Friday, February 7, 2020

மனு தன் சந்ததிகள்....

மனு தன் சந்ததிகள் என்பதால் தான்
நம்மை மனுஷ்யர்கள் என்பார்கள் உலகினிலே

மானிடர்  என்றும் மானவர் என்றும் உலகின் பற்பல
மொழிகளில் சொல்வர் அனைத்திற்கும் மூலம் மனு என்னும் முப்பாட்டானே!

அறத்திற்கும் ஆதியாம் வேதங்கள்  வேதங்களே உலகனைத்திற்கும்
மூலம்! உலகனைத்திலும் அறத்திற்கு மூலம் வேதமே!

மனு உரைத்த சாத்திரங்கள் அனைத்திற்கும் வேதமே சாரம்
முக்காலம் உணர்ந்தவன் சர்வஞானம் படைத்தவன் மனுவே!

மனுவே இந்த மனித குலத்தின் முப்பாட்டன்! உலகம் தன்னை
படைத்த பிரமன் மனுவை படைத்தான் மாந்தர்களை பெற்றிடவே!

மனுக்கள் பலருந்து அவர்களுள்  சுவாயம்புவ மனுவே
சூரியன் இடத்தில தோன்றி நம் சாத்திரத்தை உரைத்தானே!

ஆதியான வேதங்களும் அதன் பின்பு வேதியர்கள் தம் மரபும்
மேன்மக்கள் புண்ணியர் தம் மரபும் தன் மகிழ்ச்சியும் சாத்திரத்தின்  மூலம்!

அறத்தின் சாத்திரங்களை மதித்து அதன் படி வாழும் மக்கள்
இகத்தில் சுகங்களும் பரத்தில் பேரானந்தமும் பெறுவார்கள் இது சத்தியம்!

சுருதி என்பர் வேதத்தை மிருதி என்பர் தரும சாத்திரத்தை
இவ்விரண்டும் தரும் இவ்வுலகில் மகிழ்ச்சியும் அவ்வுலகில் அருளும்.

சுருதியும் மிருதியும் இவ்விரண்டும் மானிடர் தம் வாழ்விற்கு மூலம்
இவ்விரண்டும் சொல்லும் வழி வாழ்வார்கள் மேன்மக்களே!

ஆதியாம் வேதம் என்னும் சுருதியும் தரும சாத்திரம் என்னும் மிருதியும்
மேன்மக்கள் தம் மரபும் வாழ்வின் மகிழ்ச்சியும் இவையே அறத்தின் நான்கு தூண்கள்!

சிற்றின்பம் பொருளும் கண்டு மயங்காத மாந்தர்கள் தரும சாத்திரம் படிப்பார்கள்
தரும சாத்திரம் கற்கும் புண்ணியர்க்கு என்றென்றும் வேதமே பிரமாணம்!

சுருதியும் மிருதியம் இவ்வரண்டும் அனைவர்க்கும் இருகண்கள் போலாகும்
அவ்விரண்டும் முரண்படுமே ஆயின் இரண்டுமே பிரமாணம் என்றுரைப்பார் மேன்மக்களே!

No comments:

Post a Comment