Monday, August 13, 2018

கபிலை கண்ணிய வேள்விநிலை...

பிராம்மணர்கள் யாகம் செய்ய வேண்டி , அரசனை அணுக, அரசர்கள் காராம்பசு என்னும் கபிலை மற்றும் பொன்னும் பொருளும் தருவதை வேள்வி நிலை என்னும் செய்யுள் வகை என்று கூறுகின்றார் தொல்காப்பியர்.


கபிலை கண்ணிய வேள்விநிலையும் - கபிலையைக் குறித்த வேள்விநிலையும்.

உதாரணம்

பருக்காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக்
குருக்கண் கபிலை கொடுத்தான் - செருக்கோடு
இடிமுரசத் தானை இகலிரிய எங்கோன்
கடிமுரசங் காலைச்செய் வித்து


கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்,
அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்,
சேய் வரல் வருத்தம் வீட வாயில்
காவலர்க்கு உரைத்த கடைநிலையானும்,
கண்படை கண்ணிய கண்படை நிலையும்,
கபிலை கண்ணிய வேள்வி நிலையும்,
வேலை நோக்கிய விளக்கு நிலையும்,
வாயுறை வாழ்த்தும், செவியறிவுறூஉவும்,
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்,
கைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇ,
தொக்க நான்கும் உள' என மொழிப

1 comment:

  1. இதில் பார்ப்பணர்கள் என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது?

    ReplyDelete