Sunday, February 16, 2020

மனு கூறும் வாழ்வியல் - அத்தியாயம் 11

நாளைக்கொரு கவளமாய் தேய் பிறையில் குறைத்தும்
வளர்பிறையில் கூட்டியும் உண்டு முப்பொழுதும்  நீராடி

சந்தியா கருமங்களை செய்தலே சந்திராயணம் எனும் நோன்பே!
பருகா பாலும் உண்ணா உணவும் உண்டோர்கள் பாவம் தீர்க்கும் !

மனு சொன்ன நோன்புகள் பலவற்றுள் முக்கியம் சந்திராயணம்
வெங்காயம் பூண்டு காளான் இவைகள் உட்கொண்ட பாவந் தீருமே!

வேள்வி செய்த மிகுதியை மதியத்தில் எட்டு கவளம் மாதம்
முழுதும் உண்பதே யதி சந்திராயணம் எனும் நோன்பு

காலை மாலை இருவேளைகள் நான்கு கவளங்கள் மாதம்
முழுதும் உண்பதே சிசு சந்திராயணம் எனும் நோன்பு

இப்படியாய்  மாதத்தில் இருநூற்று நாற்பது கவளங்கள்
உண்போர் சந்திரன் தன உலகத்தில் வாழ்வார்கள்!

உருத்திரர் வசுக்கள் மருத்துக்கள் மகரிஷிகள் எல்லாரும்
நோற்றனரே இந்நோன்பு தம் பாவங்கள் எல்லாம் தீர்ந்திட!

மஹாவியாகிருதிகள் ஓதி வேவியால் வர உணவை உண்டு
பொய் பிரட்டு கோபமின்றி அஹிம்சை ஆச்சரிப்பர் புண்ணியர்

இரவில் மும்முறையும் பகலில் மும்முறையும் நீராடி ஆடை உடுத்து
பெண்டிர் கீழ்மக்கள் இவர்பால் பேசாமல் நாள் நோன்பை நோர்ப்பரே!

பகலில் நின்றும் இரவில் இருந்தும் வெறும் தரையில் கிடந்தும்
மாணவர் போல் இருந்து யஹ்ர்வர்கள், பார்ப்பனர், ஆசிரியரை பூசிப்பரே

சாவித்திரி என்னும் காயத்திரி எப்பொழுதும் சொல்லி புண்ணியாஹம் தானும் சொல்லி  விரதம் ஆச்சரிப்பரே !

குற்றமுணர்ந்து மனம் வருந்தி தானங்கள் பலசெய்து
வேதங்கள் தானோதி பாவம் விலக்குவர் புண்ணியர்!

குற்றம் புரிந்தவர் மனம் வருந்தி இனி ஒருமுறை இக்குற்றத்தை
செய்யேன் என்றெண்ண அக்குற்றத்தின் பழிநீங்கி புண்ணியர் அவரே!

அறிந்தும் அறியாதும் ஒருமுறை குற்றம் செய்வோர்
குற்றத்தின் பழிநீங்க மீண்டும் அதனை செய்யாரே!

வள்ளுவன் தருநூலுக்கும்  சாரமாகி அறத்திற்கு இலக்கணமாகி வேதப்பொருளும் மேன்மக்கள் மரபும் கூறும் மிருதி என்னும் மனு நூலே!

அறிவே பார்ப்பார் தவம் காதலே அரசர் தவம் பொருளீட்டலே
வணிகர் தவம் மற்ற மூவர்க்கும் சேவை செய்தலே ஏனையோர் தவம்!



மனு சொல்லும் நீதியே நம் சமூகத்தின் மூலம்
அறநூல் அனைத்தும் மனுவின் நூலில் அடங்கும்!


No comments:

Post a Comment