Thursday, August 10, 2017

குரு வந்தனங்கள்

மௌனமமாகி ஆல மரத்தடியில் பிரம்ம தத்துவத்தை சொல்லும் ஆசிரியன் !
ஆசிரியன் சொல்வதை தெளிவாக உணர்ந்த பிரும்மநிஷ்டர்களான சீடர்கள் !
-தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகம்

அஞ்ஞான இருளை போக்கி ஞானம் என்னும் மையை தேய்க்கும் கோலே !
என் ஞானக் கண்ணைத் திறக்கும் குருவே உனக்கு நமஸ்காரங்கள் !

ஒன்றாய் அழிவில்லா அசைவில்லா தூய்மையாய் சர்வ சாக்ஷி ஆனவனே!
உணர்வுக்கப்பலாய் முக்குணங்களுக்கு அப்பலாய் சத்குருவே  நீ போற்றி !

ஏகம் நித்யம் விமலம் அசலம் சர்வதீ சாக்ஷிபூதம்
பாவாதீதம் த்ரிகுணா ரஹிதம் சடகோரும் தம் நமாமி

தமிழ் சமஸ்கிருதம்  என்று சண்டை போடாமல், நல்ல ஆன்மீக விஷயங்களை  எந்த மொழியில் இருந்தாலும் அனுபவிக்க வேண்டும் !

மஹரிஷிகள், ஆச்சார்யர்கள், சித்தர்கள் ஆகியோர் தந்த நல்ல பொக்கிஷங்கள் தமிழிலும் , வடமொழியிலும் உள்ளன. அவர்களுக்கு கோடி வந்தனங்கள் !

பக்தி மார்க்கத்தை பரப்பி நம்மை நல்வழி படுத்திய ஆழ்வார் நாயன்மார்களுக்கு வந்தனங்கள்! பள்ளிக்கூடங்களில் அவர்கள் பாடல்கள் சொல்லித் தருவதில்லை.

நாராயணன் பிரமன்
வசிட்டன்   ஷக்தி பராசரன் வியாசன்  சுகன்
கௌடபாதன் கோவிந்தன் ஆதி சங்கரன்  சுரேஸ்வரன்
தொட்டு நம் ஆசாரியன் வரையில் அத்துவைத குரு பரம்பரை என்று உணரு  மனமே

No comments:

Post a Comment