மேன்மக்கள் புண்ணியர் என்றும் அந்நாட்களை தவிர்ப்பரே!
மாதத்தில் நான்கு நாட்கள் பெண்டிர்க்கு தீண்டா நாளும்
தேய்பிறையும் வளர்பிறையும் ஏகாதசி திரயோதசி இவையும்
முக்கியமான நாட்கள் அவைகளே கலவியிலா நாட்கள்
மேன்மக்கள் என்றும் அவற்றை தவிர்ப்பர் புண்ணியர்
அமாவாசை பவுர்ணமியுடன் அட்டமி நவமி இவைகள்
கலவிக்காக நாட்கள் ஆறு என்றுணர வேண்டும்
மேற்சொன்ன பதினான்கு நாட்கள் ஒழிந்து மற்ற
பதினாறு நாட்கள் மட்டும் சிற்றின்பம் காண்போர்
இல்வாழ்வார் ஆயினும் பிரம்மச்சாரிக்கு ஒத்த புண்ணியர்
மனு கூறும் நாள் சாத்திரம் இவை என்று உணர்வர் புண்ணியர்.
ஐம்பொறி அடக்கி அறத்திற்காய் வாழ்வதே இல்வாழ்க்கை
தருமம் உணர்ந்த புண்ணியர் வாழ்க்கை முறை இதுவே!
மனு சொன்ன நீதியே இத்தரணியின் மூலம்!
வேதம் விளைந்த மண்ணின் சாத்திரம் இதுவென்று உணர்வோம் நாமே!
No comments:
Post a Comment