Tuesday, May 29, 2018

ஊர்த்வ புண்ட்ர தாரண விதியும் பலனும் - வாசுதேவ உபநிஷத்




வாசுதேவ உபநிஷத்தில் எப்படி ஊர்த்வ புண்ட்ரம் இட்டு கொள்ள வேண்டும் என்ற நியமம் சொல்ல பட்டிருக்கின்றது. விஷ்ணு காயத்ரி, அல்லது கண்ணனின் பன்னிரு நாமங்களால் தான் இட்டுக் கொள்ள வேண்டும் என்று உள்ளது. அப்படி சங்க, சக்ர கதாதாரியாக கண்ணனை தியானித்து , பன்னிரண்டு ஊர்த்வ புண்டரங்களை தரிப்பவர்களுக்கு ஆன்ம ஞானம் ஏற்பட்டு , ஆத்ம ஸ்வரூபம்வெளிப்படும் என்கிறான் வாசுதேவ கிருஷ்ணன். கோபி சந்தனம் கிடைக்காவிட்டால், துளசி செடியின் அருகில் உள்ள மண்ணால் ஊர்த்வ புண்ட்ரம் இட்டுக் கொள்ளலாம் என்கிறது அந்த உபநிஷத்.

கோபி சந்தனத்தை, கங்கை நீரில் குழைத்து மோதிர விரலால் இட்டுக் கொள்ள வேண்டும். கேசவாதி பன்னிரு நாமங்களை சொல்லிக்கொண்டே இட்டுக் கொள்ளுதல் வேண்டும். அதிராத்ரம், அக்னிஹோத்ரம் ஆகிய வேள்வியின் சாம்பலை குழைத்து இடையில் இட்டுக் கொள்ள வேண்டும்.சிகை, யக்னோபவீதம் இல்லாத பரமஹம்ச சந்யாசிகள் ஓம்காரத்தை மட்டும் சொல்லி புண்ட்ரத்தை தரிக்க வேண்டும். தங்கள் நெற்றி(லலாடம்)-1 , கழுத்து(முன்னும்,பின்னும்)-2, மார்பு-3, வயிறு(குக்ஷி)-3, தோள்பட்டை (பஹு மூலம்) - 2 , வயிற்றின் பின்புறம் -௧, உச்சந்தலை - 1 மொத்தம் பதிமூன்று புண்டரங்கள். மோதிர விரலால் தான் இட்டு கொள்ள வேண்டும். 

அத² கோ³பீசந்த³நம் நமஸ்க்ருʼத்வோத்³த்⁴ருʼத்ய ।
கோ³பீசந்த³ந பாபக்⁴ந விஷ்ணுதே³ஹஸமுத்³ப⁴வ ।
சக்ராங்கித நமஸ்துப்⁴யம் தா⁴ரணாந்முக்திதோ³ ப⁴வ ।
இமம் மே க³ங்கே³ இதி ஜலமாதா³ய விஷ்ணோர்நுகமிதி மர்த³யேத் ।
அதோ தே³வா அவந்து ந இத்யேதந்மந்த்ரைர்விஷ்ணுகா³யத்ர்யா கேஶவாதி³-
நாமபி⁴ர்வா தா⁴ரயேத் ।

நெற்றியில் புண்ட்ரம் இட்டுக் கொள்ளும் மந்திரம் :
சங்க சக்ர கதை பானே துவாரகா நிலாயகியுத
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் ஷரணாகதம் 

(ப்³ரஹ்மசார்யாதீ³நாம் தா⁴ரணாப்ரகார:)

ப்³ரஹ்மசாரீ வாநப்ரஸ்தோ² வா
லலாடஹ்ருʼத³யகண்ட²பா³ஹூமூலேஷு வைஷ்ணவகா³யத்ர்யா
க்ருʼஷ்ணாதி³நாமபி⁴ர்வா தா⁴ரயேத் । இதி த்ரிவாரமபி⁴மந்த்ர்ய
ஶங்க²சக்ரக³தா³பாணே த்³வாரகாநிலயாச்யுத । கோ³விந்த³ புண்ட³ரீகாக்ஷ ரக்ஷ மாம் ஶரணாக³தம் । இதி த்⁴யாத்வா
க்³ருʼஹஸ்தோ² லலாடாதி³த்³வாத³ஶஸ்த²லேஷ்வநாமிகாங்கு³ல்யா
வைஷ்ணவகா³யத்ர்யா கேஶவாதி³நாமபி⁴ர்வா தா⁴ரயேத் ।
ப்³ரஹ்மசாரீ க்³ருʼஹஸ்தோ² வா லலாடஹ்ருʼத³யகண்ட²பா³ஹூமூலேஷு
வைஷ்ணவகா³யத்ர்யா க்ருʼஷ்ணாதி³நாமபி⁴ர்வா தா⁴ரயேத் ।
யதிஸ்தர்ஜந்யா ஶிரோலலாடஹ்ருʼத³யேஷு ப்ரணவேநைவ தா⁴ரயேத் ।

மற்ற பன்னிரண்டு புண்டரங்களுக்கும் கேசவாதி பன்னிரண்டு நாமங்களை சொல்லிக்கொண்டே இட்டுக் கொள்ள வேண்டும்.

இப்படி இட்டுக் கொள்வதால் , ஒருவனுடைய விந்து, யோகபலம், தண்டம், 
புண்ட்ரம்,ஆகிய நான்கு விஷயங்கள் மேலோங்கி சென்று அவன் எல்லாவற்றிற்கும் மேலான ஆத்ம ஞானத்தை பெற்று மேலான பதவியை அடைகின்றான்.

முமுக்ஷுக்கள் அதாவது மோக்ஷத்தில், ஆத்ம ஞானத்தில் இச்சை உள்ளவர்கள் நித்யமும் த்ரிபுண்ட்ரத்தை தரிப்பதால், கண்ணுக்கு தெரியாத அந்த ஆத்ம சித்தி ஏற்படும்.


(கோ³பீசந்த³நப⁴ஸ்மநோர்தா⁴ரணவிதி:⁴)

ப்³ராஹ்மாணாநாம் து ஸர்வேஷாம் வைதி³காநாமநுத்தமம் ।
கோ³பீசந்த³நவாரிப்⁴யாமூர்த்⁴வபுண்ட்³ரம் விதீ⁴யதே ।
யோ கோ³பீசந்த³நாபா⁴வே துளஸீமூலம்ருʼத்திகாம் ।
முமுக்ஷுர்தா⁴ரயேந்நித்யமபரோக்ஷாத்மஸித்³த⁴யே ।
அதிராத்ராக்³நிஹோத்ரப⁴ஸ்மநாக்³நேர்ப⁴ஸிதமித³ம்விஷ்ணுஸ்த்ரீணி
பதே³தி மந்த்ரைர்வைஷ்ணவகா³யத்ர்யா ப்ரணவேநோத்³தூ⁴லநம் குர்யாத் ।
ஏவம் விதி⁴நா கோ³பீசந்த³நம் ச தா⁴ரயேத் ।
யஸ்த்வதீ⁴தே வா ஸ ஸர்வபாதகேப்⁴ய: பூதோ ப⁴வதி ।
பாபபு³த்³தி⁴ஸ்தஸ்ய ந ஜாயதே । ஸ ஸர்வேஷு தீர்தே²ஷு ஸ்நாதோ ப⁴வதி ।
ஸ ஸர்வைர்யஜ்ஞைர்யாஜிதோ ப⁴வதி । ஸ ஸர்வைர்தே³வை: பூஜ்யோ ப⁴வதி ।
ஶ்ரீமந்நாராயணே மய்யசஞ்சலா ப⁴க்திஶ்ச ப⁴வதி ।
ஸ ஸம்யக்³ஜ்ஞாநம் ச லப்³த்⁴வா விஷ்ணுஸாயுஜ்யமவாப்நோதி ।
ந ச புநராவர்ததே ந ச புநராவர்ததே இத்யாஹ ப⁴க³வாந்வாஸுதே³வ: ।
யஸ்த்வேதத்³வாதீ⁴தே ஸோঽப்யேவமேவ ப⁴வதீத்யோம் ஸத்யமித்யுபநிஷத் ॥

இப்படி விதி பூர்வமாக ஊர்த்வ புண்ட்ரம் தரிப்பதால், எல்லா பாபங்களும் துலையும். அனைத்து புண்ய தலங்களிலும் நீராடிய புண்யம் கிடைக்கும், அனைத்து வேள்விகளையும் செய்த நற்பயன் கிடைக்கும் ,அனைத்து தேவர்களாலும் வணங்க தக்கவன் ஆவான். ஸ்ரீமன் நாராயணன் மீது அசைக்க முடியாத பக்தி உண்டாகும். குற்றமில்லாத, (ஆத்ம) சரியான ஞானம் ஏற்படும். விஷ்ணு சாயுஜம் ஏற்பட்டு, பிறப்பு இறப்பு இல்லாத உன்னத ஸ்திதி ஏற்படும் - என்று அறுதி இட்டு சொல்கின்றார் வாசுதேவன்.

இந்தப் படத்தில் ஸ்ரீ ஸ்ரீ அண்ணா இட்டுக்கொண்டுள்ளது தான் உபநிஷத் பிரகாரமான ஊர்த்வ புண்ட்ர தாரணம்.


No comments:

Post a Comment