ஒரே புருடன் ஆனவனை அரியும் அரனும் ஆக்கினாய் !
இறைவனுடல் தன்னில் தோன்றி வாழுகின்ற மானிடரை
சாதி பேதம் செய்து நீயும் பலவாக பிரித்தனை!
கற்றுணர்ந்த மானிடரை காமத்தாலே மாக்களாக்கி
ஜாலங்களை செய்திடுவாய் ! என் சொல்வேன் மாயையே!
மாயை பற்றி சொன்ன எங்கள் சங்கரன் தாள் வாழியே!
அளவில்லா பேரானந்த வடிவான என்னகத்தில் ஜீவபேதம் சமைத்தனை !
கற்றுணர்ந்த பெரியோர்களை நாற்கால் மிருகங்களாய் ஆக்கினை !
பேரானந்த வடிவான ஆன்மாவை ஐம்பூதம் நிறை உடலாக எண்ண செய்தனை !
நிஜபோத வடிவான எம்மை வருண சாதிகளாகி பிரித்தானை!
பிளவு படா பிரமத்தை அறியும் அறனும் ஆக்கினை!
மாயையே ! என்சொல்வேன் உன் பராபவம்!
மாயையை பற்றி ஐந்து பாடல்கள் பாடிய எங்கள் முதலாம் சங்கரன் வாழியவே!
No comments:
Post a Comment