490.பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியோடு
அளவியல் மரபின் அறுவகை யோருங்
களவினிற் கிளவிக் குரியர் என்ப.
என் - னின். இனிக் கூறப்படுவாரை உணர்த்துவார் களவின்கட் கூறுவாரை உணர்த்துதல் நுதலிற்று.
பார்ப்பார் முதலாகச் சொல்லப்பட்ட கலந்தொழுகு மரபினையுடைய அறுவகையோரும் களவொழுக்கக் கிளவி கூறுதற்குரியரென்றவாறு.
ஓடு எண்ணின்கண் வந்தது. கலந்தொழுகு மரபென்றதனாற் பார்ப்பாரினும் பாங்கரினுஞ் சிலரே இதற்குடம்படுவாரென்று கொள்க.
பார்ப்பான் உயர்குலத்தானாகிய தோழன்.
பாங்கன் ஒத்த குலத்தானும் இழிந்த குலத்தானுமாகிய தோழன்.
(177)
1.பார்ப்பான் என்பான் நன்றும் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவான் எனப்படும். பாங்கன் என்பான் அவ்வாறன்றித் தலைமகன் வழிநின் றொழுகிவருமாகலின் அவனை அவன்பின் வைத்தான். (தொல். பொருள்.501. பேரா.)
491 பாணன் கூத்தன் விறலி பரத்தை
யாணஞ் சான்ற அறிவர் கண்டோர்
பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த அறுவரொடு1 தொகைஇத்
தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்.
என் - னின். கற்பின்கட் கூறத்தகுவாரை உணர்த்துதல் நுதலிற்று.
பாணன் முதலாகச் சொல்லப்பட்ட அறுவரும் மேற்சொல்லப்பட்ட பார்ப்பார் முதலிய அறுவருங்கூடப் பன்னிருவருங் கற்பின்கட் கூறுதற்குரியர் என்றவாறு.
`தொன்னெறி மரபிற் கற்பு' என்றதனான் அவர் குலந்தோறுந் தொன்றுபட்டு வருகின்ற நெறியையுடைத்தென்று கொள்க.
சிறிது விளக்கமாக சொன்னால் பரவாயில்லை.நன்றி.
ReplyDelete