Sunday, April 29, 2018
முக்திகோபநிஷத்தில் ராமர் உபதேசிக்கும் சாலோக்கியம், சாரூப்பியம், சாமீப்பியம், சாயுஜ்ஜியம் போன்ற முக்திகள்...
சாலோக்கியம் - இறைவனுடன் ஒரே உலகத்தில் வசிப்பது, சாரூப்பியம் - இறைவனுடைய அதே ரூபத்தை தரிப்பது, சாமீப்பியம் - இறைவனுடன் அருகாமையில் வசிப்பது, சாயுஜ்யம் - இறைவன் திருவைத்யாய் அடைதல்
கைவல்யமுக்திரேகைவ பரமார்தி²கரூபிணீ ।
து³ராசாரரதோ வாபி மந்நாமப⁴ஜநாத்கபே ॥ 18॥
ஸாலோக்யமுக்திமாப்நோதி ந து லோகாந்தராதி³கம் ।
காஶ்யாம் து ப்³ரஹ்மநாலேঽஸ்மிந்ம்ருʼதோ மத்தாரமாப்நுயாத் ॥ 19॥
கைவல்ய முக்தியே மிக சிறந்தது. ஆனால் தீய ஒழுக்கம் உடையவர்கள் கூட, என் நாமத்தை வழிபடுவதால் சாலோக்கியம் போன்ற முக்தியை அடைகின்றார்கள். காசியில் ப்ராம்மணாளம் என்னும் இடத்தில மரிப்பவர்கள், தாமே ராம தாரக மந்திரத்தை பெற்று என்னிடத்தில் வந்து அடைகின்றார்கள் என்கிறார் ராமர்.
புநராவ்ருʼத்திரஹிதாம் முக்திம் ப்ராப்நோதி மாநவ: ।
யத்ர குத்ராபி வா காஶ்யாம் மரணே ஸ மஹேஶ்வர: ॥ 20॥
காசியில் அங்கு இங்கு என்று அனைத்து இடங்களிலும் மரிப்பவர்களுக்கு , சாலோக்கியம் போன்ற முக்தியை அளிக்கின்றார் மகேஸ்வரன். அதாவது ஜனன மரணங்களுக்கு அப்பாற்பட்ட சாலோக்கியாதி நால்வகை முக்தியை அளிக்கின்றார் மகேஸ்வரன்.
ஜந்தோர்த³க்ஷிணகர்ணே து மத்தாரம் ஸமுபாதி³ஶேத் ।
நிர்தூ⁴தாஶேஷபாபௌகோ⁴ மத்ஸாரூப்யம் ப⁴ஜத்யயம் ॥ 21॥
உயிரினங்களின் வலது காதுகளில் ராம தாரக மந்திரத்தை ஓதி, அவர்கள் பாபங்களை அழிக்கின்றார். அதனால் அவர்கள் என்னைப்போலவே உருவம் - சாரூப்பியம் பெற்று, என்னிடத்தில் அடைகின்றனர் என்கிறார் ராமர்.
ஸைவ ஸாலோக்யஸாரூப்யமுக்திரத்யபி⁴தீ⁴யதே ।
ஸதா³சாரரதோ பூ⁴த்வா த்³விஜோ நித்யமநந்யதீ:⁴ ॥ 22॥
இதுவே சாரூப்பியம், சாலோக்கியம் என்ற இருவகை முக்திகள் ஆகும். பிறப்பொழுக்கத்தை கடைபிடிக்கும் துவிஜர்கள் , என்னுடைய அருகாமையை அடைகின்றார்கள்.
மயி ஸர்வாத்மகோ பா⁴வோ மத்ஸாமீப்யம் ப⁴ஜத்யயம் ।
ஸைவ ஸாலோக்யஸாரூப்யஸாமீப்யா முக்திரிஷ்யதே ॥ 23 ||
எந்தனை யார் ஒருவர் அனைத்திலும் உறைபவனாகி , எப்பொழுதும் உபாசிக்கின்றார்களோ, அவர்கள் என்னுடைய சாயுஜ்யத்தை அடைகின்றார்கள். அதே போல சாலோக்கியம், சாரூப்பியம், சாமீப்பியம், சாயுஜ்ஜியம் போன்ற நால்வகை முத்திகளும் எந்தனை வணங்குவதால் அடைய பெரும்.
கு³ரூபதி³ஷ்டமார்கே³ண த்⁴யாயந்மத்³கு³ணமவ்யயம் ।
மத்ஸாயுஜ்யம் த்³விஜ: ஸம்யக்³ப⁴ஜேத்³ப்⁴ரமரகீடவத் ॥ 24॥
ஸைவ ஸாயுஜ்யமுக்தி: ஸ்யாத்³ப்³ரஹ்மாநந்த³கரீ ஶிவா ।
சதுர்விதா⁴ து யா முக்திர்மது³பாஸநயா ப⁴வேத் ॥ 25॥
குருவுபதேசத்தினால் மட்டும் ஒருவன் தியானம் போன்ற வழிமுறைகளால், எவன் எந்தனை உபாசிக்கின்றானோ, அவன் எப்படி ஒரு புழுவானது தேனியாக மாறுகின்றதோ அப்படி என்னுடைய சாயுஜ்யத்தை அடைகின்றான். அந்த சாயுஜ்யம் என்னும் முக்தியே ப்ரம்மானந்தத்தை பிறப்பிக்க கூடியது. அதே போல , சாயுஜ்யம் , சாலோக்கியம், சாமீப்பியம், சாரூப்பியம் என்ற நால் வகை முதிகளையும் அவன் அடைகின்றான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment