Sunday, June 19, 2016

பழமொழித் திரட்டு - III (50)


  1. முயற்சி திருவினை ஆக்கும்.
  2. அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே.
  3. மாதா பிதா குரு தெய்வம்.
  4. உள்ளங்கை நெல்லிக்கனி என .
  5. இலை மறை காய்  போலே.
  6. அஞ்சு பொண்ணுப் பெத்தால் அரசனும் ஆண்டி ஆவான்.
  7. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி.
  8. முள்ளை முள்ளால எடுக்கணும்.
  9. க்ஷத்ரியன் அகணும்ன்னா  முதலில் சாணக்யன் ஆகணும்.
  10. வெச்சால்  குடுமி சரைச்சா மொட்டை.
  11. அரங்கத்தில் ஆடித் தான் அம்பலத்தில் ஆட வேண்டும்.
  12. மருந்துக்கு மள்ளுக் கேட்டால் பொண்டாட்டியைக் கேட்டுட்டுத் தரேன்னானம்.
  13. தனி மரம் தோப்பாகாது.
  14. பாத்திரத்தில் இருந்தாத் தான் கரண்டியிலே வரும்.
  15. நாயை அடிப்பானேன் பீயை சுமப்பானேன்
  16. கோமணத்தைக்  கொடுத்துப் புதைப்பை  வாங்கிக் கொண்ட மாரி.
  17. பாம்பறியும் பாம்பின் கால்.
  18. காற்றுள்ள போதே தூற்றிகொள்.
  19. பொறுத்தார் பூமி ஆள்வார்.
  20. பொறுமையே பெருமை.
  21. மின்னரதெல்லாம் பொன்னல்ல.
  22. கெடுவான் கேடு நினைப்பான். 
  23. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
  24. குடுக்கிற தெய்வம் கூரையைக் பிச்சுட்டுக் குடுக்கும்.
  25. பிடிக்காத பெண்டாட்டி கைப்  பட்டாக்  குத்தம் கால் பட்டாக் குத்தம்.
  26. ஆட்டுத் தோல் போத்திய புலி.
  27. பசு மரத்தாணி போல.
  28. யானைக்கு  அர்ரம்ன்னா  குதிரைக்கு  குர்ரம்.
  29. ஆசை தோசை அப்பளம் வடை.
  30. வெட்டொண்ணு துண்டு ரெண்டு.
  31. ஒரே கல்லிலே ரெண்டு மாங்காய்.
  32. காயக்கர மரத்திலே தான் கல்லடி விழுகும்.
  33. நக்கற மாடு மேயற மட்டைக்  கெடுதத்து.
  34. திக்கற்றவருக்கு  தெய்வமே துணை.
  35. காரியம் ஆகற வரைக்கும் காலைப் பிடி. காரியம் முடிந்ததும் கழுத்தைப் பிடி.
  36. வீண் வம்புக்குப் போஹா மாட்டான். வந்த வம்பை விட மாட்டான்.
  37. அகலக் கால் வைக்காதே.
  38. ஆசை தீர அணைச்சவனும் இல்லே. அழுக்குத் தீரக் குளிச்சவனும் இல்லே.
  39. உரலில் தலையைக் குடுத்துட்டு இடிக்கி பயந்தா எப்படி?
  40. செருப்பையும் குடுத்து அடியையும் வாங்கீண்ட மாதிரி.
  41. ஆவணிஅவிட்டதுக்கு அசடும் சமைக்கும்.
  42. பாவி போன இடம் பாதாளம்.
  43. ராமேஸ்வரத்துக்குப் போனாலும் சனீச்வரம் விடாது.
  44. கல்யாணமும் இல்லே ஆம்படயானும் இல்லே பய்யன் பேரு சோமலிங்கம்.
  45. ஆடிக் கடிச்சு மட்டைக் கடிச்சு மனுஷனையே கடிச்ச மாரி
  46. வேணும்ன்னால் பலா வேரிலேயும் காய்க்கும்.
  47. பிள்ளையார் பிடிக்கப் போய் கொரங்காசு.
  48. பூவுடன்சேர்ந்த நாறும் மணப்பது போல.
  49. சோறு கண்ட இடமே சுவர்க்கம். கஞ்சி கண்ட இடமே கைலாசம்.
  50. கழுதை  விட்டை கை நிறைய.

No comments:

Post a Comment