Wednesday, August 22, 2018

நரசிம்ம தாபினி...

கடலாகிய  வாழ்க்கையினை கடக்க பயந்துமே
திரளாகிய  தேவர்கள் அயனை  அடைந்தார்!


அருளாகிய அமுதத்தை தானும் உறைத்தான்
மருளாகிய பயத்தை போக்கும் ஒரு உபதேசம்!

பொருளாகிய ஆன்மாவை பற்றியும் சொல்லி
இருளாகிய அறியாமை போக்கி அருளினான் !

நரஹரியின் தனிப்பெருமை தானும் சொன்னான் !
நாராயணன் மகிமை அவனும் உறைத்தான்!

நரஹரியின் திருமந்திரம் அவனும் சொல்லி
அந்த மந்திரத்தின் விளக்கத்தையும்  தானே சொன்னான்!

நரசிம்மன் பெயரில் விளங்கும்  நூலாம் அதுவே
நரசிம்ம தாபினி என்ற திருப்பெயர் தானே!

நான்முகனார் தேவருக்கு எடுத்து சொன்ன
நரஹரியின் பெருமை கேளீர் நன்மதியோரே!

அனைத்துலகும் தேவர்கள் படைப்புக்கள் எல்லாம்
படைத்தழித்து காத்துயர்த்தி வளர்ப்பதனாலே!
அவனை உக்கிரன் என்று அழைப்பார்கள் அவனடியார்கள்!

அனைத்துலகும் தேவர்கள் படைப்புக்கள் எல்லாம்
படைத்துயர்த்தி தன்பாலீர்த்து  ஓய்வளித்துமே!
விளையாட  செய்வதனால் வீரன் என்பார்கள்!

எள்ளுக்குள் எண்ணெய் போல் தயிருக்குள் வெண்ணை போல்
மாமிசத்தில் கொழுப்பைபோல் உலகமெங்கும் வியாபித்து
இருப்பதனால் மஹாவிஷ்ணு ஆனான் நம்  நரஹரி தேவன்.

அனைத்துலகும் தேவர் ஜீவர் எல்லாப்படைப்பும்
அவனாலே பிரகாசித்து ஜொலிப்பதனாலே
ஜுவலாந்தம் என்ற நாமம் அவனுக்குண்டு !

ஐம்பொறிகள் ஏதுமின்றி அவன் அனைத்தும் செய்கின்றான்!
பேசி,பார்த்து, கேட்டு,சொல்லி அனைத்தும் செய்கின்றான்!
அதனாலே சர்வதோ முகம் என்ற திருநாமம் அவனுக்குண்டு!

உயிரினங்கள் அனைத்துக்குமே அரசன் சிம்மம்!
எனவே அரனும் அங்கு  நரஹரியாய் அவதரித்தானாம்!
அரியும் அரனும் ஆகிநின்ற பெருமையினாலே!
அவனை நரசிம்மம் என்று புகழும் உபநிடதங்கள்!

அனைத்துலகும் தேவர்களும் ஜீவர்களும்
யாரிக்கண்டு பீதியுற்று பயந்தோடினாரோ!
தீயும் காற்றும் சூரியனும் தேவர் தலைவனும்
யாருக்காஞ்சி தத்தம் பணியம் தாமும் செய்தாரோ
அவனைத்தான்  பீஷணம் என்று சொல்லும் அதர்வண வேதம்!

மங்கலமே வடிவாகி மங்களத்தை அருளி நித்தம்
மங்காமல் ப்ரிஅகாசிக்கும் காரணத்தால் ! அவனை
பத்ரம் என்ற நாமத்தால் சொல்லும் வேதங்கள்!
காதுகளால் கேட்பதுவும், கண்களாலே காண்பதுவும் மங்கலமாய் ஆகுக!
திடகாத்திரமான அங்கத்தோடு அனைவரும்  நீளாயுள் பெறுக !

அக்காலத்தில் ஆனாலும் காலத்தில் ஆனாலும் காலனுக்கே காலனவன்
மரணபயம் போக்கி நல்ல ஆயுளை தருவான்!
மருள் நீக்கி ஆன்ம அறிவை அள்ளித்தருவான்!
தன்னிழலால் சாவுநீக்கி அமரனாக்குவான்!
அதனால் மிருத்துயு மிருத்துயும் என்ற நாமம்  அவனைச்சொல்லும்.

இவ்வுலகம் தேவர்கள் ஜீவேகள் அனைவர்க்கும் முன்னுதித்து
ஒளிவடிவாய் தானும் நின்று உலகமெங்கும் பிரகாசிக்கும்
ஆன்மரூபி ஆகி நின்று என்னகத்துறையும் ஒளியும் ஆகி
நின்றதனால் அகமென்னும் திருநாமம் அவனை சொல்லும்!

எவனொருவன் இதை நூலை நன்கறிவானோ அவனும்
பிரம்மவாதி யாகி தன்னுள் நிலைத்திருப்பனே!

No comments:

Post a Comment