Thursday, April 19, 2018

ஆச்சார்யாள் பண்ணிய ராம புஜங்கத்தின் பெருமைகள்.....



இன்றைக்கு ஆச்சார்யாள் பண்ணிய ராமபுஜங்கத்தை அனுபவிப்போம் வாருங்கள்
அன்பர்களே. நூற்று எட்டு உபநிஷத்துக்கள் பட்டியலை முக்திக உபநிஷத்தில் சொல்லி உள்ளார் ராமர். அந்த உபநிஷத்தில் ராமர் , தன் நாமத்தை எவன் ஒருவன் ஜெபிக்கின்றானோ அவன் நால்வகை முக்தியை அடைகின்றான் என்கிறார். அதே போல காசியில் மரணிப்பவர்கள் அனைவரும், தங்கள் காதுகளில் சிவ பெருமானால் ராமா ராமா ராமா என்று ஓதப்பெற்று, போக்கு வரத்து இல்லாத பரமபதத்தை அடிக்கின்றனர் என்கிறார் ராமர். ஆசார்யாளும் அதே போல, ராம புஜங்கத்தில் சொல்கின்றார்.

ஶிவம் நித்யமேகம் விபு⁴ம் தாரகாக்²யம்
ஸுகா²காரமாகாரஶூந்யம் ஸுமாந்யம் ।
மஹேஶம் கலேஶம் ஸுரேஶம் பரேஶம்
நரேஶம் நிரீஶம் மஹீஶம் ப்ரபத்³யே ॥ 2 ॥

ஆச்சார்யாள் இந்த ஸ்லோகத்தில் மாண்டூக்கிய உபநிஷத்தில் உள்ள பதங்களை பயன் படுத்தி, ராமரும் அந்த சிவமாகிய பிரம்மத்தின் வடிவமே என்கிறார். அப்படி சிவமாக, நித்தியமாக, தன்னிகரற்றவனாக , தாரக ரூபனாக, சர்வ வ்யாபியாக, சச்சிதானந்த வடிவமாக, உருவம் அற்ற நிர்குண பிரம்மமாக, எல்லோர்க்கும் ஈஸ்வரனாக, பரமேஸ்வரனாக , தனக்கு மேல் எவரும் இல்லாதவனாக, இந்த இயற்கையின் நாயகனாக இருக்கும் ராமனிடத்தில் நான் சரண் புகுகின்றேன் என்கிறார். அதாவது ராமரும் சிவனும் ஒன்று தான் என்று சொல்கின்றார்.

யதா³வர்ணயத்கர்ணமூலேঽந்தகாலே
ஶிவோ ராம ராமேதி ராமேதி காஶ்யாம் ।
ததே³கம் பரம் தாரகப்³ரஹ்மரூபம்
ப⁴ஜேঽஹம் ப⁴ஜேঽஹம் ப⁴ஜேঽஹம் ப⁴ஜேঽஹம் ॥ 3 ॥

காசி க்ஷேத்ரத்தில் மரணிக்கும் உயிர்களின் வலது காதுகளில் எந்த ராம நாமத்தை பரமேஸ்வரன் , முணு முணுக்கின்றாரோ, அந்த தாரக மந்திரம் பிரம்மத்தின் ஸ்வரூபம். அந்த தாரக நாமத்தை நான் வணங்குகின்றேன் என்கிறார்.

No comments:

Post a Comment