Friday, August 14, 2020

Spoken Sanskrit...

 कीदृश भोजनं खादितुं  इच्छसि त्वं ?

What kind of food do you like to eat?

अहं  अन्नं खादितुं इछामि |

I like to eat rice.

अध्भुतं | अन्नेन सहा कीदृश व्यञ्जनानि खादितुं  इच्छसि त्वं |

Great! Along with rice what do you like to eat?

अनॆन सहा आज्यं, सूपं, शाकं , उपसेचनम्, उपदंशं, क्वथित, विविध व्यञ्जनानि ,रक्तफलस्य रसं, पायसान्नं, च ददि खादितुम् इच्छामि |

Along with rice I like to eat ghee, dhal, vegetable(curries), chutney, sambhar, tomato rasam, rice pudding and curd.

समीचीनं! भोजनान्तरं त्वं किं करोसि?

Great! After meals what do you do?

भोजनान्तरं अहं हस्तं च पादौ प्रक्षालयामि !

After meals I wash my hand(s), legs.

अध्भुतं! तदनन्तरम् किं करोसि?

great! And after that what do you do?

तदनन्तरम् थम्बूलम् लभति चेत् अहं एला लवङ्ग पूकी फल मुक्ता चूर्णेन शा तम्बूलवल्लि दलानि चर्वयामि |

After that if available I will chew betel leaves with cardamom, cloves, sea-shell calcu, & betel nuts.

परमाध्भुतं! तत् पश्चात् किं करोसि ?

Very excellent. And after that ?

तत् पश्चात् संयम प्राप्नोति चेत्  विश्रामं करोमि !

After that I will take rest for sometime.

Wednesday, July 8, 2020

என்சிறுக்கண்ணன்.......



என்சிறுக்கண்ணன் என்னகம் புகுந்தமையால் என்னகங்காரம்  இழந்து மனமாயை தானும் ஒழிந்து அவன் நினைவாய் நிற்கின்றேன்! என்சொல்வேன் மணிவண்ணன் பெருமைகள்!

பாலும் தேனும் வெண்ணை தயிர் எல்லாம் எனக்காய் நான் உண்ணும் நேரம் என் சிறு  கண்ணன் என்னப்பன் மணிவண்ணன் தனக்களித்து உண்ணவேண்டும் என்னும் எண்ணம் மிகுதியால் நெய் உண்ணேன் ! பாலும் உண்ணேன் !
என் சொல்வேன் என் தாமோதரன் பெருமைகள்!

கனவும் நினைவும் உறக்கமும் தாண்டி நான்காம் நிலையாம் பரிசுத்த போதத்தை தந்திடுவான் என் கண்ணன்! என் சொல்வேன் என்னப்பன் திரிவிக்கிரமன் பெருமைகள்!

பெரும் பேறு செய்திட்டான் காளிங்கன்! மணிவண்ணன் திருப்பாதங்கள் தன சென்னியில் பதிந்திட! என்னசொல்வேனோ அவன் பெருமை என்னப்பன் பற்பநாபன் பெருமைகள்!

கண்ணன் கேசவன் நாரணன் என்றும் பல பல நாமம் சொல்லி என் சிறுக்கண்ணை கொண்டாடி மகிழ்ந்திடுவேன்! இணக்கம் புகுத்தென்னை பரிசுத்தனாய் ஆக்கின கண்ணன் பெருமைகள் என்னசொல்வேனோ!

உலகங்கள் மூன்றும் உண்டுமிழ்ந்து உய்யும் என் சிருக்கண்ணன் கோவலனாய் விளையாடி பார்த்தனுக்கு தேரோட்டி லீலைகள் பல செய்து விளையாடி என்னகம் புகுந்தான்! என்னசொல்வேனோ அந்த குருபவனபுரத்துக் கண்ணன் லீலைகள்!

Monday, May 25, 2020

Names of Utensils in Tamil..


  1. சட்டகம்
  2. கரண்டி
  3. அன்னக்    கை
  4. அகப்பை / ஆப்பை
  5. தேக்கரண்டி
  6. கோழிமுட்டைக் கரண்டி / குழிக் கரண்டி
  7.  கண்ணாப்பை


  1. வட்டில்
  2. வட்டல் / வட்டை
  3. தர்பண வட்டை
  4. தாம்பாளம்
  5. தீஞ்சட்டி
  6. இலுப்பைச் சட்டி
  7. வடை கல்லு
  8. கற்சட்டி
  9. தோசை கல்லு / கோரி
  10. பணியாரக் கல்லு


  1. முறுக்குப் புடி
  2. சேவை நாழி
  3. மத்து



  1. ஆழாக்கு /மரக்கால் /படி/சுட்டி
  2. குவளை
  3. பானை



  1. இட்லிப் பானை
  2. புட்டு கோல்
  3. இடுக்கி
  4. கத்தி
  5. அரிவாள் மனை
  6. சிரவை
  7. பணியாரக் கல்லு / அப்ப  காரல்
  8. ஆட்டுக் கல்லு
  9. அம்மி கல்லு  & குழவி
  10. இயந்திரம் / எழுந்திரம்



  1. சல்லடை
  2. தவலை



  1. குடம்
  2. அண்டா
  3. குண்டா
  4. வால் பாத்திரம்
  5. சொம்பு
  6. பானை
  7. சம்புடம்
  8. கிண்ணம்
  9. அறிவால்
  10. அடுக்கு
  11. கங்காளம்
  12. முறம்
  13. கூடை
  14. பொட்டிக்கூடை
  15. பூ வாளி
  16. வாளி
  17. மண் கலம்
  18. மரக்   கலம்


------------------------------------------------------

Tuesday, May 12, 2020

பழமொழிகள் - I (24)

  1. அடியேன்னு கூப்பிட பொண்டாட்டியே இல்லை.பிள்ளை பேர் சந்தான கோபால கிருஷ்ண சாமியாம்
  2. அரிசியேம்  கொண்டு அக்காள் ஆத்துக்கு போன போலே!
  3. அளவுக்கு மீறினால் அம்ருதமும் நஞ்சு 
  4. ஆவணியாவட்டத்திற்கு அசடும் சமைக்கும்!
  5. இஞ்சிக்கு தோலில் விஷம் ! கடுக்காய்க்கு பருப்பில் விஷம் !
  6. இரவில் இலைக்கறி உண்ணாதே!
  7. இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு !
  8. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது!
  9. கடை தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்த மாதிரி !
  10. கலத்திலே உட்கார்ந்தா காசிக்கு போன ப்ராமணனே வந்துடுவான்
  11. குழம்பில் இட்ட கருவேப்பிலை மாதிரி !
  12. சக்கைக்கு சுக்கு மருந்து  மாங்காய்க்கு தேங்காய் மருந்து!
  13. சுக்குக் கண்ட இடத்திலே பிள்ளை பெற்றாற்போல!
  14. சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சின சாமியும் இல்லை!
  15. சொல்லிக் கொடுக்கிற புத்தியும் ஊட்டிக்கொடுக்கிற சாப்பாடும் நிலைக்காது!
  16. தனக்கு தனக்கு என்றால் கொழுக்கட்டை பெருசு!
  17. தனக்கு தானும் பிரைக்குத் தூணும்!
  18. நுனிப்புல் மேய்ந்து விட்டு வந்து கதை விடறமாரி!
  19. நெய்யப்பம் தின்னால் ரெண்டுண்டு கார்யம்! 
  20. நெல்லு பழசானா பொன்னு எள்ளு பழசானா பொன்னு!
  21. பருப்பு இல்லாத கல்யாணமா?
  22. பாத்திரம் நக்கி வீட்டிலே ஒரு தொன்னை நக்கி 
  23. பாழானது பசுவின் வயிற்றிலே!
  24. விருந்தும் மருந்தும் மூணு நாள் தான் 

Sunday, February 23, 2020

பத்தினி தெய்வம் கண்ணகி ....

சோழ வளநாட்டின் கண்ணகி தான் போய்
 பாண்டி நாட்டரசன் தன தப்பை தட்டிக்கேட்டு

இடமுலை கிள்ளி எரிந்து மதுரையில் கோவத்தால்
மடமுலை பெண்டிர்க்கும் பத்தினிகட்கும் அரசியாய்

இட்டாள் கட்டளை அங்கு அக்கினி தேவனுக்கு
இருபோது முத்தீயும் வழுவாது வணங்கும் பார்ப்பார்

பசுவுடன் முதியவர் குழந்தைகள் கற்புடை பெண்டிர்
இவர்களோடு தம் தருமம் வழுவாத தருமிட்டர்

இவரொழிந்து ஏனைய எல்லோரையும் சுட்டு பொசுக்குக்கும் படி
ஆணை இட்டாள் பத்தினி தெய்வம் நம் கண்ணகி தெய்வம்

விரிதலை செங்கண்ணும் வழிநீரின் கண்கள் கொண்டு
எரிதலை அக்கினியின் சுவாலை தானும் கொண்டு

பத்தினி தெய்வம் பெண்டிர்க்கெல்லாம் தெய்வம்
கொற்றவை காளியின் உருவம் கொண்டு அவளும்

சேரநாடு சென்று இருந்து விமானத்தில் தன் கணவன்
கோவலனுடன் சென்று விண்ணுலகம் ஆள பறந்து சென்றாளே!

பத்தினி தெய்வம் கண்ணகி தானே சென்று இம்மையில்
அனைவர்க்கும் அருளிடவே கொடுங்கல்லூர் எனும் கோயில்

பத்திரகாளியாய் தாருகனை அழித்தவளாய் தேவியாய்
பத்தினி தெய்வம் நம் கண்ணகி வீற்றிருந்தாளே!

Sunday, February 16, 2020

விநாயக சதுர்த்தி - இருபத்தொரு இலைகள்

அருகு வில்வம் துளசி நொச்சியுடன்
கண்டம் கத்திரி விட்ணு கிராந்தியும்

வெண் மருது வெள்ளை கரிசிலை
வன்னி ஊமத்தை வெள்ளெருக்கு

நெல்லியும் மருகும் மரிக்கொழுந்தும்
மாவிலை மாதுளையும் தேவதாருவும்

சாதி மல்லிகை இலையுடன் நெல்லி இலை
இலந்தை அரளியும் நாயுருவி மாசி பத்திரி

இவைகள் அனைத்துமே ஆனைமுகன்
சதுர்த்தி விழாவில் பூசனைக்கு உரியனவே!

இருபத்தொரு பத்திரங்கள் இவைகளை  பூசை செய்து
ஆற்று நீரில் கலந்திட நீரும் சுத்தமாகி ரோகங்கள் நீங்கிடுமே!

மனு கூறும் வாழ்வியல் - அத்தியாயம் 11

நாளைக்கொரு கவளமாய் தேய் பிறையில் குறைத்தும்
வளர்பிறையில் கூட்டியும் உண்டு முப்பொழுதும்  நீராடி

சந்தியா கருமங்களை செய்தலே சந்திராயணம் எனும் நோன்பே!
பருகா பாலும் உண்ணா உணவும் உண்டோர்கள் பாவம் தீர்க்கும் !

மனு சொன்ன நோன்புகள் பலவற்றுள் முக்கியம் சந்திராயணம்
வெங்காயம் பூண்டு காளான் இவைகள் உட்கொண்ட பாவந் தீருமே!

வேள்வி செய்த மிகுதியை மதியத்தில் எட்டு கவளம் மாதம்
முழுதும் உண்பதே யதி சந்திராயணம் எனும் நோன்பு

காலை மாலை இருவேளைகள் நான்கு கவளங்கள் மாதம்
முழுதும் உண்பதே சிசு சந்திராயணம் எனும் நோன்பு

இப்படியாய்  மாதத்தில் இருநூற்று நாற்பது கவளங்கள்
உண்போர் சந்திரன் தன உலகத்தில் வாழ்வார்கள்!

உருத்திரர் வசுக்கள் மருத்துக்கள் மகரிஷிகள் எல்லாரும்
நோற்றனரே இந்நோன்பு தம் பாவங்கள் எல்லாம் தீர்ந்திட!

மஹாவியாகிருதிகள் ஓதி வேவியால் வர உணவை உண்டு
பொய் பிரட்டு கோபமின்றி அஹிம்சை ஆச்சரிப்பர் புண்ணியர்

இரவில் மும்முறையும் பகலில் மும்முறையும் நீராடி ஆடை உடுத்து
பெண்டிர் கீழ்மக்கள் இவர்பால் பேசாமல் நாள் நோன்பை நோர்ப்பரே!

பகலில் நின்றும் இரவில் இருந்தும் வெறும் தரையில் கிடந்தும்
மாணவர் போல் இருந்து யஹ்ர்வர்கள், பார்ப்பனர், ஆசிரியரை பூசிப்பரே

சாவித்திரி என்னும் காயத்திரி எப்பொழுதும் சொல்லி புண்ணியாஹம் தானும் சொல்லி  விரதம் ஆச்சரிப்பரே !

குற்றமுணர்ந்து மனம் வருந்தி தானங்கள் பலசெய்து
வேதங்கள் தானோதி பாவம் விலக்குவர் புண்ணியர்!

குற்றம் புரிந்தவர் மனம் வருந்தி இனி ஒருமுறை இக்குற்றத்தை
செய்யேன் என்றெண்ண அக்குற்றத்தின் பழிநீங்கி புண்ணியர் அவரே!

அறிந்தும் அறியாதும் ஒருமுறை குற்றம் செய்வோர்
குற்றத்தின் பழிநீங்க மீண்டும் அதனை செய்யாரே!

வள்ளுவன் தருநூலுக்கும்  சாரமாகி அறத்திற்கு இலக்கணமாகி வேதப்பொருளும் மேன்மக்கள் மரபும் கூறும் மிருதி என்னும் மனு நூலே!

அறிவே பார்ப்பார் தவம் காதலே அரசர் தவம் பொருளீட்டலே
வணிகர் தவம் மற்ற மூவர்க்கும் சேவை செய்தலே ஏனையோர் தவம்!



மனு சொல்லும் நீதியே நம் சமூகத்தின் மூலம்
அறநூல் அனைத்தும் மனுவின் நூலில் அடங்கும்!


Saturday, February 8, 2020

மனு கூறும் வாழ்க்கை முறை..

உதிக்கும் கதிரவன் பிணத்தின் புகையும் உடைந்த
இருக்கையும் யாத்திரைக்கு ஆகா சகுனங்கள்

நகத்தால் புல்லை கிள்ள்ளாதே காலால் நிலத்தை கீராதே
நகத்தை பல்லால் கடிக்காதே இம்மூன்றும் அழிவிற்கு வித்தாகும்

காளைகள் பாற்பசுக்கள் முதுகின் மேல் சவாரி செய்யாதே
பூமாலை தலைமுடி மேல் அணியாதே கழுத்தை நெரித்தல் கூடாது

இரவில் மரத்தடிக்கு அருகாமையில் இருக்காதே, உறங்காதே
கிராமம் வீடுகளின் முன்வாசல் வழியாகவே நுழைதல் வேண்டும்

சூதாட்டம் ஆடாதே படுக்கையில் படுத்து உணவினை உண்ணாதே
கையில் இட்ட மற்றும்  இருக்கையில்  வாய்த்த உணவினை உண்ணாதே

எள்ளினால் செய்த பண்டம் இரவி அத்தமனத்திற்கு பின் உண்ணாதே
நக்கினமாய் உறங்காதே சுத்தமற்ற இடத்திற்கு செல்லாதே உண்ட பின்பே

கால்களை கழுவி ஈரம் காயும் முன்பே உணவினை உண்ணுதல் வேண்டும்
ஈரக் கால்களுடன் படுக்கைக்கு செல்லாதே !

ஈர கால்களுடன் ஈரம் காயுமுன்பே உணவினை உண்டு முடிப்பார்
இந்த தரணியில் வாழ்வர் பல்லாண்டு இதுவே நம் நாட்டின் மரபு !

கைகளால் நீந்தி ஆற்றினைக் கடக்காதே ! மல சலங்களை
கண்களால் உற்று நோக்காதே! குறுகிய இடத்தில நுழையாதே!

தலை முடி சாம்பல் எலும்புடன் பருத்திக்கொட்டை உடைந்த
மண் பாண்டம் உமி  இவற்றை மிதியாரே நீண்ட ஆயுள் வேண்டுவோர்கள்!

நயவஞ்சர்கள்  புலையர்  சண்டாளர்கள் மூர்க்கர் முட்டாள்கள்
கடை குலத்தோர் இழிகுலத்தோர் இவர்களுடன் வசிக்காதே!

கடை குலத்தோர் இழி மக்கட்கு அறிவுரைகள் வழங்கிடுதல் கூடாது
மனு உரைத்த அற நெறியை கடை குலத்தோர்க்கு கூறுதல் கூடாது

கடை குலத்தோர்க்கு  அற நெறியை எடுத்துரைத்தும் விரதங்கள்
பலவற்றை அவர்கட்கு சொல்லும் மாந்தர் அசமவிருத்தம் என்னும் நரகிற்க்குள் வீழ்ந்து ஒழிவரே!

தலை முழுகாமல் நீராடாதே அசுத்தமாய் இருக்கும் வேலையில் தலையை தொடாதே
இரண்டு கைகளையும் சேர்த்து தலையை சொரிந்திடல் கூடாது

கோபத்தால் தலை மயிரை பிடித்திழுக்க கூடாது
தலை முழுகி குளித்த பின்பு எண்ணெயால் கைகால்களை தொடாதே !







Friday, February 7, 2020

மனு தன் சந்ததிகள்....

மனு தன் சந்ததிகள் என்பதால் தான்
நம்மை மனுஷ்யர்கள் என்பார்கள் உலகினிலே

மானிடர்  என்றும் மானவர் என்றும் உலகின் பற்பல
மொழிகளில் சொல்வர் அனைத்திற்கும் மூலம் மனு என்னும் முப்பாட்டானே!

அறத்திற்கும் ஆதியாம் வேதங்கள்  வேதங்களே உலகனைத்திற்கும்
மூலம்! உலகனைத்திலும் அறத்திற்கு மூலம் வேதமே!

மனு உரைத்த சாத்திரங்கள் அனைத்திற்கும் வேதமே சாரம்
முக்காலம் உணர்ந்தவன் சர்வஞானம் படைத்தவன் மனுவே!

மனுவே இந்த மனித குலத்தின் முப்பாட்டன்! உலகம் தன்னை
படைத்த பிரமன் மனுவை படைத்தான் மாந்தர்களை பெற்றிடவே!

மனுக்கள் பலருந்து அவர்களுள்  சுவாயம்புவ மனுவே
சூரியன் இடத்தில தோன்றி நம் சாத்திரத்தை உரைத்தானே!

ஆதியான வேதங்களும் அதன் பின்பு வேதியர்கள் தம் மரபும்
மேன்மக்கள் புண்ணியர் தம் மரபும் தன் மகிழ்ச்சியும் சாத்திரத்தின்  மூலம்!

அறத்தின் சாத்திரங்களை மதித்து அதன் படி வாழும் மக்கள்
இகத்தில் சுகங்களும் பரத்தில் பேரானந்தமும் பெறுவார்கள் இது சத்தியம்!

சுருதி என்பர் வேதத்தை மிருதி என்பர் தரும சாத்திரத்தை
இவ்விரண்டும் தரும் இவ்வுலகில் மகிழ்ச்சியும் அவ்வுலகில் அருளும்.

சுருதியும் மிருதியும் இவ்விரண்டும் மானிடர் தம் வாழ்விற்கு மூலம்
இவ்விரண்டும் சொல்லும் வழி வாழ்வார்கள் மேன்மக்களே!

ஆதியாம் வேதம் என்னும் சுருதியும் தரும சாத்திரம் என்னும் மிருதியும்
மேன்மக்கள் தம் மரபும் வாழ்வின் மகிழ்ச்சியும் இவையே அறத்தின் நான்கு தூண்கள்!

சிற்றின்பம் பொருளும் கண்டு மயங்காத மாந்தர்கள் தரும சாத்திரம் படிப்பார்கள்
தரும சாத்திரம் கற்கும் புண்ணியர்க்கு என்றென்றும் வேதமே பிரமாணம்!

சுருதியும் மிருதியம் இவ்வரண்டும் அனைவர்க்கும் இருகண்கள் போலாகும்
அவ்விரண்டும் முரண்படுமே ஆயின் இரண்டுமே பிரமாணம் என்றுரைப்பார் மேன்மக்களே!

மனு கூறும் வாழ்க்கை முறை

ஒற்றை ஆடையில் உணவருந்த வேண்டாம் நக்கினமாய் ஆடையின்றி நீராடல் கூடாது மக்கள் நடக்கும் பாதையிலும், சாம்பல் மீதும் , மாட்டு கொட்டிலிலும், உழுத நன்னிலத்திலும், மலை மீதும், செங்கல் சூளையிலும் ,உடைந்த கோயில் மீதும் எறும்பின் புற்றதன் மீதும் உயிரினங்கள் வாழும் பொந்துகளிலும் நீர் நிலைகள் மீதும் காற்றடிக்கும் திசை நோக்கியும் பார்ப்பனர் தீயவற்றை நோக்கியும் நதிகள் தம் கரைகளிலும் மலையதன் உச்சியிலும் பசு பார்ப்பார் ஆதித்யன் காற்று நீரிவற்றை நோக்கியும் பகற் பொழுதில் வடக்கு நோக்கியும் இரவில் தெற்கு திக்கை நோக்கியும் மல மூத்திரங்கள் கழித்திடல் கூடாது பசு பார்ப்பார் சூரியன் தீயுடன் நீர் காற்றிவற்றை நோக்கி சிறுநீர் கழிப்போர் அறிவு தேய்ந்து அழிந்திடுமே! தீயை வாயால் ஊத்தி அணைத்திடலும் ஆடையில்லா பெண்மணியை பார்த்தலும் அசுத்தமானவற்றை தீயினுள் எரிதலும் பாதத்தை தீயால் சூடு செய்தலும் கட்டிலுக்கடியில் அக்கினியை வைப்பதும் கால்மாட்டில் சூட்டிற்காய் தீயை வைப்பதும் தீயை மிதித்து நடப்பதும் உயிரினங்கள் மற்றவற்றை துன்புறுத்தலும் தருமம் உணர்ந்தோர் செய்யா செயல்களே! மனு சொல்வான் நீதியினை உணர்ந்திடுவீர் மாந்தர்களே! அந்தி சந்தி வேளையில் உணவினை உண்ணுதலும் , உறங்குதலும் , யாத்திரை செல்லுதலும் , நிலத்தை கீறுவதும், தானணிந்த பூமாலை தன்னை கழட்டுவதும் செய்தற்காகா செயல்களே என்றுரைத்தான் மனு இதனை அறிந்திடுவீர் மனிதர்களே! பாழடைந்த வீடதானில் உறங்குதல் ஆகாது ஆழ்நிதிரையில் இருப்போரை எழுப்புதல் ஆகாது தான் புரோஹிதனாக இல்லா வேள்விக்கு செல்லுதல் ஆகாது விடாய் காலத்தில் உள்ள பெண்டிருடன் உரையாடல் ஆகாது! பசு பார்ப்பார் சந்நிதியில், புனித வேள்வி கூடம் மற்றும் உணவருந்தும் நேரத்து வலது கையை திறந்து வைத்திடல் வேண்டும்! பாலருந்தும் கன்றுக்குட்டியை இடையூறு செய்யாதே! பாலருந்தக் கண்டாலும் யாரிடமும் சொல்லாதே! வானவில்லை கண்டாலும் மற்றோரிடத்தால் சொல்லரே ! வானவில்லை மற்றோக்கு சுட்டி தான் காட்டரே அறிவுடையோர்! மனு உரைத்த புனித நன்னூல் சாத்திரங்கள் மதியாத ஊரதனில் வாழ்ந்திடல் கூடாது! மலையின் அடிவாரத்திலும் தீராத நோய்கள் தொற்றி பரவும் கிராமத்திலும் வாழ்ந்திடல் ஆகாது! மந்திர பூணல் அணியாதவர்கள் இருபிறப்பாளர்கள் அல்லாதவர் அரசராய் ஆளும் நாட்டிலும் இழிமக்கள் அரசனை சூழ்ந்த நாட்டிலும் இழிமக்கள் பெரும்பாலராய் இருந்திடும் நாட்டிலும் வாழ்ந்திடல் வேண்டாமே! எண்ணெய் எடுக்கப்பட்ட பிண்ணாக்கை உண்ணுதல் கூடாது அதிகாலை வேளையிலும் இருட்டிய சாயங்காலத்திலும் உணவருந்துதல் கூடாது ! கைகளிரண்டும் சேர்த்து தண்ணீர் குடிக்காதே! வெண்கலத்தின் பத்திரத்தால் காலை கழுவாதே ! உணவு தட்டை மடியில் வைத்து உண்ணாதே ! உடைந்த மண் பாண்டத்தில் உணவுண்ணாதே! மற்றொருவர் உபகோயிந்த செருப்பும், காலணியும், துணிமணிகளும், தண்ணீர் சொப்பும்,அணிகலனும், பூணூலும், பூமாலையும் தான் தரித்தல் கூடாது!

Thursday, February 6, 2020

கலவிக்காகா நாட்கள்...

இரவுகள் பதினான்கு கலவிக்காகா நாட்கள் என்றான் மனு
மேன்மக்கள் புண்ணியர் என்றும் அந்நாட்களை தவிர்ப்பரே!

மாதத்தில் நான்கு நாட்கள் பெண்டிர்க்கு தீண்டா நாளும்
தேய்பிறையும் வளர்பிறையும் ஏகாதசி திரயோதசி இவையும்

முக்கியமான நாட்கள் அவைகளே கலவியிலா நாட்கள்
மேன்மக்கள் என்றும் அவற்றை தவிர்ப்பர் புண்ணியர்

அமாவாசை பவுர்ணமியுடன் அட்டமி நவமி இவைகள்
கலவிக்காக நாட்கள்  ஆறு என்றுணர வேண்டும்

மேற்சொன்ன பதினான்கு நாட்கள் ஒழிந்து மற்ற
பதினாறு நாட்கள் மட்டும் சிற்றின்பம் காண்போர்

இல்வாழ்வார் ஆயினும் பிரம்மச்சாரிக்கு ஒத்த புண்ணியர்
மனு கூறும் நாள் சாத்திரம் இவை என்று உணர்வர் புண்ணியர்.

ஐம்பொறி அடக்கி அறத்திற்காய் வாழ்வதே இல்வாழ்க்கை
தருமம் உணர்ந்த புண்ணியர் வாழ்க்கை முறை இதுவே!

மனு சொன்ன நீதியே இத்தரணியின் மூலம்!
வேதம் விளைந்த மண்ணின் சாத்திரம் இதுவென்று உணர்வோம் நாமே!

Friday, January 31, 2020

உற்ற துயர் துடைத்திடவே....

உற்ற துயர் துடைத்திடவே அடைந்தனர் அமரர்கள் பிரும்மாவை
பெற்றபிள்ளைகள் படுதுயரம் போக்க உபதேசம் செய்தானே!

கற்ற வேதம் அனைத்தின் சாரமாகி  முப்பத்திரண்டு எழுத்துக்கள்
நற்றவத்தின் பயனாகி உபதேசம் செய்தானே!

பற்றறுத்து அவன்பால் பத்திசெய்து ஓதுவீர் நரசிம்ம தாபினி என்னும் நூலே!
மற்றவற்றால் என்ன பயன் உணர்வீரே பாருளீரே!

தரும சாத்திரம் - 1

சின்ன வெங்காயம் பூண்டு காளான் மலினத்தில் விளைபொருட்கள்
தின்ன கூடாது இருபிறப்பாளர்கள் என்றானே மனு  ஒருபொழுதும்!

நல்ல பசுவின் பாலும் மற்றும் எருமை பாலை தவிர மற்றவற்றின்
பாலனைத்தும் பருகாப்பாலே! அறிந்திடுவீர் நம் மறபை!

கன்றில்லா மாட்டின் பாலும் ஆடு ஒட்டகம் கழுதை பாலும்
ஈன்ற பசுவின் முதல் பத்துநாள் பாலும் பருகாப்பாலே!

ஒற்றைக் குளம் கொண்ட மாக்கள் பாலும் வேற்று தாயின் பாலும்
கறந்து பின்பு புளித்த பாலும் பருகாப்பாலே சொன்னான் மனு!

நாட்டுக்கோழி பன்றி பூண்டோடு காளானும் வெங்காயம்
அறிந்து உண்ணும் இருபிறப்பாளர் தம் குலம் இழப்பர்!

தெரிந்தும் தெரியாலும் மேற்கூறிய ஆறு உணவையும் புசித்தவர்
இருபிறப்பாளர் ஒரு முழு வருடத்திற்கு ஆச்சரிப்பர் சந்தாப்பணம் என்னும் நோன்பே!

பெற்ற தாயும்

பெற்ற தாயும் உற்ற துணையும் மற்றும் உறவுகள் அனைத்தும் நீயே!
என்னப்பனே நரசிங்கா! என்னகத்துள் நின்று என்னை ஆட்கொண்டாய் !
என்சொல்வேன் நின் மஹிமை!

என்னப்பனே நரசிங்கா

சிவனது லிங்கத்தில் என் சிங்கத்தை கண்டேனே!
சாளக்கிராமத்தில் அவன் திருமுகம் கண்டேனே!
நிற்பன நடப்பன ஊர்வன பறப்பன  அனைத்திலும்
என்னப்பன் நரசிங்கன் ஒளியாய் ஒளிர்கின்றான்!
என்சொல்வேன் நின் மஹிமை என்னப்பனே நரசிங்கா!

என்னகத்துள் நின்று என்னை ஆட்கொண்டு
என்னகங்காரம் மமதை அழித்து என்னை
நின்னடியானாய் ஆக்கி என்வினைகள் அகற்றி
நின் அகண்ட ஜோதியை எந்தனுக்குக்கு காட்டி
என்சொல்வேன் நின் மஹிமை என்னப்பனே நரசிங்கா!

தாணுவும் மாலும் அயனுமாய் உலகில் உள்ள அனைத்துமாய்
ஆன்மாவாய் பிருமமாய் உலகங்கள் மூன்றுமாய் ஈசுவரனாய் !
படைத்தும் அழித்தும் காத்தும் மறைத்தும் அருளியும்
பஞ்சப்பிரமங்களாய் நின்ற எனப்பனே நரசிங்கா!
நாயேனையும் ஆட்கொண்ட என்னப்பனே நரசிங்கா !

நின் பொற்கழல்கள் என் சென்னியில் வைத்தருளி
நாயேனையும் ஆட்கொண்டு நின்னாடியான் ஆக்கி
மறுமைக்கும் இம்மைக்கும் நன்மைகள் பல செய்தாய்!
நின்னை அல்லால் வேறு தெய்வம் உண்டோ இவ்வுலகில்?
என்சொல்வேன் நின் மஹிமை என்னப்பனே நரசிங்கா!