- ஆண்களுக்கு - சொளும், அன்னப்ராசனம், சமவர்தனம், உபநயனம், விவாஹம்
- பெண்களுக்கு - அன்னப்ராசனம், விவாஹம், பும்ஸவனம், சீமந்தம்
ஆகிய விஷேஷங்களின் பொழுது, காப்பு கட்டுதல் என்ற ப்ரதிஸர பந்தம் நடை பெறுகின்றது. கும்பத்தில் வருணனை ஆவாஹனம் செய்து, உபசாரங்கள் செய்து, அதன் பிறகு கும்பத்திற்கு வடக்கில் அரிசியை பரப்பி, அதன் மீது சந்தனம் பூசிய சூத்திரம் (கயிறு) வைத்து, ப்ராம்மணர்களை கொண்டு ப்ரதிஸர பந்த ஜபம் செய்விக்க வேண்டும். (இதற்க்கு வேத மந்திரங்கள் உண்டு).
ஒரு காரியத்தை செய்யும் பொழுது, உறுதி பூண்டு ஏக மனதாக , அந்த காரியம் முடியும் வரை இருப்பதற்கு ஹேதுவாக , கையில் கட்டிக்கொள்ளும் கயிறே கங்கணம் எனப்படும். இதனையே, "கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பி விட்டான்" என்பார்கள்.
மந்தஜெபம் செய்து, மந்திரத்தால் ப்ரோக்ஷித்து, அதன் பிறகு மகா மிருத்யுஞ்சய மந்திரத்தால், அந்த கயிற்றை, மும்முறை, விபூதியில் தோய்த்து, பெண்ணுக்கு - இடது கையிலும், ஆணுக்கு - வலது கையிலும் கட்டுதல் வேண்டும். சரட்டை கட்டும் பொழுது , கைகளில், பழம் அட்சதை நிறைந்திருக்க வேண்டும்.
எந்த காரியத்திற்காக, கங்கணம் கட்டிக்கொள்கிறோமோ, அந்த க்ரமம், நிறைவேறிய பிறகு, அன்று சாயம் வேளையில் ஓம் பூ : ஓம் புவ : ஓம் சுவ:
ஓம் பூர் புவ சுவ : என்று சொல்லி, அந்த கயிற்றை கழட்டி , ஆற்றில் அல்லது குளத்தில் இட்டு விட வேண்டும்.(கங்கணத்தை கட்டி விடும் புண்ணியவான்கள், அதனை விசர்ஜனம் செய்யும் கிராமத்தை சொல்லி தருவதில்லை).
திக் பாலகர்களை ஆவாஹனம் செய்து, மாத்திரத்தால் தெளிக்கும் பாலிகையை, மண்டபத்திலேயே விட்டு விட்டு வருதல் தோஷம். அதனை, பெண் வீட்டிக்கு எடுத்து சென்று, முறையே குளத்திலோ, ஆற்றிலோ விசர்ஜனம் செய்ய வேண்டும். அதே போல தான் கையில் கட்டிக்க கொள்ளும் காப்பியும், விஷேஷம் முடிந்த பிறகு கழற்றி ஆற்றிலோ, குளத்திலோ ஐடா வேண்டும் என்பது விதி.
இப்படியாக ப்ரதிஸர பந்தம் என்னும் கங்னதாரணம் முற்றும்.
No comments:
Post a Comment