Saturday, May 19, 2018

வேதோக்த உபநயனம்..........

வேதோக்த உபநயனம் - அறிவோமா?

இன்றய தினங்களில் லௌகீக உபநயங்களும், சொந்த பந்தங்களை எல்லாம் அழைத்து ஒரு திருவிழா போல ஒரே நாளில் முடிக்கும் இந்த கிராமத்தின் விவரங்களை அறிவோமா?

க³ர்பா⁴ஷ்டமேঽப்³தே³ குர்வீத ப்³ராஹ்மணஸ்யௌபநாயநம் ।
க³ர்பா⁴தே³காத³ஶே ராஜ்ஞோ க³ர்பா⁴த் து த்³வாத³ஶே விஶ: ॥  2.36

தாயின் கர்பத்தில் இருந்து எட்டு வருடங்களில் ப்ராம்மணனும், பதினோரு வருடங்களில் அரசனும், பன்னிரண்டாவது வருடத்தில் வைசியனும் உபநயனம் செய்து கொள்ள வேண்டும்.

ஆ ஷோத³ஶாத்³ ப்³ராஹ்மணஸ்ய ஸாவித்ரீ நாதிவர்ததே ।
ஆ த்³வாவிம்ஶாத் க்ஷத்ரப³ந்தோ⁴ரா சதுர்விம்ஶதேர்விஶ: ॥ 2.37

பதினாறு வயதிற்குள்  ப்ராம்மணனும், இருப்பது இரண்டு வயதிற்குள்  க்ஷத்ரியனும், இருப்பது நான்கு வயதிற்குள் வைச்யனும்  உபநயம் செய்து கொண்டு, சாவித்ரி என்ற காயத்ரி மந்த்ர உபதேசம்  பெற்றுக் கொள்ள வேண்டும்.

அத ஊர்த்⁴வம் த்ரயோঽப்யேதே யதா²காலமஸம்ஸ்க்ருʼதா: ।
ஸாவித்ரீபதிதா வ்ராத்யா ப⁴வந்த்யார்யவிக³ர்ஹிதா: ॥ 2.39

மேற்கூறிய வயது வரம்பிற்குள் , உபநயனம் ஆகி, ப்ரம்மோபதேசம் என்னும் சாவித்ரி மந்திர உபதேசம் ஆகா விடின் அந்த சிறுவர்கள் உபநயனம் செய்து கொள்ளும் யோக்கியதையை இழந்து விடுகிறார்கள்.அப்படிப்பட்டவர்கள் வ்ராத்யர்கள் அல்லது தம் குடிமையை இழந்தவர்கள் என்று சான்றோர்களால் (ஆரியர்களால்) இகழ  படுவார்கள்.

கார்ஷ்ணரௌரவபா³ஸ்தாநி சர்மாணி ப்³ரஹ்மசாரிண: ।
வஸீரந்நாநுபூர்வ்யேண ஶாணக்ஷௌமாவிகாநி ச ॥  2.41

இனி பிரம்மச்சாரிகள் அணியும் ஆடை பற்றிய விவரங்கள் . மேல் துணி - கரு  மானின்  (க்ருஷ்ணாஜினம்)   தோல் - பிராம்மணன், புள்ளி மானின் தோல் - க்ஷத்திரியன், ஆட்டின் தோல் - வைசியன் , மேல் வஸ்திரமாக அணிய வேண்டும்.  கீழ் வஸ்திரம் - சணல் துணி - பிராம்மணன், நார் துணி - க்ஷத்திரியன், கம்பளி துணி - வைசியன் அணிதல் வேண்டும்.

மௌஞ்ஜீ த்ரிவ்ருʼத் ஸமா ஶ்லக்ஷ்ணா கார்யா விப்ரஸ்ய மேக²லா ।
க்ஷத்ரியஸ்ய து மௌர்வீ ஜ்யா வைஶ்யஸ்ய ஶணதாந்தவீ ॥ 2.42

இனி மேகலை என்னும் (இடுப்பில் காட்டும் கயிறு) பற்றிய விவரங்கள். பிராம்மணன்  முஞ்சி என்னுள் புல்லால் ஆகிய மூன்று இழைகள் கொண்ட பின்னல் கயிற்றை கட்டிக் கொள்ள வேண்டும். முஞ்சி என்னும் புல்லால் ஆனதால் தான் மௌஞ்சி என்று பெயர். (முஞ்சி பில் இல்ல விட்டால் தர்ப்பை புல்லாலும் செய்யலாம்).  க்ஷத்ரியன் மூர்வ என்னும் வில்லின் நாணால் ஆன  மேகலையும், வைசியன் சணலால் ஆன மேகலையும் தரிக்க வேண்டும்.

கார்பாஸமுபவீதம் ஸ்யாத்³ விப்ரஸ்யௌர்த்⁴வவ்ருʼதம் த்ரிவ்ருʼத் ।
ஶணஸூத்ரமயம் ராஜ்ஞோ வைஶ்யஸ்யாவிகஸௌத்ரிகம் ॥ 2.44

இனி உபவீதம் பற்றிய விவரங்கள். பஞ்சு நூலால் ஆகிய பூணூல் ப்ராம்மணனும், சணலால் ஆகிய பொன்னால் அரசனும், கம்புளி நூலால் ஆகிய பூணலை வைசியனும் தரிக்க வேண்டும்.

ப்³ராஹ்மணோ பை³ல்வபாலாஶௌ க்ஷத்ரியோ வாடகா²தி³ரௌ ।
பைலவௌது³ம்ப³ரௌ வைஶ்யோ த³ண்டா³நர்ஹந்தி த⁴ர்மத: ॥ 2.45

உபநயம் செய்து கொண்ட பிரம்மச்சாரிகள், தங்கள் கைகளில் தரிக்கும் தண்டத்தின் வ்விவரங்கள் இனி. பிராம்மணன்  - பிளவை மரம், பலாச மரம், க்ஷத்திரியன்  -கருங்காலி, ஆலமரம் , வைசியன் - அத்தி  மரம், பிலு (ஒரு வகை புல்) ஆகிய கிளைகளை தண்டமாக தரித்தல் வேண்டும்.

கேஶாந்திகோ ப்³ராஹ்மணஸ்ய த³ண்ட:³ கார்ய: ப்ரமாணத: ।
லலாடஸம்மிதோ ராஜ்ஞ: ஸ்யாத் து நாஸாந்திகோ விஶ: ॥  2.46

இனி தண்டத்தின் நீளம். - பிராம்மணன் - தலை முடி வரை, க்ஷத்திரியன் - நெற்றி வரை, வைசியன் - மூக்கு வரையிலும் நீளம் உள்ள தண்டத்தை தரிக்க வேண்டும்.

ருʼஜவஸ்தே து ஸர்வே ஸ்யுரவ்ரணா: ஸௌம்யத³ர்ஶநா: ।
அநுத்³வேக³கரா ந்ரூʼணாம் ஸத்வசோঽநக்³நிதூ³ஷிதா: ॥ 2.47

தண்டம் என்பது கோணல் இல்லாமல், நீரானதாக, தீயால் கெட்ட படுத்த படாததாக இருத்தல் வேண்டும். தண்டத்தை கண்டால், எவருக்கும் காயம் ஏற்பட கூடாது.

ப்ரதிக்³ருʼஹ்யேப்ஸிதம் த³ண்ட³முபஸ்தா²ய ச பா⁴ஸ்கரம் ।
ப்ரத³க்ஷிணம் பரீத்யாக்³நிம் சரேத்³ பை⁴க்ஷம் யதா²விதி⁴ ॥ 2.48

மேற்கூறிய படி தண்டத்தை தரித்தவனாக, சூரியனை வணங்கி(சந்தியா வந்தனத்தால்), அக்னியை வணங்கி , ப்ரதக்ஷிணம் செய்து (ஷமிதா தானத்தால்) ஒரு ப்ரம்ம சாரி பிக்ஷைக்கு செல்ல வேண்டும்.

ப⁴வத்பூர்வம் சரேத்³ பை⁴க்ஷமுபநீதோ த்³விஜோத்தம: ।
ப⁴வந்மத்⁴யம் து ராஜந்யோ வைஶ்யஸ்து ப⁴வது³த்தரம் ॥2.49

பிராம்மணன் - பவதி பி⁴க்ஷாம் தேஹி , க்ஷத்திரியன் - பி⁴க்ஷாம் பவதி தேஹி , வைசியன் - பி⁴க்ஷாம் தேஹி பவதி  என்றும் பிக்ஷை கேட்க வேண்டும்.

இப்படி பிரம்மச்சர்யத்தை எச்சரிக்க வேண்டிய நியமத்தை பல லக்ஷம் ஆண்டுகளுக்கு முன்பே மனு தெள்ள தெளிவாக சொல்லி இருக்கின்றார்.



No comments:

Post a Comment