Thursday, May 31, 2018

ந்ருஸிம்ஹ தாபினி உபநிஷத்தின் பெருமை - 1

தே³வா ஹ வை ப்ரஜாபதிமப்³ருவந்நத² கஸ்மாது³ச்யத
உக்³ரமிதி ஸ ஹோவாச ப்ரஜாபதிர்யஸ்மாத்ஸ்வமஹிம்நா
ஸர்வாꣳல்லோகாந் ஸர்வாந்தே³வாந் ஸர்வாநாத்மந: ஸர்வாணி
பூ⁴தாந் யுத்³வ்ருʼஹ்ணாத் யஜஸ்ரம் ஸ்ருʼஜதி விஸ்ருʼஜதி
விவாஸயத் த்யுத்³க்³ராஹ்யத உத்³க்³ருʼஹ்யதே
ஸ்துஹி ஶ்ருதம் க³ர்தஸத³ம்யுவாநம் ம்ருʼக³ம் ந பீ⁴மமுபஹந்துமுக்³ரம்
ம்ருʼடா³ஜரித்ரே ருத்³ரஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்நிவபந்து ஸேநா:
தஸ்மாது³ச்யத உக்³ரமிதி ॥

முதலில் ந்ருஸிம்ஹனின் மந்த்ராராஜ மந்திரத்தை உபதேசம் செய்த பிரும்மா, தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க , அந்த மந்திரத்தில் உள்ள பாதங்களின் அர்த்தங்களை விரிவாக வ்யாக்யானம் செய்கின்றார். என்ன பெருமை! உபநிஷத்தில், அதுவும் ஸ்ருஷ்டிகர்த்தா ஆகிய ப்ரம்மாவின் வாயிலே வந்த உன்னதமான வ்யாக்யார்த்தங்கள் - வேறு எந்த ஒரு மந்திரத்திற்கும் இல்லாத பெருமை இந்த ந்ருஸிம்ஹனின் மந்திரத்திற்கு . இந்த உலகில் வாழ பொருளும், வீடு பேரு பெற அருளும் தரும் ஒரே தெய்வம் ந்ருஸிம்ஹன் தான்.
தேவர்கள், உக்கிரம் என்று எதனால் ந்ருசிம்ஹனை சொல்கின்றீர்கள் என்று வினவ, ப்ரம்மா அதற்க்கு பொருள் சொல்கின்றார் கேளுங்கள். அனைத்து உலகங்களையும், தேவர்களையும், மனிதர்களையும், படைப்புகளையும் - தன் பால் ஈர்க்கும் சக்தி படைத்தவனும், அனைத்தையும் இடைவிடாது
ஸ்ருஷ்டித்தும், ரக்ஷித்தும், அழித்தும் காக்கும் பெருமை கொண்டவன் ந்ருஸிம்ஹன்.
ஸ்துஹி ஶ்ருதம் க³ர்தஸத³ம்யுவாநம் ம்ருʼக³ம் ந பீ⁴மமுபஹந்துமுக்³ரம்
ம்ருʼடா³ஜரித்ரே ருத்³ரஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்நிவபந்து ஸேநா:
மேற்காணும் மந்திரம் ஸ்ரீ ருத்ரத்திலும் உள்ளது. பரமேஸ்வரனும் ந்ருஸிம்ஹனும் ஒன்று என்னும் ஞானத்தை அளிக்கின்றார் ப்ரம்மா நமக்கு. இதய குகையில் வாழபவரும், நித்ய யுவாவாக இருப்பவரும், மிருகம் என்னும் சிம்மத்தை போல வீரம் மிகுந்த உக்கிர ரூபத்தை தரித்தவரும், மிகவும் புகழ் பெற்றவருமாகிய ந்ருசிம்ஹனை துதிப்போமாகுக! ருத்திரனாகி இருக்கும் ந்ருஸிம்ஹனே! அழியக்கூடிய இந்த சரீரத்திலேயே சாசுவதமான சுகத்தை (பூரணமான ஞானத்தை) அளிக்க வேண்டும்! உங்களுடைய சைன்யங்கள் எங்களின் (அகம், புறம்) எதிரிகளை அழித்து ஒழிக்கட்டும்!
மேற்கூறிய மந்திரத்தின் பொருளால், ந்ருஸிம்ஹனிடத்தில் (பிரமேஸ்வரனிடத்திலும்) பிரார்த்தனை - நம்முடைய உள்ளே உள்ள காம க்ரோதங்களை அழித்து , பூர்ணனான ஞானத்தையே அருள வேண்டும் என்று. அதே போல வெளியிலே உள்ள வஞ்சகர்களான நம் எதிரிகளை அழிக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை.
இப்படி உக்கிரமான ரூபத்தை தரித்து , தன பக்தர்களை காத்து, துஷ்டர்களை அழிப்பதில் அபரிமிதமான சக்தியை படைத்திருப்பதால் ந்ருசிம்ஹனை உக்கிரம் என்னும் பதம் வர்ணிக்கும்.
இதை விட அழகாக, எவரேனும் சொல்ல முடியுமா? இறைவன் கொள்ளும் கோபமும், பக்தர்களை anugruham செய்வதற்கே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கருணை கடலாகிய லட்சுமி ந்ருஸிம்ஹன் நம்மையும், நம் தமிழ்த் திருநாட்டையும், பாரத நாட்டையும் துஷ்டர்கள், பிரிவினை வாதிகள், மிலேச்சர்களிடத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தித்து கொள்வோம்.

No comments:

Post a Comment