Thursday, June 16, 2016

பழமொழித் திரட்டு- III (40)


  1. தலைக்கு வந்தது தலைப்பகைஒடப் போச்சு.
  2. ஊர்வசி சாபம் உபஹாரம் ஆச்சு. 
  3. தாய்ப் புலி எட்டடி பாஞ்சால் குட்டிப்புலி பதினாறு அடி பாயும். 
  4. புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்கலாம் எலி சூடு போட்டுக்கலாமா ?
  5. முதலியார் ஜம்பம் விளக்கு எண்ணெய்க்குக் கேடு.
  6. அளந்த படி அட்டாரிலே!
  7. (சர்க்கரை)ஆலை  இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை.
  8. பணம்ன்னாப்  பொணம் கூட வாயைத் திறக்கும்.
  9. பசி வெட்கம் அறியாது.
  10. பணம் பத்தும் செய்யும் 
  11. ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. 
  12. பாலம் கடக்கர வரைக்கும் நாராயணா   அதுக்கப்புறம் கூரயணா.
  13. படுக்க இடம் கொடுத்தாப் பாய் கேப்பான்.
  14. அரசனை நம்பி புருஷனை விட்ட மாதுரி.
  15. இருக்கறதை  விட்டுட்டுப் பறக்கறதைப் பிடிக்கற மாதுரி.
  16. சுவர் இருந்தாத் தான் சித்திரம் .
  17. முத்தத்து முல்லைக்கு மனம் இல்லை. 
  18. கழுதை  அறியுமோ கற்பூர வாசனை. 
  19. ஆறு நிறையத் தண்ணி போனாலும் நாய் நக்கித் தான் குடிக்கும். 
  20. நாய் வாலை நிமித்த முடியாது.
  21. திருப்பதியிலே போய் சொறியன் காலிலே விழுந்த மாதுரி 
  22. கத்தி இல்லாமல் சரைக்கப் போன மாதுரி.
  23. தலைக்கு மேல தண்ணி போயாச்சு இனி ஜாண் நனைந்தா என்ன முழம் நனைந்தா என்ன ?
  24. ஆள் பாதி ஆடை பாதி.
  25. குறை குடம் தெளும்பும் நிறை குடம் தெளும்பது.
  26. நகம் கெட்டால் சுகம் கெடும்.
  27. பல் போனால் சொல் போச்சு. 
  28. ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
  29. பார்வை போனப்பறம் சூரிய நமஸ்காரம் பண்ணின மாதுரி.
  30. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
  31. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. 
  32. ஆணை அடிச்சு வளத்தணும் பொண்ணைப் பூத்தி வளத்தணும்  
  33. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
  34. எழுதின ஒலைக்குத் தான் பழுது.
  35. அரிசியும் கொண்டு அக்காள் அகத்துக்குப் போன மாதுரி.
  36. பக்கத்துக் வீட்டுக்காரிக்குப் பட்டுப் புடவையைக் குடுத்துட்டுப் பலஹயைத் தூக்கிட்டு. பின்னாலையே ஓடின மாதிரி.
  37. ஊமைக்கு உளறு வாயன் சர்வக்னன்.
  38. போகாத உறவும் கேட்காத கடனும் கெடும்.
  39. ஊர் வாயை அடக்க முடியாது.
  40. நெல்லுக்குப் பாயறது புல்லுக்கும் பாயும்.

No comments:

Post a Comment