உதிக்கும் கதிரவன் பிணத்தின் புகையும் உடைந்த
இருக்கையும் யாத்திரைக்கு ஆகா சகுனங்கள்
நகத்தால் புல்லை கிள்ள்ளாதே காலால் நிலத்தை கீராதே
நகத்தை பல்லால் கடிக்காதே இம்மூன்றும் அழிவிற்கு வித்தாகும்
காளைகள் பாற்பசுக்கள் முதுகின் மேல் சவாரி செய்யாதே
பூமாலை தலைமுடி மேல் அணியாதே கழுத்தை நெரித்தல் கூடாது
இரவில் மரத்தடிக்கு அருகாமையில் இருக்காதே, உறங்காதே
கிராமம் வீடுகளின் முன்வாசல் வழியாகவே நுழைதல் வேண்டும்
சூதாட்டம் ஆடாதே படுக்கையில் படுத்து உணவினை உண்ணாதே
கையில் இட்ட மற்றும் இருக்கையில் வாய்த்த உணவினை உண்ணாதே
எள்ளினால் செய்த பண்டம் இரவி அத்தமனத்திற்கு பின் உண்ணாதே
நக்கினமாய் உறங்காதே சுத்தமற்ற இடத்திற்கு செல்லாதே உண்ட பின்பே
கால்களை கழுவி ஈரம் காயும் முன்பே உணவினை உண்ணுதல் வேண்டும்
ஈரக் கால்களுடன் படுக்கைக்கு செல்லாதே !
ஈர கால்களுடன் ஈரம் காயுமுன்பே உணவினை உண்டு முடிப்பார்
இந்த தரணியில் வாழ்வர் பல்லாண்டு இதுவே நம் நாட்டின் மரபு !
கைகளால் நீந்தி ஆற்றினைக் கடக்காதே ! மல சலங்களை
கண்களால் உற்று நோக்காதே! குறுகிய இடத்தில நுழையாதே!
தலை முடி சாம்பல் எலும்புடன் பருத்திக்கொட்டை உடைந்த
மண் பாண்டம் உமி இவற்றை மிதியாரே நீண்ட ஆயுள் வேண்டுவோர்கள்!
நயவஞ்சர்கள் புலையர் சண்டாளர்கள் மூர்க்கர் முட்டாள்கள்
கடை குலத்தோர் இழிகுலத்தோர் இவர்களுடன் வசிக்காதே!
கடை குலத்தோர் இழி மக்கட்கு அறிவுரைகள் வழங்கிடுதல் கூடாது
மனு உரைத்த அற நெறியை கடை குலத்தோர்க்கு கூறுதல் கூடாது
கடை குலத்தோர்க்கு அற நெறியை எடுத்துரைத்தும் விரதங்கள்
பலவற்றை அவர்கட்கு சொல்லும் மாந்தர் அசமவிருத்தம் என்னும் நரகிற்க்குள் வீழ்ந்து ஒழிவரே!
தலை முழுகாமல் நீராடாதே அசுத்தமாய் இருக்கும் வேலையில் தலையை தொடாதே
இரண்டு கைகளையும் சேர்த்து தலையை சொரிந்திடல் கூடாது
கோபத்தால் தலை மயிரை பிடித்திழுக்க கூடாது
தலை முழுகி குளித்த பின்பு எண்ணெயால் கைகால்களை தொடாதே !
No comments:
Post a Comment