Saturday, August 11, 2018

தொல்காப்பியத்தில் சமக்கிருதம் ....


397 இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.
1.செய்யுளீட்டச் சொல் நான்கு :- தொல்காப்பியர் காலத்தில் தமிழ்ச் சொற்கள் இலக்கண முறையிற் போன்றே சொற்பிறப்பியல் முறையிலும் நான்காக வகுக்கப்பட்டன. முதலாவது தன்சொல் அயற் சொல் என்கிற முறையில் தென்சொல் வடசொல் என்ற பாகுபாடும், பின்பு தன் சொற்குள் செந்தமிழ் கொடுந்தமிழ் என்கிற முறையில் நாட்டுச்சொல் திசைச்சொல் என்ற பாகுபாடும், பின்பு நாட்டுச் சொற்கள் இயல்பும் திரியும் பற்றி இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என நான்கமைந்தன.

http://www.tamilvu.org/ta/library-l0100-html-l0100ind-116715

1 comment:

  1. வட சொல் பெயர் காரணம் என்ன?

    ReplyDelete