Sunday, September 30, 2018

நவராத்திரி கவிதைகள் - லலிதையின் பெருமை - II

திருமகளும் நாமகளும் கவரி வீசிடவே! சிறு மத்தகத்தில் கத்தூரி அணிந்து உறு ஞானம் ஆன்மாவாய் ஒளிரும் ஒரு இறைவி லலிதையே உலகன்னை! பெரு கீர்த்தி இம்மையில் தந்திடுவள்! உறு பிரம சாயுச்சியம் மறுமையில் ஒரு இடையில் ஒட்டியாணம் மின்ன திரு பாதங்கள் வணங்கினர் தேவர்கள்! ஒரு பிள்ளைக்கு பாலூட்ட வந்தாள் பெரு தனங்களில் பால் வழிய! திருப்பாதங்கள் தலையில் வைத்த கரு மாணிக்க கண்ணாள் லலிதையே! ஒரு பொருளாய் வேதம் போற்றிடும் ஒரு நிலையாய் வீடு தந்திடும் உறு பத்தர்கள் பெருவினை தீர்த்திடும் ஒரு இறைவி என்னன்னை லலிதையே ! ஒரு மனதாய் தியானித்து நானும் இரு பொருளாய் இருந்த ஜீவஈசுவரனை ஒரு நிலையாய் கண்டேனே ! என்னம்மா ! பெருநிதி உன்னைப்போல் உண்டோ இவ்வுலகில் ?

No comments:

Post a Comment