உரைத்த வள்ளல் வியாசன் தாள் போற்றினேன்!
வசுதேவன் மகனாகி கம்சன் சாணூராதியாரை அழித்து
தேவகியின் திருப்புதல்வன் கண்ணனே உலகாசிரியன்!
வடக்கிருந்து வள்ளல் வடமரத்தின் கீழே! வேதங்கள் நான்குறைதான்!
ஆன்மாவாய் ஈஸ்வரனாய் ஆசானாகி எங்கும் நிறைந்த தக்ஷிணாமூர்த்தியே என்னிறைவன்!
No comments:
Post a Comment