Sunday, May 6, 2018

கலி சந்தரண உபநிஷத்தில் ப்ரம்மா உபதேசிக்கும் உபாயம்

சில விஷமிகள் கள்ளத்தனமாக பத்ம புராணத்தில், இரண்டு ஸ்லோகங்களை சொருகி(ஒரிசா பகுதியில் உள்ள பத்ம புராணத்தில் மட்டும் தான் இது இருக்கின்றது) விட்டு நம் ஜெகதாசார்யனை மாயாவாதி என்று சொல்கின்றன்றார்.  கலி சந்தரண உபநிஷத்து, பகவத் கீதை, ப்ரஷ்ன உபநிஷத்து - இம்மூன்றிலும் மாயை, அவித்யை பற்றி உள்ள பிரமாணங்களை சேர்த்தி இதனை எழுத்து உள்ளேன். கஞ்சி மகா பெரியவாள் திருப்பாதத்தில் இதனை சமர்ப்பிக்கின்றேன்.




கலி சந்தரண உபநிஷத்தில் ப்ரம்மா ஆத்ம ஞானம் பெற , நாரதருக்கு உபதேசிக்கும் உபாயம் , இதோ பாருங்கள்.

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ।
ஹரே க்ருʼஷ்ண ஹரே க்ருʼஷ்ண க்ருʼஷ்ண க்ருʼஷ்ண ஹரே ஹரே ॥

இதி ஷோட³ஶகம் நாம்நாம் கலிகல்மஷநாஶநம் ।
நாத: பரதரோபாய: ஸர்வவேதே³ஷு த்³ருʼஶ்யதே ॥

உபநிஷத்துக்கள் எப்பொழுதுமே , ஆத்மஞானத்தை பற்றிய உபாயங்கள் மட்டுமே சொல்லும். ஒருபொழுதும் மூட பக்தியோ , அஞ்ஞானமோ  சொல்லாது.

நாரதருக்கு ப்ரம்மா உபதேசம் செய்கின்றார். ஹரே ராமா , மந்திரத்தை சொல்வதால் கலியின் உபாதைகள் நீங்கும் என்கிறார். இந்த மந்திரத்தை சொல்வதை தவிர வேதங்கள் அனைத்திலும் வேறொரு உபாயமும் இல்லை என்கிறார் ப்ரம்மா.

ஷோட³ஶகலாவ்ருʼதஸ்ய ஜீவஸ்யாவரணவிநாஶநம் ।
தத: ப்ரகாஶதே பரம் ப்³ரஹ்ம மேகா⁴பாயே ரவிரஶ்மிமண்ட³லீவேதி ॥ 2॥


அது மட்டும் அல்ல , இந்த 16 அக்ஷரங்கள் கொண்ட  மந்திரத்தை சொல்வதானால் ,வரும் பயன்களை சொல்கின்றார் ப்ரம்மா.
ஜீவனின் பதினாறு கலைகள் கொண்ட (மாயையின்) கோட்டை அழிந்து விடும். அதன் பிறகு எப்படி மேக மூட்டங்கள் விகையை பிறகு சூரியன் ப்ரகாஷிக்கின்றானோ, அப்படி இந்த ஜீவன் பேதங்கள் நீங்க பெற்றதாகி பிற ப்ரம்மமாகி பிரகாசிக்கும்.

மேற்கூறிய நாம ஜபம் செய்வதால் மாயை விலகி , ஆத்ம ஸ்வரூபம் தெளிந்து, ஜீவன் பரப்பிரம்மம் ஆகவே ஜொலிக்கும் என்கிறார் ப்ரம்மா.இனி , இங்கு ப்ரம்மா கூறிய அந்த பதினாறு விஷயங்கள்,ஏ வை ஜீவனை, தன் அதன் ஸ்வரூபத்தில் இருந்து மறைக்கின்றது என்று பார்ப்போம்:

ப்ரஷ்ன உபநிஷத்தின் ஆறாவது பகுதியை முழுவதும் இங்கு காண்போம், அப்பொழுது தான் இந்த பதினாறு கலைகள் எவை என்று நமக்கு புரியும்:


அத² ஹைநம் ஸுகேஶா பா⁴ரத்³வாஜ: பப்ரச்ச² । ப⁴க³வந்
ஹிரண்யநாப:⁴ கௌஸல்யோ ராஜபுத்ரோ மாமுபேத்யைதம் ப்ரஶ்நமப்ருʼச்ச²த । ஷோட³ஶகலம் பா⁴ரத்³வாஜ புருஷம் வேத்த² । தமஹம் குமாரம்ப்³ருவம் நாஹமிமம் வேத³ ।
யத்⁴யஹமிமமவேதி³ஷம் கத²ம் தே நாவக்ஷ்யமிதி । ஸமூலோ வா
ஏஷ பரிஶுஷ்யதி யோঽந்ருʼதமபி⁴வத³தி தஸ்மாந்நார்ஹம்யந்ருʼதம் வக்தும் ।
ஸ தூஷ்ணீம் ரத²மாருஹ்ய ப்ரவவ்ராஜ । தம் த்வா ப்ருʼச்சா²மி க்வாஸௌ
புருஷ இதி ॥ 1॥

பரத்துவாஜ கோத்திரத்தை சேர்ந்த சுகேசர் பிப்பலதர் இடத்தில் கூறினார்:

கோசல நகரத்து அரசனாகிய ஹிரண்யநாபன் , பாரத்வாஜ  சுகேசன் இடத்தில கீழ் வருமாறு வினவுகின்றார்: "பதினாறு கலைகள் (அங்கங்கள்) கொண்ட புருஷனை நீவிர் அறிவீர்களா ? " . அதற்கு சுகேசர், எனக்கு தெரிந்தால் நான் ஏன் மறைக்க வேண்டும்?அதனை கேட்டதும் கோசல தேசத்து மன்னன் தன ரத்தத்தில் ஏறிக்கொண்டு சென்று விட்டான். அதனால் , சுகேசனாகிய நான் (பிப்பலர் இடத்தில்) அந்த புருஷனை பற்றி கேட்கின்றேன்.

தஸ்மை ஸ ஹோவாச । இஹஈவாந்த:ஶரீரே ஸோப்⁴ய ஸ புருஷோ
யஸ்மிந்நதா: ஷோட³ஶகலா: ப்ரப⁴வந்தீதி ॥ 2॥

அதற்கு பிப்பலதர் கூறினார்: இங்கு இந்த சரீரத்தின் உள்ளில் , இந்த சரீரத்தினுள்ளில் அந்த புருஷன் இருக்கின்றான், இவனிடத்தில் இருந்தே அந்த பதினாறு கலைகள் எழுகின்றன.

ஸ ஈக்ஷாசக்ரே । கஸ்மிந்நஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ ப⁴விஷ்யாமி
கஸ்மிந்வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டஸ்யாமீதி ॥ 3॥

அவன் நினைக்கிறான் - அந்த புருஷன் வெளியே சென்றால், நானும் போகி விடுவேன், அந்த புருஷன் உள்ளே இருந்தால் நானும் இருப்பேன் என்று.

ஸ ப்ராணமஸ்ருʼஜத ப்ராணாச்ச்²ரத்³தா⁴ம் க²ம் வாயுர்ஜ்யோதிராப:
ப்ருʼதி²வீந்த்³ரியம் மந: । அந்நமந்நாத்³வீர்யம் தபோ மந்த்ரா: கர்ம
லோகாலோகேஷு ச நாம ச ॥ 4॥

புருஷன் என்னும் ப்ராணனிடம்  இருந்து  ஸ்ருஷ்டிக்கப் பெற்ற இந்த பதினாறு விஷயங்கள்:(இதுவே அந்த புருஷனின் பதினாறு கலைகள்)

பிராணன், சிரத்தை, காற்று, வெளி, தீ, நீர், நிலம், இந்திரியங்கள், மனசு, அன்னம், (அன்னத்தால்) வீரியம், தவம் , மந்திரங்கள், கர்மம், லோகங்கள், (லோகங்களில் உள்ள) நாமங்கள்.

இப்படி பதினாறு வஸ்துக்கள் ஜீவன் மீது , அதனை  மறைத்துக்கொண்டு, அதன் உண்மை சரோப்பமான ஆத்மாவை மறைத்துக்கொண்டு , எப்படி சூரியனை மெகா மண்டலம் மறைத்துக் கொண்டு இருக்கின்றதோ அப்படி நிற்கின்றது.

ஸ யதே²மா நத்⁴ய: ஸ்யந்த³மாநா: ஸமுத்³ராயணா: ஸமுத்³ரம்
ப்ராப்யாஸ்தம் க³ச்ச²ந்தி பி⁴த்⁴யேதே தாஸாம் நாமருபே ஸமுத்³ர இத்யேவம் ப்ரோச்யதே ।
ஏவமேவாஸ்ய பரித்³ரஷ்டுரிமா: ஷோட³ஶகலா: புருஷாயணா:
புருஷம்ப்ராப்யாஸ்தம் க³ச்ச²ந்தி பி⁴த்⁴யேதே சாஸாம் நாமருபே புருஷ இத்யேவம் ப்ரோச்யதே ஸ ஏஷோঽகலோঽம்ருʼதோ ப⁴வதி ததே³ஷ ஶ்லோக: ॥ 5 ||

எப்படி சமுத்திரத்தை நோக்கிப் பாயும் நதிகள் கடலில் கலந்து, அவற்றின் நாம ரூபங்கள் மறைந்து  சமுத்திரம் என்றே அவைகள் சொல்லப் பெறுகின்றன. அப்படியே பதினாறு கலைகள் கொண்ட அந்த புருஷனின் இடத்தில சேர்ந்து தங்கள் நாமரூபங்களை இழந்து அமரத்தன்மையை அடைகின்றனர்.

அரா இவ ரத²நாபௌ⁴ கலா யஸ்மிந்ப்ரதிஷ்டிதா: ।
தம் வேத்⁴யம் புருஷம் வேத³ யத² மா வோ ம்ருʼத்யு: பரிவ்யதா² இதி ॥ 6॥

எப்படி ஒரு தேர் சக்கரத்தின் நாளங்கள் அச்சாணியில் பிணைந்திருக்கின்றனவோ, அதே போல புருஷன் இடத்தில மேற்கூறிய பதினாறு கலைகளும் இணைந்து  இருக்கின்றன.  எப்படி தேறி சக்கரத்தின் நாளங்கள் அச்சாணியின் மீது நிற்கின்றனவோ, அதே போல புருஷனின் மாய ஷக்தி, அவன் மீது ஆதார படுகின்றன. அந்த பதினாறு அங்கங்கள் கொண்ட , மாய சக்தியினால் ஆவரணம் போல, தானே தன ஸ்வரூபத்தை மறைக்கின்றன புருஷன்.

தாந் ஹோவாசைதாவதே³வாஹமேதத் பரம் ப்³ரஹ்ம வேத³ । நாத:
பரமஸ்தீதி ॥ 7॥

இப்படி உபதேசம் செய்த பிறகு , பாரதிவாஜ சுகேஷர் இப்பொழுது அந்த பர பிரம்மத்தை பற்றி அறிந்து கொண்டேன் என்று கூறினார்.

தே தமர்சயந்தஸ்த்வம் ஹி ந: பிதா யோঽஸ்மாகமவித்⁴யாயா:
பரம் பரம் தாரயஸீதி । நம: பரமருʼஷிப்⁴யோ நம:
பரமருʼஷிப்⁴ய: ॥ 8॥

அங்கிருந்த பதினாறு சபையினரையும்  வணங்கி சுகேசர் கூறினார், "நீங்களே என்னுடைய (ஆன்மீக) தந்தை ! அவித்யை என்னும் அறியாமையை தாண்ட செய்து, பர வஸ்துவினிடத்தில் கொண்டு சென்ரீர்கள் "  பரம ரிஷிகளுக்கு வணக்கங்கள்! பரம ரிஷிகளுக்கு வணக்கங்கள்! என்றார்.

எனவே , மாயை என்பது ஆத்மாவாகிய புருஷனின் பதினாறு கலைகளாகி உள்ளது - அதனை அறிவதே வித்யை. அப்படி அறிவதால், மாயையின் கோட்டைகள் அல்லது  பதினாறு கலைகள் நீங்கி ஜீவ பேதம் விலகி, ஜீவன் பரம் ப்ரம்மாவாக ப்ராசிக்கின்றது.

குறிப்பு: கண்ணன் கீதையில் இதே கருத்தை கூறுகின்றான்:

ஈஶ்வர: ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருʼத்³தே³ஶேঽர்ஜுந திஷ்ட²தி ।
ப்⁴ராமயந்ஸர்வபூ⁴தாநி யந்த்ராரூடா⁴நி மாயயா ॥

ஜீவர்கள் இதயத்தில் இருக்கும் புருஷன், தன் மாயையால் ஜீவர்களை ப்ரமிக்கச்செய்கின்றான் என்று பொருள். மாயன் ஆவரண சக்தியை உபதேசிக்கின்றான் கண்ணன்.

 மேற்கூறிய, கீதை, ப்ரஷ்ன உபநிஷத்தில் கூறிய விஷயங்களையே கலி
சந்தரண  உபநிஷத்தில் , சொல்ல பட்டிருக்கின்றது. பதினாறு அக்ஷரங்கள் கொண்ட கிருஷ்ண நாமத்தை சொல்வதானால் ஜீவன் மீது படர்ந்துள்ள மாயையின் கோட்டை விலகி, ஆத்மஸ்வரூபம் தெளிந்து பர ப்ரம்மமாகி பிரகாசிக்கின்றது. எனவே ஆத்ம ஞானம் பெறுவதே நாம சங்கீர்த்தனத்தின் முக்கிய நோக்கம் எனபதை அறிய வேண்டும்.

மாயை, அவித்தை - இவைகள் அனைத்துமே உபநிஷத்தில் உள்ள விஷயங்களே - சங்கரர் எதையுமே தாமாக சொல்லவில்லை.

கண்ணன் அருளால் அனைவரும் பூர்ண ஞானம் பெற்று சிறக்க வேண்டும் என்று பிரார்தித்துக் கொள்கின்றேன்.

Image result for kali santarana upanishad

No comments:

Post a Comment