Monday, June 20, 2016

பழமொழித் திரட்டு - IV (50)


  1. சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால் நாய்க்குத் தான் வாய் வலிக்கும்.
  2. சூரியனைக் கை கொண்டு மறைக்க முடியுமா?
  3. குருடர்கள் சேர்ந்து யானையைப் பார்த்தாப் போலே.
  4. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
  5. ஒன்றே குளம் ஒருவனே தேவன்.
  6. அன்பே சிவம்.
  7. சும்மா இருப்பதே சிவம்.
  8. வீட்டுக்கு அடங்காதவன் நாட்டுக்கு அடங்குவான்.
  9. அம்மா அழ அழச் சொல்லுவாள். ஊரு சிரிக்கச்  சிரிக்கச் சொல்லும்.
  10. தானத்தில் சிறந்தது அன்னதானம்.
  11. பாழானது பசுவின் வயிற்றிலே.
  12. சாப்பிடும் முன் காக்கைக்குக் கொடு. சாப்பிட்டு விட்டு நாயிக்குக் கொடு.
  13. பூனை வந்து குட்டி போடணம். நாய் போய்க்  குட்டி போடணம்.
  14. இன்றைக்கு இருப்பவர்களை நாளைக்குக் காணவில்லை.
  15. இன்றைக்குச் செத்தால் நாளைக்குப் பால்.
  16. ஏழை சொல் அம்பலம் ஏறாது.
  17. எரியிற தீயில் எண்ணெய் ஊற்றின மாரி.
  18. பட்ட புண்ணிலே படும். சுட்ட புண்ணிலே சுடும்.
  19. பதறாத காரியம் சிதறாது.
  20. நான் புடிச்ச முயலுக்கு மூணு காது.
  21. காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்.
  22. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  23. வெளுத்ததெல்லாம் பால் அல்ல.
  24. மின்னுவதெல்லாம் பொன் அல்ல.
  25. விளையும் பயிர் முளையிலே தெரியும்.
  26. முடி மன்னரும் பிடி சாம்பல்.
  27. மடியிலே கனமில்லை. வழியிலே பயமில்லை.
  28. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
  29. யானை இருந்தாலும்  ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம்  பொன்.
  30. பணம் இல்லாதவன் பிணத்துக்கு ஒப்பு.
  31. பூனையை மடியிலே கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கற மாரி.
  32. ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.
  33. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள்.
  34. இனம் இனத்தோடு சேரும்.
  35. குரைக்கர நாய் கடிக்காது.
  36. பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி.
  37. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
  38. எய்தவனை விட்டு விட்டு அம்பைக்  கடிவதேன்?
  39. குற்றமுள்ள நெஞ்சம்   குறுகுறுக்கும்.
  40. ஆபத்துக்குப் பாவம் இல்லை.
  41. புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா?
  42. பணம் பாதாளம் வரைக்கும் பாயும்.
  43. பட்ட காலிலே படும். கேட்ட குடியே கெடும்.
  44. துங்கரவனை எழுப்பி சோறு இல்லைன்னு சொன்ன மாரி.
  45. சிறுகக் கட்டிப் பெருக வாழ வேண்டும்.
  46. சுத்தம் சுகம் தரும்.
  47. உடம்பை உறுதி செய்.
  48. உள்ளத்தில் உறுதி வேண்டும்.
  49. வாயில் இருந்து போன வாக்கையும் வில்லில் இருந்து போன அம்பையும் திரும்ப   எடுக்க முடியாது.
  50. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.

No comments:

Post a Comment