Wednesday, August 22, 2018

தாவு கொச்சகக் கலிப்பா -குலசேகரப் பெருமாள்



பின்னிட்ட சடையானும் பிரமனு மந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான் வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல் செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்

No comments:

Post a Comment