லட்சுமி ந்ருஸிம்ஹரை அனுபவித்த முதல் வேதாந்தி, நம் ஆச்சார்யாள் தான். ப்ரஹ்லாதனை காக்க, நரஹரி ஸ்தம்பத்தில் இருந்து, தான் மட்டுமே அவிப்பாவிதான். ஆனால், ஆச்சார்யாளைக் காக்க, செஞ்சு லட்சுமி தாயாருடன் வந்து அங்கு அனுகிரஹித்தான். ஆச்சார்யாள், அவனை அனுபவிக்கும் விதம் மிக அருமை.
ஸம்ஸாரஸர்பவிஷதி³க்³த⁴மஹோக்³ரதீவ்ர-
த³ம்ஷ்ட்ராக்³ரகோடிபரித³ஷ்டவிநஷ்டமூர்தே: ।
நாகா³ரிவாஹந ஸுதா⁴ப்³தி⁴நிவாஸ ஶௌரே
லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 7॥
உலகியல் வாழ்க்கை என்னும் சர்ப்பம் தன்னுடைய வாயை திறந்துள்ளது , அதன் விஷமானது மிக கொடியதாகி உள்ளது. அதனுடைய கோரமான விஷப் பற்கள் என்னை அழித்து விட்டன ! நாகங்களின் எதிரியான கருடன் மீது வீற்றிருக்கும் லட்சுமி ந்ருஸிம்ஹனே! எனக்கு உதவிக்கரம் கொடுத்து காத்தருள்வாய்!
அந்த⁴ஸ்ய மே ஹ்ருʼதவிவேகமஹாத⁴நஸ்ய
சோரைர்மஹாப³லிபி⁴ரிந்த்³ரியநாமதே⁴யை: ।
மோஹாந்த⁴காரகுஹரே விநிபாதிதஸ்ய
லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 11॥
ப்ரபோ! (ஆதாம்நாத்மத்தை பகுத்தறியும் அறிவை) என்னுடைய விவேகத்தை , இந்திரியங்கள் என்னும் திருடர்கள் கவர்ந்து சென்று விட்டார்கள். எனவே நான் குருடனாகி விட்டேன். ஞானம் என்னும் பார்வை இழந்தமையால், மோகம் என்னும் பாழும் கிணற்றுள் விழுந்து விட்டேன்! லட்சுமி ந்ருஸிம்ஹா உன் உதவிக்கரங்களை அளித்து என்னைக் காக்க வேண்டும்!
ப³த்³த்⁴வா க³லே யமப⁴டா ப³ஹு தர்ஜயந்த:
கர்ஷந்தி யத்ர ப⁴வபாஶஶதைர்யுதம் மாம் ।
ஏகாகிநம் பரவஶம் சகிதம் த³யாலோ
லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 12॥
யமனுடைய சேவகர்கள் ஆயிரக் கணக்கில் பாசக் கயிற்றை என் கழுத்தில் கட்டி, ஆளுக்கு ஓர் பக்கமாக இழுக்கிறார்கள்! இந்த உலகியல் பற்று என்னும் கயிற்றை அவர்கள் என் கழுத்தில் கட்டி இழுக்கின்றார்கள்! தன்னம் தனியாக , மிகவும் சோர்ந்தும், பயமுற்றவனாகவும் உள்ளேன்! கருணைக்கு கடலே! லட்சுமி ந்ருஸிம்ஹா உன் உதவிக்கரங்களை அளித்து என்னைக் காக்க வேண்டும்!
ஏகேந சக்ரமபரேண கரேண ஶங்க²-
மந்யேந ஸிந்து⁴தநயாமவலம்ப்³ய திஷ்ட²ந் ।
வாமேதரேண வரதா³ப⁴யபத்³மசிஹ்நம்
லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥
ஒரு கையில் சக்கரமும் , மற்றொரு கையில் சங்கமும், மூன்றாவது கைகளால் திருப்பாற்கடல் மன்னனின் மக்களாகிய லக்ஷ்மியை தழுவியபடி, நான்காவது கையால் வரதம், அபாயம் என்ற முத்திரைகளையும், காட்டி லட்சுமி ந்ருஸிம்ஹா உன் உதவிக்கரங்களை அளித்து என்னைக் காக்க வேண்டும்
லக்ஷ்மீந்ருʼஸிம்ஹசரணாப்³ஜமது⁴வ்ரதேந
ஸ்தோத்ரம் க்ருʼதம் ஶுப⁴கரம் பு⁴வி ஶங்கரேண ।
யே தத்பட²ந்தி மநுஜா ஹரிப⁴க்தியுக்தா-
ஸ்தே யாந்தி தத்பத³ஸரோஜமக²ண்ட³ரூபம் ॥ 17॥
இந்த பதினேழு ஸ்லோகங்களை கொண்ட பாடலை படிப்பதால் என்ன பயன் என்று, ஆச்சார்யாள் மிகவும் அழகாக் இங்கு அருளியுள்ளார்.
சங்கரன் என்னும் ஒரு தேனீ லட்சுமி ந்ருஸிம்ஹனின் திருவடிகளின் தேனைப் பருகி பாடிய இந்த பாடலை, ஹரி பக்தியுடன் படிக்கும் அனைத்து மனிதர்களும், அந்த லட்சுமி ந்ருஸிம்ஹனின் திருவடிகளை அடைந்து பூர்ண பிரம்மத்தில் இணைவார்கள்.
தன்னுடைய உயிர் பிரியும் தருணத்திலும் கூட ஆச்சார்யாள், உயிரைக் காத்தமைக்கு நன்றி என்று கூறவில்லை - இந்த சம்சாரத்தில் இருந்து தம்மை காக்கும் படி நம் அனைவர் சார்பிலும் பிரார்திக்கின்றார். ஞானிகளுக்கு சரீர அபிமானம் என்பது எள்ளளவும் இருக்காது என்பதற்கு இது
மிகப் பெரிய ஒரு உதாரணம்.
லட்சுமி ந்ருஸிம்ஹன் அருளால் நாம் அனைவரும் அனைத்து நன்மைகளும் பெற வேண்டும் என்று பிரார்தித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment