ஆசார வித்து
நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து
இங்கு அச்சாரம் அல்லது நல்லொழுக்கத்துக்கு வித்து என்ன என்பதை மிகவும் அழகாகக் குறிப்பிடுகின்றார். அதாவது -
- நன்றி மறவாமை,
- வீரம் உடைமை,
- இனிமையான பேச்சு,
- எந்த உயிர்களுக்கும் ஹிம்சை செய்யாமல் இருத்தல்,
- கல்வி,
- அறிவு உடன் இருத்தல்,
- நல்ல மக்களோடு சேர்தல்,
- ஊரோடு சேர்ந்து வாழ்தல்
வட மொழியிலே ஆச்சாரம் என்றால் ஒழுக்கம் என்று பொருள் படும்.
ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
பொதுவாக ஒரு செயலை செய்தல் வரும் நற்பயன்களை பின்னால் கூறுவது வழக்கம். ஆனால் இந்த நூலிலே முதலிலேயே சொல்லி விட்டார் என்றால், ஒழுக்கத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் என்று பாருங்களேன்.
பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழக்கம் பிழையா தவர்.
அப்படி ஆக ஆச்சாரம் என்னும் ஒழுக்கம் தவறாமல் வாழ்வோர் அடையும் நற்பயன்கள் என்ன என்பதை இங்கு நூலாசிரியர் காட்டுகின்றார்:
பிறப்பு - (நல்ல குடும்பத்தில் பிறத்தல்)
நெடுவாழ்க்கை - நல்ல நெடிய அல்லது நீண்ட ஆயுள்
செல்வ செழிப்பு - நல்ல செல்வ செழிப்பு மிக்க வாழ்க்கை
வனப்பு - உடல் அழகு
நிலக்கிழமை - நிலத்தை ஆளுதல் அல்லது நிலத்தை உடைமை
மீக்கூற்றம் - மங்காத புகழ்
கல்வி - நல்ல கல்வி
நோயின்மை - நோய் இல்லாத நீண்ட வாழ்க்கை
அப்படியாக இந்த 8 பயன்களையும் தரும் நல்லொழுக்கங்களை எவை என்று இனி தெரிந்து கொள்வோம்.மேற்கூறிய எட்டு விதமான நற்பயன்களை எல்லாவற்றயும் அதன் இலக்கணத்துக்குத் தக்க வாறு - நன்கு பேர்கள் மத்தியிலே பெருமிதத்தோடு இருக்கும்படியாகப் பெறுவார் என்பது நூலாசிரியர் மற்றும் சித்திரங்களின் கருத்து.
தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.
நான்கு விஷயங்களை நாம் எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும்: - தக்ஷிணை, யஞ யாகாதிகள், தவம் என்று சொல்லப்படும் இறை தொண்டு , கல்வி (தமிழ் இலக்கியங்கள், மற்றும் வேத ஆகமங்கள்) . இந்த நான்கையும் - அறம், பொருள் , இன்பம் என்று சொல்லப் பெரும் தர்மம் , அர்த்த, காமம் என்று சொல்லப் படும் எல்லாவற்றையும் செய்யும் பொழுதும் காத்துக் கொள்ள வேண்டும். அப்படி, சாஸ்திரங்களுக்கு அனுகூலமான விஷயங்களை , பார்ப்பனர் மற்றும் எல்லோரும் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால் - தர்மம், அர்த்தம், காமம் என்று சொல்லப்படும் 3 விஷயங்களும் கெட்டுப் போய் விடும் என்கிறார் நம்முடைய நூலாசிரியர்.
முந்தையோர் கண்ட நெறி
வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.
நம்முடைய மூதாதையர்கள் கண்ட நெறி என்ற சாத்திரம் என்ன என்பதை இங்கு தெளிவாகக் கூறுகின்றார்.தரும சாஸ்திரங்களில் சொல்லப் பெட்ரா விஷயங்களை தெள்ளத்தெளிவாக இங்கு சொல்கின்றார்.
- வைகறையில் (ப்ரம்ம முஹூர்த்தம் என்று சொல்லப்பெறும் 4-6 AM) துயில் எழுதல்
- தன்னுடைய (தொழில்) தர்மத்தையும் ,
- தரும வழியில் எப்படி பொருள் சேர்ப்பது என்பது பற்றி எல்லாம் மனதினால் சிந்தித்து,
- உண்மை உள்ளவனாகி பெற்ற தந்தை தாயாரை வணங்கி எழுத்து,
ஒரு நாளை துவங்க வேண்டும் என்பது - நம்முடைய தமிழர் மரபு என்கிறார் நூல் ஆசிரியர்.
எச்சிலுடன் தீண்டத் தகாதவை
எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்.
நம்முடைய மரபிலே (ஸம்ப்ரதாயத்திலே) எச்சில் என்பது ஒரு கீழ்மையான விஷயம். சாஸ்திரங்களில் சொல்லப்பெற்ற விஷயத்தை இங்கு அழகாகக் கூறுகின்றார். எச்சிலுடன் தொடக் கூடாதவை என்ன என்று இங்கு பார்ப்போம்:
- பசு - பசு மாடு
- பார்ப்பார் - ப்ராஹ்மணர்கள்
- தீ - அக்னி
- தேவர் - தெய்வ விக்கிரகங்கள் / பூஜா வஸ்துக்கள்
- உச்சந்தலை
மேற்கூறிய ஐந்து பொருட்களையும், எச்சிலுடன் எவருமே கண்டிப்பாகத் தீண்ட கூடாது என்கிறார்.
எச்சிலுடன் காணக் கூடாதவை
எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்
தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றென
நன்கறிவார் நாளும் விரைந்து.
எச்சிலுடன் காணக்கூடாத விஷயங்கள் என்ன என்று மிகவும் தெளிவாகக் கூறுகின்றார் இங்கு:
- புலை - புலை என்றால் பிணம் அன்று பொருள் படும். (சுடுகாட்டில் பிணம் எரிப்பவர்களை புலையர்கள் என்று கூறுவார்கள்)
- திங்கள் - சந்திரன்
- ஞாயிறு - சூரியன்
- நாய்
- மீன்
மேற்கூறிய இந்த ஐந்து பொருட்களையும் எச்சிலுடன் காணக்கூடாது என்பது நம்முடைய மரபு. சோற்றைக் கையில் வைத்துக் கொண்டு , எச்சிலுடன் வீடு முழுக்க சுற்றித் திரிவது ஆகியவை மிகவும் தவறு என்று பொருள் கொள்ள வேண்டும்.
எச்சில்கள்
எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயின்
விழைச்சுஇவை எச்சில் இந்நான்கு.
எச்சில் என்றால் என்ன என்பதை இங்கு ஆசிரியர் தெளிவாகக் காட்டுகின்றார்:
- மலம்
- ஜலம் - மூத்திரம்
- இணைவிழைச்சு - உடல் உறவின் பொழுது வெளியாகும் திரவங்கள்
- வாயின் விழைச்சு - வாயில் உற்பத்தி ஆகும் எச்சில் மற்றும் சொள்ளு ஆகியவைகள்.
மேற்கூறிய நான்கு விஷயங்கள் எச்சில் எனப்படும்.அதனைத் தவிர உடலில் இருந்து வெளியேறும் சீழ்,இரதம் போன்ற திரவங்கள் எல்லாமே எச்சில் ஆகும்.(அதாவது நோய் கிருமிகளை பரப்பும் தன்மை உடையவை என்று பொருள் கொள்ள வேண்டும்).றிவியல் எல்லாம் வருவதற்கு பல காலங்களுக்கு முன்பே நம்முடைய முன்னோர்கள் இந்த விஷயங்களை எல்லாம் நமக்காகப் பகுத்து வைத்துள்ளனர்.
எச்சிலுடன் செய்யக் கூடாதவை
நால்வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
மேதைகள் ஆகுறு வார்.
அப்படியாக , எச்சிலுடன் இந்தக் காரியங்களை எல்லாம் செய்யக் கூடாது என்று சொல்கிறர் நூலாசிரியர் இங்கு:
அதாவது மேற்கூறிய நான்கு வகை எச்சிலுடனும் இந்த 3 செயல்களையும் செய்யக் கூடாது என்கிறார். எப்பொழுதுமே மேதைகள், அறிவாளிகள் அந்தக் காரியங்களைச் செய்ய மாட்டார்கள் என்று சொல்கின்றார்.
காலையில் கடவுளை வணங்குக
நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி
நின்று தொழுதல் பழி.
காலையில் எழுந்தவுடன் வேம்பு அல்லது வேலம் குச்சிகளால் பல் துலக்கி, கண்களை நன்று கழுவி, அதன் பிறகு தன வணங்கும் தெய்வத்தை வணங்கி(நமஸ்கரித்து) வேறு எந்த வேலையும் செய்ய வேண்டும். மாலைப் பொழுதில், சந்தியா காலத்தில் உட்கார்ந்து கொண்டு தான் தெய்வத்தை வணங்க வேண்டும் என்பது சாத்திரம்.
நீராட வேண்டிய சமயங்கள்
தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர்.
அதாவது நீராட வேண்டிய தருணங்கள் எவை என்று இங்கு மிக துல்லியமாகக் காட்டுகின்றார் நூல் ஆசிரியர்:
மேற்கூறிய பாத்து காலங்களிலும் (அதன் பிறகு) கண்டிப்பாக நீராட வேண்டும் என்பது சாத்திரம். சில சமயங்களில் குளிக்க முடியாதவர்கள் ஜலத்தை தலையில் தெளித்துக் கொள்வார்கள் (உடல் நலம் இல்லாதவர்கள்).
எச்சிலுடன் செய்யக் கூடாதவை
நால்வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
மேதைகள் ஆகுறு வார்.
அப்படியாக , எச்சிலுடன் இந்தக் காரியங்களை எல்லாம் செய்யக் கூடாது என்று சொல்கிறர் நூலாசிரியர் இங்கு:
- ஓதார் - வேதங்களையும் மற்ற சமய நூல்களையும் ஓதக் கூடாது,
- உரையார் - எதயும் பேசிக் கூடாது
- உறங்குதல் கூடாது
அதாவது மேற்கூறிய நான்கு வகை எச்சிலுடனும் இந்த 3 செயல்களையும் செய்யக் கூடாது என்கிறார். எப்பொழுதுமே மேதைகள், அறிவாளிகள் அந்தக் காரியங்களைச் செய்ய மாட்டார்கள் என்று சொல்கின்றார்.
காலையில் கடவுளை வணங்குக
நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி
நின்று தொழுதல் பழி.
காலையில் எழுந்தவுடன் வேம்பு அல்லது வேலம் குச்சிகளால் பல் துலக்கி, கண்களை நன்று கழுவி, அதன் பிறகு தன வணங்கும் தெய்வத்தை வணங்கி(நமஸ்கரித்து) வேறு எந்த வேலையும் செய்ய வேண்டும். மாலைப் பொழுதில், சந்தியா காலத்தில் உட்கார்ந்து கொண்டு தான் தெய்வத்தை வணங்க வேண்டும் என்பது சாத்திரம்.
நீராட வேண்டிய சமயங்கள்
தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர்.
அதாவது நீராட வேண்டிய தருணங்கள் எவை என்று இங்கு மிக துல்லியமாகக் காட்டுகின்றார் நூல் ஆசிரியர்:
- தேவர் வழிபாடு - திருவாராதனம் என்று சொல்லப் படும் பூசை செய்யும் காலம் (பூஜைக்கு முன்பு)
- தீக்கனா - தீய கனவு காணும் காலம் (கண்டா பிறகு)
- வாலாமை - பிறப்பு (மற்றும் இறப்பு) தீண்டல்கள் உள்ள / தீண்டிய காலத்திலும் (தீட்டு கழிந்த பின்பு)
- உண்டது கான்றல் - வாந்தி எடுத்த காலம் (பின்பு)
- மயிர்களைதல் - முடியை வெட்டிக் கொள்ளுதல் / மொந்தை அடித்துக் கொள்ளும் காலம் (க்ஷவரத்திற்கு பின்பு)
- ஊண்பொழுது - சாப்பிடும் காலம் (உணவிற்கு முன்பு)
- வைகு துயிலொடு - நீண்ட தூக்கத்திற்குப் பிறகு
- இணைவிழைச்சு - உடல் உறவு ஆன பிறகு
- கீழ்மக்கள் மெய்யுறல் - நீசர்களைத் தொடுங்கால் (தங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். தீண்டாமை என்று பொருள் படாது)
- மயலுறல் - மாலா, சலம் கழித்த பிறகு
மேற்கூறிய பாத்து காலங்களிலும் (அதன் பிறகு) கண்டிப்பாக நீராட வேண்டும் என்பது சாத்திரம். சில சமயங்களில் குளிக்க முடியாதவர்கள் ஜலத்தை தலையில் தெளித்துக் கொள்வார்கள் (உடல் நலம் இல்லாதவர்கள்).