Thursday, April 19, 2018
ஆதி சங்கரர் அருளிய கணேஷ பஞ்சரத்னம் ....
இந்த ஸ்லோகத்தை இங்கே கேட்டு மகிழுங்கள்.
நம் தமிழ் நாட்டில் எளியோர்க்கு எளியோனாக, அரச மரங்களெங்கும், தெருக்கோடிகள் எங்கும், இருந்து அருள் பாலிக்கும் விநாயகப் பெருமானை பற்றி தெறியாத மனிதரே இருக்க மாட்டார். உபநிஷத்துக்கள் விநாயகனை, சிவ பூத கணங்களுக்கு தலைவனாக கொண்டாடுகின்றன. ஆசார்யாளும் உபநிஷத்துக்கள் சாரமாகவே மஹாகணேஷ பஞ்ச ரத்னம் என்ற இந்த ரத்தினம் போன்ற ஸ்லோகத்தை எழுதி அருளினார்.
மிக அழகான இந்த ஐந்து ஸ்லோகங்கள் மிகவும் அருமையாக தளத்துடன் பாட உகந்ததாக உள்ளது.வேத, புராண, உபநிஷத்துக்களின் சாராம்சமாக விளங்கும் இந்த ரத்னத்தை அனுபவிப்போம் வாருங்கள்.
அகிஞ்சநார்திமார்ஜநம் சிரந்தநோக்திபா⁴ஜநம்
புராரிபூர்வநந்த³நம் ஸுராரிக³ர்வசர்வணம் ।
ப்ரபஞ்சநாஶபீ⁴ஷணம் த⁴நஞ்ஜயாதி³பூ⁴ஷணம்
கபோலதா³நவாரணம் ப⁴ஜே புராணவாரணம் ॥ 4॥
தன்னிடத்தில் சரணடையும் பக்தர்களின் வினைகளை அகற்றுபவனே, மிகப் பழைய வேதங்களளால் துதிக்கப் பெறுபவனே , முப்புரம் அழித்த சிவனின் மூத்த மகனே, தேவர்களின் எதிரிகளை தன் வாயில் இட்டு மெல்லுபவனே,
மாயாமயமான பிரபஞ்சத்தின் மாயையை அகற்றும் பயங்கர ஷக்தி படைத்தவனே, கருணா ரசம் பொழியும் கான்னங்களை உடையவனே, புராணங்களில் இருந்து வழியும் புகழை உடையவனே! விநாயகனே ! உன்னை துதிக்கின்றேன்.
நிதாந்தகாந்தத³ந்தகாந்திமந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீநமந்தராயக்ருʼந்தநம் ।
ஹ்ருʼத³ந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகி³நாம்
தமேகத³ந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம் ॥ 5॥
யமனை அழித்த பரமேஸ்வரனின் மைந்தனே! அன்பர்களின் மனத்தைக் கவரும் ஒற்றை கொம்பை உடையவனே! யோகிகளின் ஹ்ருதயத்தில் நிரந்தரமாக வசிப்பவனே! அந்த ஒற்றை தந்தம் உடையவனை எப்பொழுதும்
வணங்குகின்றேன்!
கணபதி அதர்வஸீர்ஷ உபநிஷத்து இதேபோல தான் சொல்கின்றது.
त्वं गुणत्रयातीतः । त्वं अवस्थात्रयातीतः । त्वं देहत्रयातीतः ।
त्वं कालत्रयातीतः । त्वं मूलाधारस्थितोऽसि नित्यम् । त्वं
शक्तित्रयात्मकः ।त्वां योगिनो ध्यायन्ति नित्यम् । त्वं ब्रह्मा त्वं
विष्णुस्त्वं रुद्रस्त्वमिन्द्रस्त्वमग्निस्त्वं वायुस्त्वं सूर्यस्त्वं
चन्द्रमास्त्वं ब्रह्म भूर्भुवः स्वरोम् ॥ ६॥
விநாயகனே நீ இந்த பிரகிருதியின் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவன். நீ கனவு, நினைவு, உறக்கம் என்ற மூன்று அவஸ்தைகளும் அப்பாற்பட்டவன். ஸ்தூலம், சூக்ஷ்மம், காரணம் என்ற மூன்று உடல்களுக்கும் அப்பாற்பட்டவன்.
நிகழ் காலம், இறந்த காலம், வரும் காலம் என்று மூன்று காலங்களுக்கும் அப்பாற்பட்டவன். மூலாதாரத்தில் நித்யம் வசிப்பவன் நீ. இச்சா ஷக்த்தி, க்ரியா ஷக்தி , ஞான ஷக்தி என்று மூன்று சக்திகளின் வடிவம் நீ. யோகிகளால் நித்யமும் வழிபடப் படுபவன் நீ. ப்ரம்ம, விஷ்ணு, சிவன், சந்திரன், சூரியன் என்று அனைத்துமாகி , பூலோகம், புவர் லோகம், சுவர்க்கம் என்று அனைத்துலகிலும் நிறைந்து, ஓம்கார மயனாகி, பிரம்மமும் ஆகி இருக்கும் விநாயகனே!
மேற்கூறியவாறு அதர்வண வேதத்தில் உள்ள கணபதி அதர்வஸீர்ஷ உபநிஷத் பிள்ளையாரை போற்றுகின்றது. நம் தமிழ் மூதாட்டி ஒளவையாரும் இதே கருத்துக்களை விநாயகர் அகவலில் கூறுகின்றாள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment