Sunday, June 12, 2016

பழமொழித் திரட்டு - II (30)

  1. பாத்திரம் நக்கி வீட்டில் ஒரு தொன்னை / கரண்டி நக்கி.
  2. ஆசை அறுவது நாள் மோஹம்  முப்பது நாள்.
  3. எரியறதைப் பிடுங்கினால் கொத்திகறது நின்று விடும் .
  4. அடி செய்யறதை அண்ணன் தம்பி கூட செய்ய மாட்டான்.
  5. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு .
  6. அசட்டுக்கு ஆங்காரம் செவிட்டுக்கு குனுஷ்டு .
  7. கிடக்கறது  எல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் துக்கி மடியில வை. 
  8. வர வர மாமியார் கழுதே போலே.
  9. ஏற்கனவே மாமியார் பேய்க்கோலம் அதிலேயும் சித்த அக்கிலிப்பிக்கிலி.
  10. அரச மரத்தைச் சுத்தி வரதுக்குள்ளே அடிவயதைத் தொட்டுப் பார்த்தாளாம் !
  11. கஞ்சிக்குச் சுக்குப் போட்ட மாதுரி .
  12. கடைத் தேங்காயை வழிப் புள்ளயாருக்கு ஒட்ச மாதுரி. 
  13. மானத்தைப் பார்த்தால் மாரு முட்டும் சோறு.
  14. நாய்க்கு   வேலை இல்லை ஆனால் நிக்க நேரம் இல்லை. 
  15. எள்ளு எண்ணெய்க்குக் காயணம் எலிப்புழுக்கை எதுக்குக்  காயணம் ? 
  16. பேண்டவனை வெட்டச் சொன்னாப் பீயை வெட்டரான்.
  17. நாயைக் கூப்படர நேரதிலேப் பீயை வழிச்சு எரிஞ்சுடலாம்.
  18. நாற்பது வயசுலே நாய் குணம். 
  19. குதிரை காய்ந்தால் தானாக வந்து  வைக்கோல் திங்கும் !
  20. திரும்பவும் வேதாளம் முருங்கமரம் ஏறியாச்சு! 
  21. பறைச்சி பனை மட்டை மேல ஒண்ணுக்கு அடிச்சா மாதுரி! 
  22. கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
  23. நின்ன எடத்திலேயும்   கல்லு  நிலத்திலேயும் குழி .
  24. பேய்ந்தால் பேய்வான் காய்ந்தால் காய்வான்.
  25. மாமியார் ஒடச்சா மண் பானை மாட்டுப்பொண் ஒடச்சா பொன் பானை. 
  26. உனக்கும் பெப்பேப்பே    உங்க அப்பனுக்கும் பெப்பேப்பே.
  27. கம்பளி வேண்டாம் கட்டு விட்டால்ப் போதும் .
  28. எரியற வீட்டில் பிடுங்கினது லாபம் .
  29. காராம் பசு கரக்கறது உழக்கு ஒதக்கற ஒதையிலே பல்லு பேந்து  போகும்!
  30. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்ப்ரிடாரியை  விரட்டியதாம்.

No comments:

Post a Comment