Thursday, June 16, 2016

பழமொழித் திரட்டு - IV (40)


  1. காது  இல்லதவன்   ராஜ்யத்திலே  கழுதைக் (donkey) காதன்   ராஜா.
  2. மூக்கு  இல்லாதவன்  ராஜ்யத்திலே  மொண்ணை  மூக்கன்  ராஜா. 
  3. துப்புக் கெட்ட  கிழவனுக்கு  ரெட்டைத்  தீவெட்டி.   
  4. ஆடத் தெரியாதத் தேவிடியளுக்கு  மேடை  கோனை.
  5. கழுநீர்ல  கை  அலம்பின  மாதிரி. 
  6. பிச்சை  எடுத்தான்  பெருமாளு  பிடுங்கி  திண்ணன்  அனுமாரு.
  7. மாடு  இளைச்சாலும்  கொம்பு  இளைக்காது.
  8. கீழே  விழுந்தேன்  ஆனா  மீசைல  மண்   ஓட்டலை.
  9. யானை இளைச்சா  தொழுவத்தில் கட்ட முடியுமா ?.
  10. யானைக்கும் அடி சறுக்கும்.
  11. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் நகராது.
  12. சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
  13. சிக்கனமும் கைப் பழக்கம். 
  14. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
  15. ஆத்திலே கொட்டினாலும் அளந்து கொட்டு.
  16. பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
  17. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.
  18. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
  19. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
  20. காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதுரி.
  21. பட்டிக்காட்டான் மிட்டயிக் கடையைக் கண்ட மாதிரி.
  22. இஞ்சி தின்ன குரங்கு மாதிரி.
  23. கண்ணை மூடிக் கொண்டு பால் குடிச்சால் யாரும் பார்க்க மாட்டங்கன்னு நினைச்சுதாம் பூனை.
  24. அரசனும் ஆண்டி ஆவான்.
  25. ஆக்கப் பொருதவன் ஆரப் போருக்க மாட்டான்.
  26. வேலிக்கு ஓணான் சாட்சி.
  27. வேலியே பயிரை மேஞ்சால் எப்படி ?
  28. ஆட்டுக்கு வால் அளந்து தான் வெச்சிருக்கான்.
  29. உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது.
  30. அழுதாலும் புல்லை அவ தான் பெக்கணம்.
  31. தனக்குத் தானும் பிரைககுத் தூணும். 
  32. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயரும் வேறு தான்.
  33. கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
  34. இளம்கன்று பயம் அறியாது.  
  35. போன மச்சான் திரும்பி வந்தான்.
  36. தேவிடியா வேட்டிலே பய்யன் பிறந்த மாதிரி.
  37. மயிரைக் கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிரு.
  38. கழுவின மீனிலே நழுவின மீன் மாதுரி.
  39. விருந்தும் மருந்தும் மூன்று நாள்  மட்டுமே.
  40. வாயிலே விரலை வைத்தால் கூடக்  கடிக்க மாட்டான்.

No comments:

Post a Comment