Saturday, August 11, 2018

தொல்காப்பியமும் வருணாசிரம தருமமும்...

தர்ம சாஸ்திரங்களில் சொல்ல பெற்ற வருணாசிரம தருமங்கள் தொல்காப்பியத்தில் தெள்ள தெளிவாக சொல்ல பட்டுள்ளது.எனவே தமிழர் மரபும், தரும சாஸ்திரமும் வேறன்று. வருணங்கள் மட்டுமே வேதத்தில் உதித்தவை - சாதிகள் அல்ல. தமிழிலக்கண நன்னூலாக்கிய தொல்காப்பியம், மரபியல் என்னும் பகுதியில் வர்ண தருமங்களை கூறுகின்றது.

615 நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய.

நூலூம் கரகமும் முக்கோலும் மணையும் ஆராயுங் காலத்து அந்தணர்க்கு உரிய என்றவாறு.

பார்ப்பனர்களுக்கு ஆறு தொழில்கள் - அதாவது தானம் கொடுத்தால், தானம் வாங்குதல், வேதம் படித்தல், வேதம் கற்பித்தல், வேள்விகள் செய்தல், வேள்விகள் செய்வித்தல் - என்று ஆறு தொழில்கள் உள்ளான்.

616 படையுங் கொடியுங் குடையும் முரசும்
நடைநவில் புரவியுங் களிறுந் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய.

படை - கருவி, படை முதலான ஒன்பதும் செங்கோலும் பிறவுமென்றதனான் ஆரமுங் கழலு மெல்லாம் அரசர்க்குரிய என்றவாறு.

617 அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்கு
ஒன்றிய வரூஉம் பொருளுமா ருளவே.
அவை நாலுதொழில்; ஈதல் வேட்டல் வேட்பித்தல் ஓதலும்.

618 1பரிசில் பாடாண் திணைத்துறைக் கிழப்பெயர்2
நெடுந்தகை செம்மல் என்றிவை பிறவும்
பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித் தன்றே.
இப்பொருண்மையும் அரசர்க்கு முரித்து அந்தணர்க்கு முரித்து என்றவாறு.

1. பாடாண்திணைத் துறைப்பெயர் என்னாது கிழமைப்பெயர் என்றது என்னையெனின், அவைஐந்திணைப் பெயராகி வருங்காலும் அவர்க்கு உரிய அல்ல என்றற்கு; எனவே அரசர்க்காயின் இவை எல்லாம் உரிய என்ப ஆயிற்று.(தொல், பொருள்.628.பேரா.)

622 வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.
வைசிகன் வாணிகத்தான் வாழும் வாழ்க்கையைப் பெறும் என்றவாறு.

623 மெய்தெரி வகையின் எண்வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பா லான.

எண்வகை உணவாவன; நெல்லு, காணம்; வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதும்பை.

இவையிற்றை உண்டாக்குகின்ற உழவு தொழிலும் வாணிகர்க்கு வரையா தென்றவாறு.

625 1வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.

என்றது வேளாண் மாந்தர்க்குத் தொழில் உழவே என்றவாறு.

பார்ப்பியலும் அரசியலும் வாணிகத் தொழிலுமாகிப் பொதுப்படநின்ற ஓதலும் வேட்டலும் ஈதலும் இவர்க்கு ஒத்த சிறப்பினவாகலானும், அவருள் வணிகர்க்கும் ஒழிந்த வேளாளர்க்கும் ஒத்த செய்தியனவாகிய உழவுத் தொழிலும் நிரைகாத்தலும் வாணிகமும் என்பன அவற்றின் ஒத்தசிறப்பின அன்றி அவற்றுள்ளும் ஒரோ ஒன்று ஒரோ வருணத்தார்க்கு உரியவாமாகலானும் ஈண்டு அவை விதந்து கூறினான் என்பது நிரை காவலும் உழவுத்தொழிலும் வணிகர்க்கும் வேளாளர்க்கும் தடுமாறுதல் போலாது வாணிக வாழ்க்கை வேளாண்மாந்தர்க்குச் சிறு வரவிற்றெனவும், உழுதுண்டல் வணிகர்க்குச் சிறுவரவிற்றெனவும், எண்வகைக் கூலத்தோடுபட்டதே பெருவரவிற்றெனவும் கூறினான். இச் சூத்திரங்களான் என்பது. (தொல். பொருள்.635. பேரா.)


628 வில்லும் வேலுங் கழலுங் கண்ணியும்
தாரும் ஆரமுந் தேரு மாவும்
மன்பெறு மரபின் ஏனோர்க் குரிய.
வில்லு முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாம் மன்னனாற்பெற்ற மரபினால் வைசிகர்க்கும் வேளாளர்க்குமுரிய என்றவாறு.


No comments:

Post a Comment