பார்ப்பனர் என்று சொல்லுவோர்கள் இருபிறப்பார்கள்
அவர்கள் முதல் மூன்று வருணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்
அறுதொழிலோர் அந்தணர் என்று வள்ளுவன் சொன்னான்
அதனை மனு அவனும் சொன்னானே தரும சாஸ்திரத்தில்
அரசாளும் மன்னார்வர்கள் அவர்கள் தானும்
வணிகம் செய்து பொருளீட்டும் வைசியர்களும்
நிலத்தை உழும் உழவர்களும் பூவைசியர்கள்
ஆடு மாடு மேய்ப்பவர்கள் கோ வைசியர்கள்
பொன்னும் பொருளும் உணவுப் பண்டம் விற்பனை செய்யும்
மக்கள் எல்லாம் வைசியர்கள் தெரிந்து கொள்ளுவோம்
ஆக பிரம்ம கிஷத்ரிய வைசியர்கள் பார்ப்பனர்கள் தாம்
அவர்கள் எல்லோரும் வேதம் கற்று அறநெறி கொள்வர்
பன்னிரண்டு வயதிற்குள்ளே பூணல் பூண்டு
வேத விரதம் கொண்டு அவர்கள் வேதம் பயிலுவர்
அம்மியதன் மீதில் ஏறி நின்று கொண்டுமே
தர்பையினால் கயிறாம் அந்த மௌஞ்சியை தரிப்பர்
உபநயம் என்று சொல்லும் சடங்கின் பொழுது
தங்கள் அகக்கண்ணை அச்ச்சாரியன் திறந்தும் வைப்பான்
தாயின் வயிற்றில் பிறப்பதுவும் முதற் பிறவியாம்
பின்பு உபநயன வேள்வியினால் இரு பிறவியாம்
எனவே சங்கத் தமிழில் துவிஜர்களை பார்ப்பனரென்பர்
வேதம் சொல்லும் மார்க்கம் என்றும் புனிதமானது
வேத மார்க்கம் வாழ்க வாழ்க வாழ்க வேதியர்
வேதம் சொல்லும் வழி முறைகள் ஒங்க ஓங்கவே
வேள்வித் தீயும் ஒங்க ஒங்க ஒங்க வேதமும்
வேதம் சொல்லும் சாத்திரங்கள் வாழ்க வாழ்கவே
வேத மாதா சரஸ்வதியும் வாழ்க வாழ்கவே
பாரதமாம் புண்யபூமி வாழ்க வாழ்கவே
நாத்தீகரும் நீசர்களும் வீழ்க வீழ்கவே
மதம் மாற்றும் மடயர்களும் வீழ்க வீழ்கவே !
No comments:
Post a Comment