திருவள்ளுவரின் திருக்குறளை புரிந்து கொள்ளவேண்டும் என்றால் முதலில் தொல்காப்பியத்தை படிக்க வேண்டும்.
487 காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்1
பாங்கொடு தழா அலுந் தோழியிற் புணர்வுமென்
றாங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு
மறையென மொழிதல் மறையோர் ஆறே.2
என் - னின். கைகோள் வகையிற் களவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்படலும் பாங்கற்கூட்டமும் தோழியிற் கூட்டமுமென்று சொல்லப்பட்ட நான்குவகையானும் அவற்றைச் சார்ந்துவருகின்ற கிளவியானும் வருவன களவென்று கூறுதல் வேதமறிவோர் நெறி என்றவாறு.
இதனுள் களவென்னாது மறையென்றதனான் இது தீமை பயக்குங் களவன்மை கொள்க.
இன் - ஆன் பொருள்பட வந்தது . ஒடு - எண்.
(174)
1.பாடும்.
2.கந்திருவ வழக்கம் மறையோர் ஒழுகிய நெறியது வாகலான் 'மறையோர் ஆறு' என்றான் என்பது. எனவே பாங்கனும் தோழியும் உணர்ந்த வழியும் அது மறையோர் வழித்து என்றவாறு. (தொல், பொருள், 498, பேரா.)
No comments:
Post a Comment