Friday, June 17, 2016

பழமொழித் திரட்டு - I (42)


  1. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி. 
  2. இரைக்கர  கிணற்றில் தான் ஊரும்.
  3. குடுத்து வைச்சாத் தான் கிடைக்கும்.
  4. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தல் தன பிள்ளை தானாக  வளரும்.     
  5. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்ட மாதுரி.
  6. எச்சில் கையிலே ஈ ஓட்ட மாட்டான்.
  7. நூலைப் போலே சேலை. தாயைப் போலே பிள்ளை.
  8. அறுத்த கைக்கு உப்புத் தர மாட்டான்.
  9. வீட்டுக்கு வீடு வாசப்படி
  10. அக்கறைக்கு இக்கறை பச்சை.
  11. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
  12. குந்துமணி குப்பையில் கிண்டந்தாலும் நிறம் மாறாது.
  13. ஊர்க்குருவி உயரப் பறந்தாலும் பருந்து  ஆகாது. 
  14. திணை விதைச்சா திணை விளையும் வினை விதைச்சா வினை வளரும்.
  15. மொச்சை அவரை  நாட்டால்  எப்படி நாட்டவரை முளைக்கும் ?
  16. பெண் புத்தி பின் புத்தி.
  17. ஆவதும் பெண்ணாலே மனிதன் அழிவதும் பெண்ணாலே!
  18. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
  19. தில்லிக்கு ராஜாவானாலும் தாய்க்குப் பிள்ளை.
  20. காக்கைக்குத் தன குஞ்சு பொன் குஞ்சு.
  21. நுணலும் தன் வாயால் கெடும்.
  22. தனக்குத் தனக்கென்றால்  கொழக்கட்டை பெருசு.
  23. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?
  24. உரலுக்கு ஒருபக்கம் இடி ! மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடி!
  25. ஊட்டிக் குடுக்கிற சோறும் சொல்லிக் குடுக்கிற புத்தியும் ரொம்ப நாள் நிலைக்காது.
  26. வளர்த்த கடாய் மாரிலே பாஞ்ச மாதிரி.
  27. ஊமை ஊரைக் கெடுக்கும்.
  28. அசட்டுக்கு ஆங்காரம் செட்டுக்கு குனுஷ்டு.
  29. அடி மேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும்.
  30. ஆழாக்கு அரிசி ஆனாலும்  மூணு அடுப்புக் கல்லு வேணும்.
  31. தலை இருக்க வால் ஆடலாமா?
  32. மதில் மேல் பூனை மாதிரி.
  33. பேளாதவன்   பேண்டால் பீஎடுதுத் திருவிழா.
  34. அள்ளாமல் குறையாது கிள்ளாமல் வலிக்காது.
  35. மச்சான் செத்தால் மயிராச்சு கம்பளி  நமக்காச்சு.
  36. கம்பளி வேண்டாம் கட்டு விட்டால் போதும் .
  37. இன்னைக்கு செத்தால் நாளைக்குப் பால்.
  38. ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகுதாம்.
  39. தலைக்கு வந்தது தலைப்பாகைஓடப்   போச்சு.
  40. ஊர்வசி சாபம் உபகாரம் ஆச்சு.
  41. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
  42. சீலை மேல் முள் விழுந்தாலும் முள்ளு மேல் சீலை விழுந்தாலும் கேடு சீலைக்குத் தான்.

No comments:

Post a Comment