கல்வி என்பது அறிவு. நம் தமிழ் கிரந்தங்களில் , தொன்மையானது தொல்காப்பியம் - படித்து மே சிலிர்க்க வாய்த்த விஷயங்கள்.
சிதலும் எறும்பும் மூ அறிவினவே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.
கரையானும், இருமும் மூன்று அறிவுள்ள பிராணிகள் என்கிறார் தொல்காப்பியர்.
அந்த மூன்று அறிவுகள் என்ன என்றால், அதற்கும் அவரே விளக்கம் தருகின்றார்.
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;
நாவு, மூக்கு, பரிசம் (தொடுதல்/ உணர்ச்சி) - ஆகிய மூன்றும் உள்ளவைகள் எறும்பு மற்றும் கரையான் என்கிறார்.
என்ன அற்புதம் பார்த்தீர்களா? வீனா வம்பு பேசி வெள்ளை புலையர்கள் சொன்ன திராவிடத்தை நம்பி அழிந்து போன அறியவாளிகளுக்கு , உண்மைத்தமிழரின் பண்பாடும் வைதிக முறையும் ஒரு என்று உணர்த்தும் உன்னதமான நூல் தொல்காப்பியம்.
Showing posts with label tholkappiyam. Show all posts
Showing posts with label tholkappiyam. Show all posts
Sunday, April 28, 2019
Monday, August 13, 2018
கபிலை கண்ணிய வேள்விநிலை...
பிராம்மணர்கள் யாகம் செய்ய வேண்டி , அரசனை அணுக, அரசர்கள் காராம்பசு என்னும் கபிலை மற்றும் பொன்னும் பொருளும் தருவதை வேள்வி நிலை என்னும் செய்யுள் வகை என்று கூறுகின்றார் தொல்காப்பியர்.
கபிலை கண்ணிய வேள்விநிலையும் - கபிலையைக் குறித்த வேள்விநிலையும்.
உதாரணம்
பருக்காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக்
குருக்கண் கபிலை கொடுத்தான் - செருக்கோடு
இடிமுரசத் தானை இகலிரிய எங்கோன்
கடிமுரசங் காலைச்செய் வித்து
கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்,
அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்,
சேய் வரல் வருத்தம் வீட வாயில்
காவலர்க்கு உரைத்த கடைநிலையானும்,
கண்படை கண்ணிய கண்படை நிலையும்,
கபிலை கண்ணிய வேள்வி நிலையும்,
வேலை நோக்கிய விளக்கு நிலையும்,
வாயுறை வாழ்த்தும், செவியறிவுறூஉவும்,
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்,
கைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇ,
தொக்க நான்கும் உள' என மொழிப
கபிலை கண்ணிய வேள்விநிலையும் - கபிலையைக் குறித்த வேள்விநிலையும்.
உதாரணம்
பருக்காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக்
குருக்கண் கபிலை கொடுத்தான் - செருக்கோடு
இடிமுரசத் தானை இகலிரிய எங்கோன்
கடிமுரசங் காலைச்செய் வித்து
கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்,
அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்,
சேய் வரல் வருத்தம் வீட வாயில்
காவலர்க்கு உரைத்த கடைநிலையானும்,
கண்படை கண்ணிய கண்படை நிலையும்,
கபிலை கண்ணிய வேள்வி நிலையும்,
வேலை நோக்கிய விளக்கு நிலையும்,
வாயுறை வாழ்த்தும், செவியறிவுறூஉவும்,
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்,
கைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇ,
தொக்க நான்கும் உள' என மொழிப
Labels:
Tamil,
tholkappiyam
தொல்காப்பியம் என்னும் நூல்....
- தொல்காப்பியம் என்னும் நூல் தமிழ்மொழியில் உள்ள நூல்களிலெல்லாம் மிகப் பழைமையும் பெருமையும் வாய்ந்த இயல் நூலாகும். பண்டைக்காலத்து தமிழ்ப் பழங் குடிகளுள் ஒன்றான காப்பியக்குடியிற் பிறந்து சிறந்தோர் ஒருவராற் செய்யப்பட்டமையின், இஃது இப்பெயர் பெற்றது. காப்பியஞ் சேந்தனார் என்று பெயர்கொண்ட ஒரு புலவர் நற்றிணையில் ஒரு செய்யுளைப் பாடினோராகக் காணப்படுகின்றார். காப்பியாற்றுக் காப்பியனார் என்பது பதிற்றுப்பத்துள் ஒரு பத்தைப் பாடிய புலவர் பெயர். இவற்றாலும் காப்பியம் என்பது தமிழ்நாட்டோடே தொடர்புற்றுத் தமிழ்க்குடியைக் குறிப்பதாகவே அறியப்படும். தொல்காப்பியர் தமிழ்முனியாகிய அகத் தியர் இயற்றிய அகத்தியத்தை நிலைகண்டுணர்ந்தே இந்நூலைச் செய்தனர். இதை,
"ஆனாப் பெருமை அகத்திய னென்னும்
அருந்தவ முனிவன் ஆக்கிய முதல்நூல்
பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர்
நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்."
எனப் பன்னிருபடலப் பாயிரம் கூறுமாற்றால் தெளிக. இவர் சங்கம் வளத்த முதற்குடியிற் றோன்றிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து இந்நூலை அரங்கேற்றின ரென்பதும், அதங்கோட்டாசான் என்ற புலவர்பெருமான் முன் அது நிகழ்ந்த தென்பதும் இந்நூற் பாயிரத்தால் தெள்ளிதின் உணரப்படும்.
இவர் காலம் வடமொழி வியாகரணம் இயற்றிய பாணினியின் காலத்துக்கு முற்பட்ட தென்பது பெரிதும் கருதத் தக்கது. தொல்காப்பியப் பாயிரத்திலேயே "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என இவர் சிறப்பிக்கப்படுகின்றார். வட மொழிக்கு ஐந்திரம் என்ற இலக்கணமே முற்பட்டிருந்த தென்பதும், அதற்குப் பின்னேயே பாணினீயம் தோன்றிய தென்பதும் வடநூலாரும் ஒப்பும் உண்மையாகும். ஆதலின் தொல்காப்பியம் பாணினியின் வடமொழி வியாகரணத்துக்கு மிகவும் முற்பட்ட தென்பது தெளிந்த துணிபன்றே? "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என இவர் சிறப்பிக்கப்படுதற்குக் காரணம் என்னை எனின், தமிழ்மொழிக்குப் பேரிலக்கணம் செய்யப் புகுந்த இவர், அக்காலத்துச் சிறந்து விளங்கியிருந்த மற்றொருமொழியான வடமொழி இலக்கண வமைதியையும் நிலைகண்டுணர்ந்து இருமொழி அமைதியையும் அறிந்தமைந்த உரவோர் ஆயதைத் தெரிவிக்கவேண்டி என்க. மற்று இவர் வடமொழி இலக்கண மறிந்தமை கூறப்பட்டதன்றி, அகத்தியம் முதலிய தமிழிலக்கண நூலுணர்ச்சி பாயிரத்தில் குறிக்கப்பட வில்லையெனின், அப் பாயிரமே முற்பகுதியில் 'முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப்- புலந்தொகுத்தோனே போக்கறு பனுவல்' எனத் தெள்ளிதின் உரைத்தமையால், தங்காலத்துக்கு முற்பட்ட தமிழிலக்கண நூல் முழுவதும் அவர் கண்டவர் என்பதும், அந் நூற்பொருள் முழுவதையும் தாம் முறைப்படுத்தினர் என்பதும், விரிந்து கிடந்த அந்நூற்பொருளை எல்லாம் தம் அஃகியகன்ற அறிவால் தொகுத்துக் கூறினர் என்பதும், ஆதலின் இங்ஙனம் செய்த நூல் எவ்வகைக் குற்றமுமற்று விளங்குவதென்பதும் தெளிய உணர்த்தப்பட்டன.
நூல் என்பது இக்காலத்து இலக்கண இலக்கியங்களை யெல்லாம் குறிப்பினும், முற்காலத்து இலக்கண நூலையே வரைந்து குறித்ததாகும். நச்சினார்க்கினியரும் 'முதுநூல் அகத்தியமும் மாபுராணமும் பூதபுராணமும் இசைநுணுக்கமும்" என உணர்த்தியமை காண்க. பிற்காலத்துப் பவணந்தியால் செய்யப்பட்ட நன்னூலின் சிறப்புப் பாயிரத்தில்
".......முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்."
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
என இலக்கியங்க ளெல்லாம் செய்யுள் என்று குறிக்கப்பட்டுப் போந்தமையால், நூல்என்பது இலக்கணத்தையே வரைந்துணர்த்திற்றென்பது தெளிவு.
ஆகவே, உலக வழக்கை யுணர்ந்து, பண்டைத் தமிழிலக்கியங்களை யாராய்ந்து, எழுத்து, சொல், பொருள் என்பவற்றின் அமைதிகளை யுணர்ந்து, சிறந்த அகத்திய முதலாய இலக்கணங்களையும் தெளிந்து, இந்நூலைச் செய்தனர் தொல்காப்பியர் என்பது தெளியப்பட்ட உண்மையாம்,.
எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றும் மூன்றதிகாரத்தால் கூறப்படுகின்றன. எழுத்தும் சொல்லும் தமிழ் மொழியின் அமைதியை விளக்குவன. பொருள் அத்தமிழ்
மொழி வழக்கிற்கு நிலைக்களனாயுள்ள தமிழரது ஒழுக்கத்தை எடுத்துக் காட்டுவதாகும்.
இப்பொருளதிகாரம், தமிழரே உலகத்தோற்றத்தில் முதற்கண் நிலைபெற்ற பண்டைப் பெருங்குடியின ராவரென்பதைத் தெளிய உணருமாறு உரைத்துச் செல்கிறது. குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலப்பகுப்பு மக்கள் வாழ்க்கையிடம் படிப்படியாக மாறிய முறையையே தெரிவிப்ப தாகுமன்றே? உலகத்தே முதலில் மக்கள் மரஞ் செறிந்த மலையிடத்தேயே தோன்றி, எதிர்ப்பட்ட விலங்குகளைக் கொன்றுண்டு வாழ்க்கை நடாத்திப், பின் காலப்போக்கில் முல்லை நிலத்தே வந்து தங்கி, வரகு முதலியன வித்திப் பயன்கொண்டு வாழ்ந்து பின் மருத நிலத்தே ஆற்று நீரைத் தேக்கிப் பயன் கொண்டு, மேம்பட்ட உழுதொழில் செய்து வாழ்ந்து, பின் பல்வகைத் தொழிலும் பெருக்கி, நெய்த னிலத்தே பட்டின மமைத்துக் கடல் கடந்து நாவாய் மூலம் சென்று வாணிகம் புரிந்து மேம்பாடுற்றமை வரலாற்றுண்மையன்றே?
கல்தோன்று மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி. (புற-வெ-2-14) என்று கூறிக் குறிஞ்சி நிலத்தையே மக்கட்டோற்றத்திற்கான முதலிடமாகக் குறிப்பிட்டமையும் காண்க.
மக்கட்பெருக்கத்துக்குக் காரணமாயிருந்த இத் தமிழ்க் குடியினரிடத்தே, அத்தன்மைக் கேற்பக் காதலும் வீரமும் சிறந்திருந்தமையும், அவ்விரண்டையும் நுனித்தறிந்து
வரையறை செய்து நன்முறையில் ஒழுகிவந்ததையுமே பொருளதிகாரம் விரித்துப் பேசுவதாகும்.
காதலொழுக்கத்தை நுனித்தறிந்த தமிழர், அதைப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்றே வகையாக வகுத்துரைத்தனர். இவை எந்நிலத்தும் நிகழுமாயினும் நாடகவழக்கினும் உலகியல்வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கத்தால், இடம் காலம் முதலியவற்றுட்படுத்துக் கூறப்பட்டன.
வீரவுணர்வு மிகுந்த தமிழர், அவ்வீரத்தை அறநெறி வழுவாது ஓம்பிப் போற்றிய வகையும், அவர்கள் வீரத்தின் மேம்பாடும் வகைப்படுத்தி உரைக்கப்பட்டன.
பொருளதிகாரம் இவற்றை அகவொழுக்கம், புறவொழுக்கம் என்று கூறுகிறது. இவற்றைச் சிறந்தெடுத் துணர்த்துவதே அகத்திணை இயல், புறத்திணை இயல் என்ற இரண்டுமான இப் பொருளதிகாரப் பகுதியாம். அகவொழுக்கமாயிற்று, இரு பாலாருள் ஒருவரோடொருவர் மனமொன்றிய காதலொழுக்க மாதலின். புறவொழுக்கமாயிற்றுச், சிறப்பாகப் பிறரின் மாறு பாட்டு அறமும் பொருளும் கருதித் தோன்றும் போரொழுக்க மாதலின். அகவொழுக்கமல்லாத பிறவொல்லாம் இப்புறவொழுக்கத்தில் அடங்கும்.
அகத்திணை இயல், தமிழர் வாழும் நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் (பாலை) எனப் பகுக்கப்படு மென்பதும் அவ்வந்நிலத்தில் இன்னின்ன காலங்கள் சிறந்தன வென்பதும், அவ்வந்நிலத்து வாழ் மக்கள் குறவர், இடையர், உழவர், பரதவர், எயினர் எனப்படுவர் என்பதும். அவ்வந்நிலத்துத் தெய்வம், உணவு, விலங்கு, பறவை, மரம், பறை, செய்தி, யாழ் முதலியன வேறுவே றென்பதும், மக்கள் காதலொழுக்கத்தில் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்னுமைந்தும் நிகழுமென்பதும், மக்கள் கல்வி, பகை தூது, பொருள் என்பன பற்றில் காதலியைப் பிரிவரென்பதும், பிரிவின்கண் நற்றாய், செவிலித்தாய், தோழி, கண்டோர், தலைவன் என்போர் கூறுமுறை இவை என்பதும், காமஞ்சாலா இளமையோள் மாட்டுக் காதல்புரியும் கைக்கிளையினியல்பு, கழிபெருங் காமுகராய் ஒழுகும் பெருந்திணை இயல்பு இவை என்பதும் கூறுகின்றது.
இனிப் புறத்திணை இயல், பகையரசர் நாட்டிலுள்ள பசுக்களுக்குத் தீங்குவராமற் காத்தல் அறமெனக் கருதிப், போர் கொண்டெழுதற்கு முன் வெட்சிப்பூச் சூடிச் சென்று, அப்பசுக்களுக்கு ஓரிடையூறும் உண்டாகாவண்ணம் கவர்ந்து வரும் முறைகளும், பகைவர் அரணை அடைந்து உழிஞைப்பூச் சூடி அவ்வரணிடத்து நின்று போருடற்றி, அரணைத் தம் வசப்படுத்தும் முறைகளும், மாற்றாரும் எதிர்ந்து வந்துழித், தும்பைப்பூச் சூடி அவரோடு போர்புரியும் முறைகளும், வென்றவழி வாகைப் பூச் சூடி வெற்றியைக் கொண்டாடும் முறைகளும் இவையன்றிப் பார்ப்பார், அரசர், வேளாளர், அறிவர், தாபதர், பொருநர் என்போர் சிறந்து மேம்படும் முறைகளும், நிலையா உலகத்தியல்பும், பிறர் மேம்பாட்டைப் புகழ்ந்து பாடும் முறையும் கூறுகின்றது.
காதலைத் தூயமுறையில் நுனித்தறியும் பேருணர்வுடன் உலகில் தோன்றிய பழங்கால மக்கட் கூட்டத்தினரிடையே மேம்பட்டுத் தோன்றுதற்கான குணமாய வீரவுணர்வும் வாய்ந்த நனிநாகரிகர் தமிழ்மக்கள் என்பதை யுணர்த்தும் இத் தொல்காப்பியம், தமிழரின் பழம் பண்பாட்டை யுணர்த்திய ஒரு தனிப்பெரு நூலாயது பெரிதும் உணரத்தக்கது.
Sunday, August 12, 2018
தொல்காப்பியம் வாருணாச்சிரமம்
தொல்காப்பியம் வகுத்த திருணதூமாக்கினி, வாருணாச்சிரம தருமமே தமிழர் மரபு என்பதை தெள்ள தெளிவாக கூறிய பிறகு, மூத்திர சட்டி கன்னடத்தான் சொல்லும் பொய்களை அரங்கேற்றிய திருட்டு கூட்டங்களை வேரறுக்க வேண்டும். தரும சாத்திரம் கூறும் மரபே தமிழர் மரபு என்பதும், ஆரியர் திராவிடர் என்னும் சொற்கள் வெள்ளைக்காரர்களால் ஏற்படுத்தப்பெற்ற பாகுபாடே என்றும் தெள்ள தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கோயில் பார்ப்பனர்களின் நூலை அறுக்கும் கோழைகளின் கவனத்திற்கு: தொல்காப்பியர் காலம் தொட்டே - பிராம்மணர்கள் - யக்னோபவீதம், தண்டம், ஜல பாத்திரம், ஆசனம் - இவைகளுடன் தான் இருந்தனர் என்பதற்கு ஆதாரம்.
615.நூலே, கரகம், முக்கோல், மணையே,
ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய. உரை
616.படையும், கொடியும், குடையும், முரசும்,
நடை நவில் புரவியும், களிறும், தேரும்,
தாரும், முடியும், நேர்வன பிறவும்,
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய.
622. வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.
625. வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது,
இல்' என மொழிப-'பிறவகை நிகழ்ச்சி'.
கோயில் பார்ப்பனர்களின் நூலை அறுக்கும் கோழைகளின் கவனத்திற்கு: தொல்காப்பியர் காலம் தொட்டே - பிராம்மணர்கள் - யக்னோபவீதம், தண்டம், ஜல பாத்திரம், ஆசனம் - இவைகளுடன் தான் இருந்தனர் என்பதற்கு ஆதாரம்.
615.நூலே, கரகம், முக்கோல், மணையே,
ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய. உரை
616.படையும், கொடியும், குடையும், முரசும்,
நடை நவில் புரவியும், களிறும், தேரும்,
தாரும், முடியும், நேர்வன பிறவும்,
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய.
622. வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.
625. வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது,
இல்' என மொழிப-'பிறவகை நிகழ்ச்சி'.
Saturday, August 11, 2018
தொல்காப்பியமும் வருணாசிரம தருமமும்...
தர்ம சாஸ்திரங்களில் சொல்ல பெற்ற வருணாசிரம தருமங்கள் தொல்காப்பியத்தில் தெள்ள தெளிவாக சொல்ல பட்டுள்ளது.எனவே தமிழர் மரபும், தரும சாஸ்திரமும் வேறன்று. வருணங்கள் மட்டுமே வேதத்தில் உதித்தவை - சாதிகள் அல்ல. தமிழிலக்கண நன்னூலாக்கிய தொல்காப்பியம், மரபியல் என்னும் பகுதியில் வர்ண தருமங்களை கூறுகின்றது.
615 நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய.
நூலூம் கரகமும் முக்கோலும் மணையும் ஆராயுங் காலத்து அந்தணர்க்கு உரிய என்றவாறு.
பார்ப்பனர்களுக்கு ஆறு தொழில்கள் - அதாவது தானம் கொடுத்தால், தானம் வாங்குதல், வேதம் படித்தல், வேதம் கற்பித்தல், வேள்விகள் செய்தல், வேள்விகள் செய்வித்தல் - என்று ஆறு தொழில்கள் உள்ளான்.
616 படையுங் கொடியுங் குடையும் முரசும்
நடைநவில் புரவியுங் களிறுந் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய.
படை - கருவி, படை முதலான ஒன்பதும் செங்கோலும் பிறவுமென்றதனான் ஆரமுங் கழலு மெல்லாம் அரசர்க்குரிய என்றவாறு.
617 அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்கு
ஒன்றிய வரூஉம் பொருளுமா ருளவே.
அவை நாலுதொழில்; ஈதல் வேட்டல் வேட்பித்தல் ஓதலும்.
618 1பரிசில் பாடாண் திணைத்துறைக் கிழப்பெயர்2
நெடுந்தகை செம்மல் என்றிவை பிறவும்
பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித் தன்றே.
இப்பொருண்மையும் அரசர்க்கு முரித்து அந்தணர்க்கு முரித்து என்றவாறு.
1. பாடாண்திணைத் துறைப்பெயர் என்னாது கிழமைப்பெயர் என்றது என்னையெனின், அவைஐந்திணைப் பெயராகி வருங்காலும் அவர்க்கு உரிய அல்ல என்றற்கு; எனவே அரசர்க்காயின் இவை எல்லாம் உரிய என்ப ஆயிற்று.(தொல், பொருள்.628.பேரா.)
622 வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.
வைசிகன் வாணிகத்தான் வாழும் வாழ்க்கையைப் பெறும் என்றவாறு.
623 மெய்தெரி வகையின் எண்வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பா லான.
எண்வகை உணவாவன; நெல்லு, காணம்; வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதும்பை.
இவையிற்றை உண்டாக்குகின்ற உழவு தொழிலும் வாணிகர்க்கு வரையா தென்றவாறு.
625 1வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.
என்றது வேளாண் மாந்தர்க்குத் தொழில் உழவே என்றவாறு.
பார்ப்பியலும் அரசியலும் வாணிகத் தொழிலுமாகிப் பொதுப்படநின்ற ஓதலும் வேட்டலும் ஈதலும் இவர்க்கு ஒத்த சிறப்பினவாகலானும், அவருள் வணிகர்க்கும் ஒழிந்த வேளாளர்க்கும் ஒத்த செய்தியனவாகிய உழவுத் தொழிலும் நிரைகாத்தலும் வாணிகமும் என்பன அவற்றின் ஒத்தசிறப்பின அன்றி அவற்றுள்ளும் ஒரோ ஒன்று ஒரோ வருணத்தார்க்கு உரியவாமாகலானும் ஈண்டு அவை விதந்து கூறினான் என்பது நிரை காவலும் உழவுத்தொழிலும் வணிகர்க்கும் வேளாளர்க்கும் தடுமாறுதல் போலாது வாணிக வாழ்க்கை வேளாண்மாந்தர்க்குச் சிறு வரவிற்றெனவும், உழுதுண்டல் வணிகர்க்குச் சிறுவரவிற்றெனவும், எண்வகைக் கூலத்தோடுபட்டதே பெருவரவிற்றெனவும் கூறினான். இச் சூத்திரங்களான் என்பது. (தொல். பொருள்.635. பேரா.)
628 வில்லும் வேலுங் கழலுங் கண்ணியும்
தாரும் ஆரமுந் தேரு மாவும்
மன்பெறு மரபின் ஏனோர்க் குரிய.
வில்லு முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாம் மன்னனாற்பெற்ற மரபினால் வைசிகர்க்கும் வேளாளர்க்குமுரிய என்றவாறு.
615 நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய.
நூலூம் கரகமும் முக்கோலும் மணையும் ஆராயுங் காலத்து அந்தணர்க்கு உரிய என்றவாறு.
பார்ப்பனர்களுக்கு ஆறு தொழில்கள் - அதாவது தானம் கொடுத்தால், தானம் வாங்குதல், வேதம் படித்தல், வேதம் கற்பித்தல், வேள்விகள் செய்தல், வேள்விகள் செய்வித்தல் - என்று ஆறு தொழில்கள் உள்ளான்.
616 படையுங் கொடியுங் குடையும் முரசும்
நடைநவில் புரவியுங் களிறுந் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய.
படை - கருவி, படை முதலான ஒன்பதும் செங்கோலும் பிறவுமென்றதனான் ஆரமுங் கழலு மெல்லாம் அரசர்க்குரிய என்றவாறு.
617 அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்கு
ஒன்றிய வரூஉம் பொருளுமா ருளவே.
அவை நாலுதொழில்; ஈதல் வேட்டல் வேட்பித்தல் ஓதலும்.
618 1பரிசில் பாடாண் திணைத்துறைக் கிழப்பெயர்2
நெடுந்தகை செம்மல் என்றிவை பிறவும்
பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித் தன்றே.
இப்பொருண்மையும் அரசர்க்கு முரித்து அந்தணர்க்கு முரித்து என்றவாறு.
1. பாடாண்திணைத் துறைப்பெயர் என்னாது கிழமைப்பெயர் என்றது என்னையெனின், அவைஐந்திணைப் பெயராகி வருங்காலும் அவர்க்கு உரிய அல்ல என்றற்கு; எனவே அரசர்க்காயின் இவை எல்லாம் உரிய என்ப ஆயிற்று.(தொல், பொருள்.628.பேரா.)
622 வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.
வைசிகன் வாணிகத்தான் வாழும் வாழ்க்கையைப் பெறும் என்றவாறு.
623 மெய்தெரி வகையின் எண்வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பா லான.
எண்வகை உணவாவன; நெல்லு, காணம்; வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதும்பை.
இவையிற்றை உண்டாக்குகின்ற உழவு தொழிலும் வாணிகர்க்கு வரையா தென்றவாறு.
625 1வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.
என்றது வேளாண் மாந்தர்க்குத் தொழில் உழவே என்றவாறு.
பார்ப்பியலும் அரசியலும் வாணிகத் தொழிலுமாகிப் பொதுப்படநின்ற ஓதலும் வேட்டலும் ஈதலும் இவர்க்கு ஒத்த சிறப்பினவாகலானும், அவருள் வணிகர்க்கும் ஒழிந்த வேளாளர்க்கும் ஒத்த செய்தியனவாகிய உழவுத் தொழிலும் நிரைகாத்தலும் வாணிகமும் என்பன அவற்றின் ஒத்தசிறப்பின அன்றி அவற்றுள்ளும் ஒரோ ஒன்று ஒரோ வருணத்தார்க்கு உரியவாமாகலானும் ஈண்டு அவை விதந்து கூறினான் என்பது நிரை காவலும் உழவுத்தொழிலும் வணிகர்க்கும் வேளாளர்க்கும் தடுமாறுதல் போலாது வாணிக வாழ்க்கை வேளாண்மாந்தர்க்குச் சிறு வரவிற்றெனவும், உழுதுண்டல் வணிகர்க்குச் சிறுவரவிற்றெனவும், எண்வகைக் கூலத்தோடுபட்டதே பெருவரவிற்றெனவும் கூறினான். இச் சூத்திரங்களான் என்பது. (தொல். பொருள்.635. பேரா.)
628 வில்லும் வேலுங் கழலுங் கண்ணியும்
தாரும் ஆரமுந் தேரு மாவும்
மன்பெறு மரபின் ஏனோர்க் குரிய.
வில்லு முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாம் மன்னனாற்பெற்ற மரபினால் வைசிகர்க்கும் வேளாளர்க்குமுரிய என்றவாறு.
தொல்காப்பியம் - செய்யுளியல் - 2
490.பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியோடு
அளவியல் மரபின் அறுவகை யோருங்
களவினிற் கிளவிக் குரியர் என்ப.
என் - னின். இனிக் கூறப்படுவாரை உணர்த்துவார் களவின்கட் கூறுவாரை உணர்த்துதல் நுதலிற்று.
பார்ப்பார் முதலாகச் சொல்லப்பட்ட கலந்தொழுகு மரபினையுடைய அறுவகையோரும் களவொழுக்கக் கிளவி கூறுதற்குரியரென்றவாறு.
ஓடு எண்ணின்கண் வந்தது. கலந்தொழுகு மரபென்றதனாற் பார்ப்பாரினும் பாங்கரினுஞ் சிலரே இதற்குடம்படுவாரென்று கொள்க.
பார்ப்பான் உயர்குலத்தானாகிய தோழன்.
பாங்கன் ஒத்த குலத்தானும் இழிந்த குலத்தானுமாகிய தோழன்.
(177)
1.பார்ப்பான் என்பான் நன்றும் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவான் எனப்படும். பாங்கன் என்பான் அவ்வாறன்றித் தலைமகன் வழிநின் றொழுகிவருமாகலின் அவனை அவன்பின் வைத்தான். (தொல். பொருள்.501. பேரா.)
491 பாணன் கூத்தன் விறலி பரத்தை
யாணஞ் சான்ற அறிவர் கண்டோர்
பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த அறுவரொடு1 தொகைஇத்
தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்.
என் - னின். கற்பின்கட் கூறத்தகுவாரை உணர்த்துதல் நுதலிற்று.
பாணன் முதலாகச் சொல்லப்பட்ட அறுவரும் மேற்சொல்லப்பட்ட பார்ப்பார் முதலிய அறுவருங்கூடப் பன்னிருவருங் கற்பின்கட் கூறுதற்குரியர் என்றவாறு.
`தொன்னெறி மரபிற் கற்பு' என்றதனான் அவர் குலந்தோறுந் தொன்றுபட்டு வருகின்ற நெறியையுடைத்தென்று கொள்க.
Labels:
tholkappiyam
தொல்காப்பியத்தில் சமக்கிருதம் ....
397 இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.
1.செய்யுளீட்டச் சொல் நான்கு :- தொல்காப்பியர் காலத்தில் தமிழ்ச் சொற்கள் இலக்கண முறையிற் போன்றே சொற்பிறப்பியல் முறையிலும் நான்காக வகுக்கப்பட்டன. முதலாவது தன்சொல் அயற் சொல் என்கிற முறையில் தென்சொல் வடசொல் என்ற பாகுபாடும், பின்பு தன் சொற்குள் செந்தமிழ் கொடுந்தமிழ் என்கிற முறையில் நாட்டுச்சொல் திசைச்சொல் என்ற பாகுபாடும், பின்பு நாட்டுச் சொற்கள் இயல்பும் திரியும் பற்றி இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என நான்கமைந்தன.
Labels:
tholkappiyam
Subscribe to:
Posts (Atom)