Friday, June 17, 2016

பழமொழித் திரட்டு - II (90)

  1. அற்பதுக்குப் பணம் படிச்சால் அர்தரதிரி குடை பிடிக்கும்.
  2. சந்து கிடைச்சா சிந்து படுவான்.
  3. அவில்ன்னு நினைச்சு உமியை மெல்லரான்.
  4. சித்திரமும் கைப்பழக்கம் 
  5. அரைச்ச மாவையே அரைக்கற மாதுரி
  6. தலை வலியும் பல் வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் 
  7. வீட்டைக் கட்டிப் பாரு கல்யாணத்தைப் பண்ணிப் பாரு
  8. பாடப் பாட ராகம் மூட மூட ரோகம்
  9. பட்டால் தெரியும் பார்ப்பானுக்கு கெட்டால் தெரியும் கோமுட்டிக்கு
  10. கொல்லன் தெருவிலே ஊசி விக்கறதா ?
  11. ஊருக்கு இளைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டி.
  12. அம்மாவாசைக்கும் அப்துல்காதருக்கும்  என்ன சம்பந்தம் ?
  13. மொட்டைத் தலைக்கும் முழம்காலுக்கும் முடிச்சுப் போட்டனாம் 
  14. குருடனைப் பார்த்து ராஜபார்வை பார்க்கச் சொன்ன எப்படி?
  15. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.
  16. சிவா பூஜையிலே கரடி புகுந்த மாரி.
  17. கறந்த பாலும் எச்சிலே  பிறந்த பிள்ளையும் எச்சிலே  .
  18. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது.
  19. பனை மரத்துக்கடியில் நின்று பாலைக் குடித்தாலும் கள்ளு என்பார்கள்.
  20. சவத்தில் குத்தாதே.
  21. செத்துப் போனவனுக்கு ஜாதகம் பார்த்தானாம்.
  22. உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.
  23. மரம் வைத்தவன் தண்ணீர் உற்றுவான்.
  24. மாட்டைக் கொன்னுட்டு செருப்பு தானம் கொடுத்தானாம்.
  25. சோழியன் குடுமி சும்மா ஆடாது.
  26. ஆடு நனயிதேன்னு ஓநாய் அழுகுதாம்.
  27. பாத்தாப் பூனை பாஞ்சாப்  புலி.
  28. வெட்டிக்கொண்டு வான்னா  கட்டிக்கொண்டு வருவான்.
  29. பிள்ளையும் கிள்ளி விட்டிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டானாம்.
  30. ஆத்தில் ஒரு கால் சேத்தில் ஒரு கால்.
  31. மீன் வாயிலே தப்பி முதலை வாயிலே மாட்டிக்கொண்ட மாரி.
  32. ஐயோ பாவம் என்றால் ஆறு மாசத்துப் பாவம் வந்து விடும்.
  33. செவிடன் காதிலே சங்கு ஊதின மாதிரி.
  34. எறும்பூரக் கல்லும் தேயும்.
  35. சிறு துளி பெருவெள்ளம்.
  36. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆச்சு.
  37. உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆச்சு.
  38. கல்லேறு கொண்டாலும் கண்ணேறு கொள்ளாதே.
  39. கொள்ளிக் கட்டை எடுத்து தலையை சொரிஞ்சாப் போலே 
  40. ஒரு கண்ணுக்கு வெண்ணையும் இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும்.
  41. சாட்சிக்காரன் காலிலே விழுவதை விடச் சண்டைக் காரன் காலிலே விழுவது மேல்.
  42. குரங்கு கையில் பூமாலை கிடைத்தது  போல.
  43. நாயிக்கு முழுத்தேங்காய் கிடைத்தது போலே. 
  44. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
  45. நாயைக் குளுப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாலைச் சுருட்டிக் கொண்டு பீயைத் திங்கும்.
  46. குள்ளநரியின் கண்ணு கோழிக் கூட்டிலே.
  47. காக்கா கூவி பொழுது விடிஞ்சாப் போலே.
  48. தாயிக்குத் தாலி செஞ்சா கால் பொன்னில் மாப்பொன்  திருடுவான் தட்டான்.
  49. தானம் வாங்கற மாட்டை காதைப் பிடிச்சுப் பார்த்தானாம்.
  50. அழுக்கு தீரக் குளிச்சவனும் இல்லை பசி தீரத் தின்னவனும் இல்லை 
  51. சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்காப்பணம்.
  52. விஸ்வாமித்ரர் வாயிலேயே ப்ரும்மரிஷிப் பட்டம்.
  53. பூச்சி பூச்சி  என்றால்  புழுக்கை தலை மேல் ஏறும்.
  54. கிளியை வளத்துப் பூனை கையிலே கொடுத்த மாரி.
  55. விடிய விடிய ராமாயணம் கேட்டு விடிஞ்சவுடன் சீதைக்கு ராவணன் சித்தப்பா.
  56. சுக்குக் கண்ட இடத்திலே புள்ளைப் பெக்கறாள்.
  57. அடிக்கிற கை தான் அணைக்கும்.
  58. ஆடிப் பட்டம் தேடி விதை.
  59. சீப்பை ஒளிச்சி வெச்சால் கல்யணம் நிக்குமோ?
  60. பருப்பு இல்லாத கல்யாணமா?
  61. பொன்னை வெக்கற  இடத்திலே பூவை வெக்கணம்.
  62. நெருப்பிலாமல் புகையாது.
  63. ஆயிரம் முறை போயிச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தணும்.
  64. கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிறு.
  65. வாய்மையே வெல்லும்.
  66. ஆடிக் காத்திலே அம்மியும் பறக்கும்.
  67. கார்த்திகைக் கப்புறம் மழையும் இல்லை கர்ணனுக்கப்புரம் கொடையும் இல்லை.
  68. பால சாபம் காலைப் பிடித்தாலும் போகாது.
  69. அழுகற ஆணையம் சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே.
  70. கருத்த பாப்பானையும்  வெளுத்த பறையனையும் நம்பாதே.
  71. அழுகற பிள்ளைக்குத் தான் பால்.
  72. விளக்கெரிஞ்ச  வீடும் பிள்ளைப் பெத்த வீடும் வீண் போகாது.
  73. புலி பசித்தாலும் புல்லைத் திங்காது.
  74. எள்ளுன்னா எண்ணெய்  இறக்குவான்.
  75. காற்றைக் கயிராத் திரிப்பான்.
  76. ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சரச்சனாம்.
  77. மீன் குட்டிக்கு நீந்தச் சொல்லித் தரணமா என்ன ?  
  78. நெருப்பென்றால் வாய் சுடாது.
  79. சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது.
  80. சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்க மாட்டான்.
  81. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  82. நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது  சாக்கு.
  83. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.
  84. ஆண்டிகள் கூடி மடம் கட்டின  மாறி.
  85. நோகாமல் நோன்பு கூம்பிடனும்ன்னா முடியுமா?
  86. தோல்வியே வெற்றிக்கு முதற் படி.
  87. குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு.
  88. ஒரு கண்ணுக்கு வெண்ணையும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்புமா?
  89. வித்து குணம் பாத்து குணம்.
  90. ஆழம்  தெரியாமல்  காலை  விடாதே.

No comments:

Post a Comment