உபநிஷத்துக்கள் நம் பெருமாளையும் தாயரையும் ப்ரக்ருதி புருஷன் என்றே கொண்டாடுகின்றன. ப்ரக்ருதி என்றால் வெறும் ஜடமான இயற்கை மட்டும் அன்று, அதனுள் , முக்குணங்கள், உலகில் உள்ள ஜீவராசிகளை படைத்தல் அனைத்துமே அடங்கும்.
கண்ணன் கீதையில் குணத்ரய விபாக யோகத்தில், கீழ் வருமாறு கூறுகின்றான்:
மம யோநிர்மஹத்³ப்³ரஹ்ம தஸ்மிந் க³ர்ப⁴ம்
த³தா⁴ம்யஹம் । ஸம்ப⁴வ: ஸர்வபூ⁴தாநாம் ததோ ப⁴வதி பா⁴ரத ॥
த³தா⁴ம்யஹம் । ஸம்ப⁴வ: ஸர்வபூ⁴தாநாம் ததோ ப⁴வதி பா⁴ரத ॥
ப்ரக்ருதி என்னும் யோனிக்குள் , என்னால் விதைக்கப் படுகின்ற சைதன்யம், நாம ரூபங்களாக பரிணமிக்கின்றன. அதாவது கண்ணனாகிய திருமால் புருஷன் என்றும், ப்ரக்ருதியாகிய தாயே லட்சுமி என்றும் பொருள் படும் ஸ்லோகம்.
ஆச்சார்யாள் பண்ணிய விஷ்ணு கேஷாதி பாத வருணனை ஸ்லோகத்திலும் இதே போல தான் உள்ளது.
வாக்³பூ⁴கௌ³ர்யாதி³பே⁴தை³ர்விது³ரிஹ முநயோ யாம்
யதீ³யைஶ்ச பும்ஸாம்
காருண்யார்த்³ரை: கடாக்ஷை: ஸக்ருʼத³பி பதிதை: ஸம்பத:³ ஸ்யு: ஸமக்³ரா: ।
குந்தே³ந்து³ஸ்வச்ச²மந்த³ஸ்மிதமது⁴ரமுகா²ம்போ⁴ருஹாம் ஸுந்த³ராங்கீ³ம்
வந்தே³ வந்த்³யாமஸேஷைரபி முரபி⁴து³ரோமந்தி³ராமிந்தி³ராம் தாம் ॥ 8 ॥

ஆச்சார்யாள், இங்கு ஸ்ரீ தேவியான லக்ஷ்மியை, அனைத்து தேவதைகளின் ஸ்வரூபியாக, சர்வ ஜெகன் மாதாவாக காண்கிறார். அவளே வாக்தேவி,பூ தேவி, கவுரி, என்று முனிவர்களால் போற்றப் படுகின்றாள். அழகிய கைகளை உடைய அந்த திருமகள், முரன் என்ற அரக்கனை வென்ற திருமாலின் மார்பை உடையவள். அவளுடைய தாமரை முகமானது, அழகிய முல்லைப்பூ போன்ற சிரிப்பாள் மிளிர்கின்றது. அவளுடைய க்ருபா கடாக்ஷம் , அன்பர்கள் மீது படுங்கால், சகல செல்வங்களையும் அவர்கள் பெறுகின்றார்கள்.
யா ஸூதே ஸத்த்வஜாலம் ஸகலமபி ஸதா³ ஸம்நிதா⁴நேந பும்ஸ:
த⁴த்தே யா தத்த்வயோகா³ச்சரமசரமித³ம் பூ⁴தயே பூ⁴தஜாதம் ।
தா⁴த்ரீம் ஸ்தா²த்ரீம் ஜநித்ரீம் ப்ரக்ருʼதிமவிக்ருʼதிம் விஶ்வஶக்திம் விதா⁴த்ரீம்
விஷ்ணோர்விஶ்வாத்மநஸ்தாம் விபுலகு³ணமயீம் ப்ராணநாதா²ம் ப்ரணௌமி ॥ 9
த⁴த்தே யா தத்த்வயோகா³ச்சரமசரமித³ம் பூ⁴தயே பூ⁴தஜாதம் ।
தா⁴த்ரீம் ஸ்தா²த்ரீம் ஜநித்ரீம் ப்ரக்ருʼதிமவிக்ருʼதிம் விஶ்வஶக்திம் விதா⁴த்ரீம்
விஷ்ணோர்விஶ்வாத்மநஸ்தாம் விபுலகு³ணமயீம் ப்ராணநாதா²ம் ப்ரணௌமி ॥ 9
ஸ்ரீமன் நாராயணனுடைய சம்பந்தத்தினால் , அவன் அனைத்து சேதன அசேதனங்களும் பிறப்பிக்கின்றாள். இப்படி அனைத்து சேதன, அசேதனங்களையும் பிறப்பித்து, காத்து, தன்னுள் தாங்கி, இயற்க்கை (ப்ரக்ருதியாகி) , மாறுபாடுகள் விகுர்தி அற்றவளாகி, பிரபஞ்ச ஷக்தியாகி, ஜீவர்களுக்கு அனுகிருஹம் செய்பவளாகி உள்ளாள். எண்ணற்ற கல்யாண குணங்களை உடையவளாகி, சர்வேஸ்வரனான விஷ்ணுவுக்கு மிகவும் உகந்தவளாகி, திருமாலின் உயிர்க்கு உயிரானவளை வணங்குகின்றேன். இவ்வாறாக ஆதி சங்கரர் புராண, உபநிஷத, ஆகம கிரந்தங்களில் உள்ள அனைத்து விஷயங்களையும் இந்த ஸ்லோகத்தில் அருளி உள்ளார்.
ஆச்சார்ய புங்கவனாகிய, நம் ஆதி சங்கரர் - உபநிஷத்துகளில் சொன்ன ஷண்மதங்களின் தேவதைகள் மீதும் இப்படி பக்திபூர்வமாக , பரமாத்புதமான கிரந்தங்களை அருளியுள்ளார்
No comments:
Post a Comment