- எண் சான் உடலுக்கு சிரசே பிரதானம்.
- கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே.
- மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது.
- காலைச் சுத்தின பாம்பு கடிக்காம விடாது .
- வெண்ணை திரண்டு வரும் பொழுது தாழியை ஒடச்ச மாதுரி .
- ஆச்சானுக்குப் பீச்சான் மதனிக்கு உடன் பிறந்தோன்.
- உடன் பிறந்தோன் கிட்டேயே பிறந்த அகத்து பெருமையா ?
- பாவியைக் கடவுள் பனை போலே உயர்த்துவான் .
- மந்திரவாதி யார் அனாலும் கோழிக்கு ஒரு விமோசனம் இல்லை.
- அந்திக்கு ஆகாத பெண்ணும் இல்லை சந்திக்கு ஆகாத தண்ணியும் இல்லை.
- தாயைப் பழிச்சாலும் தண்ணீரைப் பழிக்காதே.
- கழுதை கெட்டா குட்டி சுவரு.
- வண்ணன் கூடப் போனா விடிய விடிய வெள்ளாவி.
- வண்ணானுக்கு வண்ணாத்தி மேல ஆசை வண்ணாதிக்குக் கழுத மேல ஆசை.
- அகத்தழகு முகத்திலே தெரியும்.
- வேலியிலே போகற ஓணானைப் பிடித்து வேஷ்டிகுள்ளே விட்டிட்டு கொடயுது கொடயுதுன்னு சொன்னனாமா .
- எங்கேயோ போகற மாரியாத்தா எம்மேலே வந்து ஏறாத்தா..
- பானைச் சோத்துக்கு ஒரு சோறு பதம்.
- தொட்டில்ப் பழக்கம் சுடுகாடு வரைக்கும்.
- செத்தும் கொடை கொடுத்தான் சீதக்காதி.
- புடிச்சாலும் புளியங் கொம்பாய் பிடிச்சிட்டான்.
- உடும்புப் பிடி பிடிச்சிட்டான்.
- கையிலே வெண்ணெயை வெச்சிட்டு நெய்யிக்கு அலயுவானேன்?
- துட்டுக்குப் பத்து குட்டி ஆனாலும் துலக்காக்குட்டி ஆகாது.
- பருவத்தில் பண்ணியும் பத்து பணம் பெரும்.
- ஊரன் வெட்டு நெய்யே ! எம் பொண்டாட்டி கையே!
- கொழுத்தவனுக்கு கொள்ளு. இளைத்தவனுக்கு எள்ளு.
- எள்ளு தின்னவன் உழைக்கணும்.
- ஆவதும் பெண்ணாலே மனுஷன் அழிவதும் பெண்ணாலே.
- கோபம் உள்ள இடத்திலே தான் குணமும் இருக்கும்.
Saturday, June 11, 2016
பழமொழித் திரட்டு - I (30)
With an intention to preserve our proverbs etc.. this blog has been created. To begin with :
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment