Tuesday, April 24, 2018

கீதாச்சார்யன் போதிக்கும் ஞானமும், மாயையும்.....



अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन्।
प्रकृतिं स्वामधिष्ठाय संभवाम्यात्ममायया।।4.6।।

।4.6।। अजोऽपि जन्मरहितोऽपि सन् तथा अव्ययात्मा अक्षीणज्ञानशक्तिस्वभावोऽपि सन् तथा भूतानां ब्रह्मादिस्तम्बपर्यन्तानाम् ईश्वरः ईशनशीलोऽपि सन् प्रकृतिं स्वां मम वैष्णवीं मायां त्रिगुणात्मिकाम् यस्या वशे सर्वं जगत् वर्तते यया मोहितं सत् स्वमात्मानं वासुदेवं न जानाति तां प्रकृतिं स्वाम् अधिष्ठाय वशीकृत्य संभवामि देहवानिव भवामि जात इव आत्ममायया आत्मनः मायया न परमार्थतो लोकवत्।।तच्च जन्म कदा किमर्थं च इत्युच्यते

பிறப்பு அற்றவனாகவும்,  எப்பொழுதுமே தூய்மையாக இருக்கும் தன்மை உடையனனாகவும், குறைவற்ற, நிலையான  சக்தியை உடையவனாகவும்,
ஆத்ம ஸ்வரூபனாகவும், படைப்புகளுக்கு அனைத்திற்கும் ஈஸ்வரனாகவும், இருக்கும் கண்ணன் மாறுதல்களுக்கு அப்பாலாகி இருக்கின்றான்.  முக்குணங்கள் படைத்தவளாகிய ப்ரக்ருதியியாக இருக்கும் தன்  மாயையால், தன்னுடைய சொந்த விருப்பதாலும் பல பிரிவைகளை, - நாம, ரூபங்களை எடுக்கிறான் கண்ணன். ஸர்வவ்யாபியாக , சர்வாந்தர்யாமியாக இருப்பதே கண்ணனின் நிஜ ஸ்வரூபம் . ஆனால், மாயைக்கு உட்பட்டு பல பிறவிகள் (விபவங்கள்)  , நாம ரூபங்களை தரிக்கிறான் கண்ணன்.


दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया।
मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते।।7.14।।

।7.14।। दैवी देवस्य मम ईश्वरस्य विष्णोः स्वभावभूता हि यस्मात् एषा यथोक्ता गुणमयी मम माया दुरत्यया दुःखेन अत्ययः अतिक्रमणं यस्याः सा दुरत्यया। तत्र एवं सति सर्वधर्मान् परित्यज्य मामेव मायाविनं स्वात्मभूतं सर्वात्मना ये प्रपद्यन्ते ते मायाम् एतां सर्वभूतमोहिनीं तरन्ति अतिक्रामन्ति ते संसारबन्धनात् मुच्यन्ते इत्यर्थः।।यदि त्वां प्रपन्नाः मायामेतां तरन्ति कस्मात् त्वामेव सर्वे न प्रपद्यन्ते इत्युच्यते

கண்ணன் இங்கு சொல்லும் பொழுது, தன்னுடையதான   மாயை முக்குணங்கள் உண்டாயவள். அதாவது , சத்வம், ராஜஸ்ஸு, தமஸ்ஸு என்ற குக்குணங்களும், ப்ரக்ருதி ரூபிணியாக இருப்பவள்.  எனவே, சாமான்ய ஜீவர்களை மோஹிப்பித்து, அவள் அந்த ஜீவர்களுடைய ஆத்ம ஸ்வரூபத்தை மறைத்து ஜாலம் காட்டுகின்றாள். கண்ணனிடத்தில், மற்ற அனைத்து தர்மங்களையும் ஒழிந்து, எவன் சரணாகதி செய்கின்றானோ, அவனே அந்த
மாயை கடந்து பூர்ண ஞானத்தை  அடைகின்றான். அதன் பிறகு, விவேகத்தால் ஆத்மா எது, ஆத்ம எது இல்லை(அனாத்மா) என்று அறிந்து பூர்ண ஞானத்தையும், ஜீவன் முக்தியையும் பெறுகின்றான்.

न मां दुष्कृतिनो मूढाः प्रपद्यन्ते नराधमाः।
माययापहृतज्ञाना आसुरं भावमाश्रिताः।।7.15।।

।।7.15।। न मां परमेश्वरं नारायणं दुष्कृतिनः पापकारिणः मूढाः प्रपद्यन्ते नराधमाः नराणां मध्ये अधमाः निकृष्टाः। ते च मायया अपहृतज्ञानाः संमुषितज्ञानाः आसुरं भावं हिंसानृतादिलक्षणम् आश्रिताः।।ये पुनर्नरोत्तमाः पुण्यकर्माणः

மேற்கூறியபடி , எதனால் சிலர் கண்ணனிடத்தில் சரணாகதி செய்வதில்லை என்பதற்கு கருணாமயனாகிய  கண்ணன்  இங்கே விளக்கம் தருகின்றான். மாயையால் தங்கள் ஞானத்தை இழந்த மூடர்கள், தீவினைகளை செய்தவர்கள், அந்த கண்ணனிடத்தில் பிரபத்தி பண்ணுவதில்லை. அதனால் அவர்களுக்கு அசுர பாவம் ஏற்படுகின்றது. அதனால் அவர்கள் கொடூரம், பொய் போன்ற தமோ குணவந்தர்களாக ஆகிவிடுகின்றார்கள்.

अव्यक्तं व्यक्ितमापन्नं मन्यन्ते मामबुद्धयः।
परं भावमजानन्तो ममाव्ययमनुत्तमम्।।7.24।।

।।7.24।। अव्यक्तम् अप्रकाशं व्यक्तिम् आपन्नं प्रकाशं गतम् इदानीं मन्यन्ते मां नित्यप्रसिद्धमीश्वरमपि सन्तम् अबुद्धयः अविवेकिनः परं भावं परमात्मस्वरूपम् अजानन्तः अविवेकिनः मम अव्ययं व्ययरहितम् अनुत्तमं निरतिशयं मदीयं भावमजानन्तः मन्यन्ते इत्यर्थः।।तदज्ञानं किंनिमित्तमित्युच्यते

சர்வேஸ்வரனான கோபாலன் இங்கு, தன்னுடைய நிஜ ஸ்வரூபம் அவ்யக்தம் அதாவது , நிர்குண ஸ்வரூபம். நாம் ரூபங்களுக்கு அப்பாற்பட்டதாக ஸ்வரூபமே அவனுடைய ஸ்வரூபம் என்கிறான். ஆத்ம ஞானம் சிந்தித்த பேர்களுக்கே அவனுடைய அந்த ஸ்வரூபம்  புலப்படும். ஆனால், ஞானம் அற்ற அஞ்ஞானிகள் அவனை ஒரு வ்யக்தி - அதாவது ஒரு தேவனாகவோ , நாம ரூபங்கள் உள்ளவனாகவோ , மாறுதல்களுக்கு உட்பட்டவனாகவோ நினைத்துக் கொள்கின்றார்கள். ஞானிகளுக்கு மாத்திரமே அவன் அவ்யக்தன்,
ஆத்ம ஸ்வரூபன், மாறுதல்களுக்கு அப்பாற்பட்டவன், என்ற அறிவும், விவேகமும் ஏற்படும்.

नाहं प्रकाशः सर्वस्य योगमायासमावृतः।
मूढोऽयं नाभिजानाति लोको मामजमव्ययम्।।7.25।।

।।7.25।। न अहं प्रकाशः सर्वस्य लोकस्य केषांचिदेव मद्भक्तानां प्रकाशः अहमित्यभिप्रायः। योगमायासमावृतः योगः गुणानां युक्ितः घटनं सैव माया योगमाया तया योगमायया समावृतः संछन्नः इत्यर्थः। अत एव मूढो लोकः अयं न अभिजानाति माम् अजम् अव्ययम्।।यया योगमायया समावृतं मां लोकः नाभिजानाति नासौ योगमाया मदीया सती मम ईश्वरस्य मायाविनो ज्ञानं प्रतिबध्नाति यथा अन्यस्यापि मायाविनः मायाज्ञानं तद्वत्।।
यतः एवम् अतः

கண்ணன், மேற்கூறிய அஞ்ஞானத்திற்கு காரணம் சொல்லுகின்றான் . அனைவருக்கும் பூர்ண ஞானம் , சித்தித்து அவனுடைய நிஜ ஸ்வரூபம்  வெளிப்படாமல் இருப்பதற்கு காரணம் யோகமாயை  தான்.  மூடர்களான அந்த  அஞ்ஞானிகள், மாயைக்கு உட்பட்டு இருப்பதால், கண்ணனின் நிஜ ஸ்வரூபம் அவ்யயம்  - அதாவது வாக் மனங்களுக்கு அப்பாற்பட்டதாக, ஆத்ம ஸ்வரூபமாக, பாரமார்த்திக வஸ்துவாக அவர்களுக்கு புலப்படுவதில்லை. கண்ணனை ஒரு தேவனாகவோ, ஒரு நாம ரூபமாகவோ அவர்கள் மாயை காண்பித்து அவர்களை மூடர்களாக ஆக்குகின்றது.

ईश्वरः सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति।
भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया।।18.61।।

।।18.61।। -- ईश्वरः ईशनशीलः नारायणः सर्वभूतानां सर्वप्राणिनां हृद्देशे हृदयदेशे अर्जुन शुक्लान्तरात्मस्वभावः विशुद्धान्तःकरणः -- अहश्च कृष्णमहरर्जुनं च (ऋ. सं. 6।9।1) इति दर्शनात् -- तिष्ठति स्थितिं लभते। तेषु सः कथं तिष्ठतीति? आह -- भ्रामयन् भ्रमणं कारयन् सर्वभूतानि यन्त्रारूढानि यन्त्राणि आरूढानि अधिष्ठितानि इव -- इति इवशब्दः अत्र द्रष्टव्यः -- यथा दारुकृतपुरुषादीनि यन्त्रारूढानि। मायया च्छद्मना भ्रामयन् तिष्ठति इति संबन्धः।।

ஈஸ்வரன் அனைவரின் ஹ்ருதயத்திலும் வசிக்கின்றான்.  சர்வேஸ்வரனான ஸ்ரீமன் நாராயணன், அனைத்து உயிர்களின்  இதயத்திலும் இருக்கின்றான். அவன் மாயை என்னும் அச்சாணியில் சுற்றும் இயந்திரங்களை போல , அனைத்து உயிர்களையும் சுழல செய்கின்றான். அதவாது மாயையால் மனமானது சுழன்று கொண்டிருக்க,  ஈஸ்வரன் இதயத்தில் அசைவின்றி வீற்றிருக்கின்றான். இதனை திரோதானம் என்பார்கள். மாயையால், உலக வஸ்துக்களை மறைத்து வைத்து, உலகத்தை இயக்குபவன் ஈஸ்வரன். இதே அர்த்தத்தில்  தான் லலிதா சஹஸ்ரநாமத்திலும் (திரோதானகரீ , ஈஸ்வரி) என்ற நாமங்கள் உள்ளன.


No comments:

Post a Comment