Friday, February 7, 2020

மனு கூறும் வாழ்க்கை முறை

ஒற்றை ஆடையில் உணவருந்த வேண்டாம் நக்கினமாய் ஆடையின்றி நீராடல் கூடாது மக்கள் நடக்கும் பாதையிலும், சாம்பல் மீதும் , மாட்டு கொட்டிலிலும், உழுத நன்னிலத்திலும், மலை மீதும், செங்கல் சூளையிலும் ,உடைந்த கோயில் மீதும் எறும்பின் புற்றதன் மீதும் உயிரினங்கள் வாழும் பொந்துகளிலும் நீர் நிலைகள் மீதும் காற்றடிக்கும் திசை நோக்கியும் பார்ப்பனர் தீயவற்றை நோக்கியும் நதிகள் தம் கரைகளிலும் மலையதன் உச்சியிலும் பசு பார்ப்பார் ஆதித்யன் காற்று நீரிவற்றை நோக்கியும் பகற் பொழுதில் வடக்கு நோக்கியும் இரவில் தெற்கு திக்கை நோக்கியும் மல மூத்திரங்கள் கழித்திடல் கூடாது பசு பார்ப்பார் சூரியன் தீயுடன் நீர் காற்றிவற்றை நோக்கி சிறுநீர் கழிப்போர் அறிவு தேய்ந்து அழிந்திடுமே! தீயை வாயால் ஊத்தி அணைத்திடலும் ஆடையில்லா பெண்மணியை பார்த்தலும் அசுத்தமானவற்றை தீயினுள் எரிதலும் பாதத்தை தீயால் சூடு செய்தலும் கட்டிலுக்கடியில் அக்கினியை வைப்பதும் கால்மாட்டில் சூட்டிற்காய் தீயை வைப்பதும் தீயை மிதித்து நடப்பதும் உயிரினங்கள் மற்றவற்றை துன்புறுத்தலும் தருமம் உணர்ந்தோர் செய்யா செயல்களே! மனு சொல்வான் நீதியினை உணர்ந்திடுவீர் மாந்தர்களே! அந்தி சந்தி வேளையில் உணவினை உண்ணுதலும் , உறங்குதலும் , யாத்திரை செல்லுதலும் , நிலத்தை கீறுவதும், தானணிந்த பூமாலை தன்னை கழட்டுவதும் செய்தற்காகா செயல்களே என்றுரைத்தான் மனு இதனை அறிந்திடுவீர் மனிதர்களே! பாழடைந்த வீடதானில் உறங்குதல் ஆகாது ஆழ்நிதிரையில் இருப்போரை எழுப்புதல் ஆகாது தான் புரோஹிதனாக இல்லா வேள்விக்கு செல்லுதல் ஆகாது விடாய் காலத்தில் உள்ள பெண்டிருடன் உரையாடல் ஆகாது! பசு பார்ப்பார் சந்நிதியில், புனித வேள்வி கூடம் மற்றும் உணவருந்தும் நேரத்து வலது கையை திறந்து வைத்திடல் வேண்டும்! பாலருந்தும் கன்றுக்குட்டியை இடையூறு செய்யாதே! பாலருந்தக் கண்டாலும் யாரிடமும் சொல்லாதே! வானவில்லை கண்டாலும் மற்றோரிடத்தால் சொல்லரே ! வானவில்லை மற்றோக்கு சுட்டி தான் காட்டரே அறிவுடையோர்! மனு உரைத்த புனித நன்னூல் சாத்திரங்கள் மதியாத ஊரதனில் வாழ்ந்திடல் கூடாது! மலையின் அடிவாரத்திலும் தீராத நோய்கள் தொற்றி பரவும் கிராமத்திலும் வாழ்ந்திடல் ஆகாது! மந்திர பூணல் அணியாதவர்கள் இருபிறப்பாளர்கள் அல்லாதவர் அரசராய் ஆளும் நாட்டிலும் இழிமக்கள் அரசனை சூழ்ந்த நாட்டிலும் இழிமக்கள் பெரும்பாலராய் இருந்திடும் நாட்டிலும் வாழ்ந்திடல் வேண்டாமே! எண்ணெய் எடுக்கப்பட்ட பிண்ணாக்கை உண்ணுதல் கூடாது அதிகாலை வேளையிலும் இருட்டிய சாயங்காலத்திலும் உணவருந்துதல் கூடாது ! கைகளிரண்டும் சேர்த்து தண்ணீர் குடிக்காதே! வெண்கலத்தின் பத்திரத்தால் காலை கழுவாதே ! உணவு தட்டை மடியில் வைத்து உண்ணாதே ! உடைந்த மண் பாண்டத்தில் உணவுண்ணாதே! மற்றொருவர் உபகோயிந்த செருப்பும், காலணியும், துணிமணிகளும், தண்ணீர் சொப்பும்,அணிகலனும், பூணூலும், பூமாலையும் தான் தரித்தல் கூடாது!

No comments:

Post a Comment